ரமழான் மாத தினசரி துஆக்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ரமழான் முதலாம் நாள் துஆ
اللّٰهُمَّ اجْعَلْ صِيامِى فِيهِ صِيامَ الصَّائِمِينَ
இறைவா! இம்மாதத்தில் எனது நோன்பை உண்மையான நோன்பாளிகளின் நோன்பாகவும்
وَقِيامِى فِيهِ قِيامَ الْقائِمِينَ
எனது இரவு வணக்கங்களை உண்மையான வணக்கவாளிகளின் வணக்கமாகவும் ஆக்குவாயாக!
وَنَبِّهْنِى فِيهِ عَنْ نَوْمَةِ الْغافِلِينَ
அதில் அலட்சியக்காரர்களின் தூக்கத்திலிருந்து என்னை விழிக்க வைப்பாயாக !
وَهَبْ لِى جُرْمِى فِيهِ يَا إِلٰهَ الْعالَمِينَ
உலகத்தாரின் இறைவனே! அதில் எனது பாவங்களை மன்னிப்பாயாக!
وَاعْفُ عَنِّى يَا عافِياً عَنِ الْمُجْرِمِينَ
பாவிகளை மன்னிப்பவனே! எனது தவறுகளையும் மன்னித்தருள்வாயாக!


ரமழான் இரண்டாம் நாள் துஆ
اللّٰهُمَّ قَرِّبْنِى فِيهِ إِلىٰ مَرْضاتِكَ
இறைவா! இம்மாதத்தில் உனது திருப்திக்கு அருகில் என்னை நெருங்கச் செய்வாயாக!
وَجَنِّبْنِى فِيهِ مِنْ سَخَطِكَ وَنَقِماتِكَ
உனது கோபத்திலும், தண்டனையிலும் இருந்து என்னை தூரமாக்குவாயாக!
وَوَفِّقْنِى فِيهِ لِقِراءَةِ آياتِكَ
இந்நாளில் உனது திருமறை வசனங்களை ஓதுகின்ற பாக்கியத்தையும் எனக்குத் தந்தருள்வாயாக!
بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
உனது கிருபையினால், கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே!.

 

ரமழான் மூன்றாம் நாள் ஓதும் துஆ
اللّهُمَّ ارْزُقْنِى فِيهِ الذِّهْنَ وَالتَّنْبِيهَ
இறைவா! இம்மாதத்தில் விழிப்புணர்வையும் நுட்ப அறிவினையும் தருவாயாக!
وَباعِدْنِى فِيهِ مِنَ السَّفاهَةِ وَالتَّمْوِيهِ
அறியாமையிலும் தவறுகளிலிருந்தும் என்னை தூரமாக்கிடுவாயாக!
وَاجْعَلْ لِى نَصِيباً مِنْ كُلِّ خَيْرٍ تُنْزِلُ فِيهِ
இந்நாளில் நீ இறக்கிவைக்கின்ற எல்லா நன்மைகளிலும் பங்காளியாக என்னையும் ஆக்கிவைப்பாயாக!
بِجُودِكَ يَا أَجْوَدَ الْأَجْوَدِينَ
உனது கொடையின் மூலம், கொடையாளர்களுக்கெல்லாம் பெரும் கொடையாளனே!

 

ரமழான் நான்காம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ قَوِّنِى فِيهِ عَلَىٰ إِقامَةِ أَمْرِكَ
இறைவா! இம்மாதத்தில் உனது கட்டளையை நிறைவேற்றும் சக்தியினை எனக்குத் தருவாயாக!
وَأَذِقْنِى فِيهِ حَلاوَةَ ذِكْرِكَ
உன்னை தியானிப்பதன் இன்பத்தினை எனக்கருள்வாயாக!
وَأَوْزِعْنِى فِيهِ لِأَداءِ شُكْرِكَ بِكَرَمِكَ
உனது சங்கையினாலும் கிருபையினாலும் உனக்கு நன்றிசெலுத்தும் தன்மையை எனக்குத் தருவாயாக!
وَاحْفَظْنِى فِيهِ بِحِفْظِكَ وَسِتْرِكَ
உனது பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் என்னைப் பாதுகாப்பாயாக!
يَا أَبْصَرَ النَّاظِرِينَ
கண்காணிப்பவர்களில் சிறந்த கண்காணிப்பாளனே!


ரமழான் ஐந்தாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُسْتَغْفِرِينَ
இறைவா! இம்மாதத்தில் என்னைப் பாவமன்னிப்புத் தேடுபவர்களில் இணைப்பாயாக!
وَاجْعَلْنِى فِيهِ مِنْ عِبادِكَ الصَّالِحِينَ الْقانِتِينَ
என்னை இம்மாதத்தில் இரவு வணக்கத்தில் ஈடுபடும் உனது நல்லடியார்களில் ஒருவனாகவும் ஆக்கிவிடுவாயாக!
وَاجْعَلْنِى فِيهِ مِنْ أَوْلِيائِكَ الْمُقَرَّبِينَ
என்னை இம்மாதத்தில் உனக்கு நெருக்கமான நேசர்களில் சேர்ப்பாயாக!

بِرَأْفَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
உனது கருணையின் மூலம்,
கருணையாளர்களுக்கெல்லாம் மிகக் கருணையாளனே!


ரமழான் ஆறாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ لَاتَخْذُلْنِى فِيهِ لِتَعَرُّضِ مَعْصِيَتِكَ
இறைவா! இம்மாதத்தில் உனக்கு மாறுசெய்யும் இழிநிலையில் என்னை விட்டுவிடாதே!
وَلَا تَضْرِبْنِى بِسِياطِ نَقِمَتِكَ
உனது தண்டனை எனும் சாட்டையால் என்னைத் தண்டித்துவிடாதே!
وَزَحْزِحْنِى فِيهِ مِنْ مُوجِباتِ سَخَطِكَ
இம்மாதத்தில் என்னை உனது கோபத்திலிருந்து தூரப்படுத்துவாயாக!
بِمَنِّكَ وَأَيادِيكَ يَا مُنْتَهىٰ رَغْبَةِ الرَّاغِبِينَ
உனது கருணையாளும் அருளினாலும் , ஆவல் கொண்டோரின் இறுதி இலட்சியமானவனே!


ரமழான் ஏழாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ أَعِنِّى فِيهِ عَلَىٰ صِيامِهِ وَقِيامِهِ
இறைவா! இம்மாதத்தில் நோன்பு நோற்கவும் இரவில் வணக்கம் புரியவும் எனக்கு உதவிசெய்வாயாக!

وَجَنِّبْنِى فِيهِ مِنْ هَفَواتِهِ وَآثامِهِ
இந்நாளில் கேளிகைகளிலிருந்தும் பாவச்செயல்களிலிருந்தும் என்னைத் தூரப்படுத்துவாயாக!

وَارْزُقْنِى فِيهِ ذِكْرَكَ بِدَوامِهِ
நிதமும் உன் நினைவிலிருக்க எனக்கு அருள்புரிவாயாக!

بِتَوْفِيقِكَ يَا هادِىَ الْمُضِلِّينَ
உன்னருளினால் , வழிதவரியவர்களை நேர்வழி காட்டுபவனே!


ரமழான் எட்டாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ ارْزُقْنِى فِيهِ رَحْمَةَ الْأَيْتامِ
இறைவா! இம்மாதத்தில் எனக்கு அருள் செய்வாயாக! அநாதைகளுக்கு அன்பு காட்டவும்
وَ إِطْعامَ الطَّعامِ
பசித்தவர்களுக்கு உணவளிக்கவும்
وَ إِفْشاءَ السَّلامِ
ஸலாத்தினைப் பரப்பவும்
وَصُحْبَةَ الْكِرامِ
கண்ணியவான்களோடு நல்லுறவு கொள்ளவும்

بِطَوْلِكَ يَا مَلْجَأَ الْآمِلِينَ
உன் ஆற்றலினால், எதிர்பார்ப்பாளர்களின் புகலிடம் ஆனவனே!

 

ரமழான் ஒன்பதாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ اجْعَلْ لِى فِيهِ نَصِيباً مِنْ رَحْمَتِكَ الْواسِعَةِ
இறைவா! இம்மாதத்தில் உன் விசாலமான அருளினை எனக்குத் தருவாயாக!

وَاهْدِنِى فِيهِ لِبَراهِينِكَ السّاطِعَةِ
இந்நாளில் உன் ஒளிமயமான அத்தாட்சியின் பக்கம் வழிநடத்துவாயாக!

وَخُذْ بِناصِيَتِى إِلىٰ مَرْضاتِكَ الْجامِعَةِ
உனது பரிபூரண திருப்பொருத்தத்தை அடையும் பாக்கியத்தைத் தருவாயாக!

بِمَحَبَّتِكَ يَا أَمَلَ الْمُشْتاقِينَ
உன் அன்பின் மூலம் , ஆசைகொண்டோரின் நம்பிக்கையானவனே!

 

ரமழான் பத்தாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُتَوَكِّلِينَ عَلَيْكَ
இறைவா! இம் மாதத்தில் உன் மீது நம்பிக்கை கொண்டு தங்களது விடயங்களை உன்னிடம் பொறுப்புச் சுமத்துபவர்களில் என்னையும் ஆக்கிவைப்பாயாக!

وَاجْعَلْنِى فِيهِ مِنَ الْفائِزِينَ لَدَيْكَ
உன்னிடத்தில் ஜெயம் பெற்றோரில் என்னையும் இணைப்பாயாக!

وَاجْعَلْنِى فِيهِ مِنَ الْمُقَرَّبِينَ إِلَيْكَ
உனக்கு நெருங்கிய நேசர்களில் என்னையும் சேர்ப்பாயாக!

بِإِحْسانِكَ يَا غايَةَ الطَّالِبِينَ
உனது தாராளத் தன்மையினைக் கொண்டு , தேடல் உடையோரின் இறுதி இலக்கானவனே!

 

ரமழான் பதினோராம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ حَبِّبْ إِلَىَّ فِيهِ الْإِحْسانَ
இறைவா! இம்மாதத்தில் நற்செயல்களின் மீது பற்றினை எனக்கு உண்டுபண்ணுவாயாக!
وَكَرِّهْ إِلَىَّ فِيهِ الْفُسُوقَ وَالْعِصْيانَ
இம்மாத்தில் பாவங்களையும் தீமைகளையும் நான் வெறுக்கும் படி செய்திடுவாயாக!

وَحَرِّمْ عَلَىَّ فِيهِ السَّخَطَ وَالنِّيرانَ
இம்மாதத்தில் உன் கோபத்தினையும் நரக நெருப்பினையும் என்னை விட்டுத் தடுத்திடுவாயாக!

بِعَوْنِكَ يَا غِياثَ الْمُسْتَغِيثِينَ
உன் உதவியின் மூலம் , அவலக்குரல் எழுப்புபவர்களுக்கு உதவுபவனே!

 

ரமழான் பன்னிரண்டாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ زَيِّنِّى فِيهِ بِالسِّتْرِ وَالْعَفافِ
இறைவா! இம்மாதத்தில் என்னை நல்லொழுக்கம் , நாணம் ஆகியவற்றின் மூலம் அழகுபடுத்துவாயாக!
وَاسْتُرْنِى فِيهِ بِلِباسِ الْقُنُوعِ وَالْكَفافِ
இம்மாதத்தில் மனநிறைவு மற்றும் திருப்தி எனும் ஆடைகளை எனக்கு அணிவிப்பாயக!
وَاحْمِلْنِى فِيهِ عَلَى الْعَدْلِ وَالْإِنْصافِ
இம்மாதத்தில் நீதியினையும் நேர்மையினையும் என்னை சுமக்கவைப்பாயாக!
وَآمِنِّى فِيهِ مِنْ كُلِّ مَا أَخافُ
இம்மாதத்தில் அனைத்து அச்சங்களிலிருந்தும் எனக்கு அபயமளிப்பாயாக!
بِعِصْمَتِكَ يَا عِصْمَةَ الْخائِفِينَ
உன் பாதுகாப்பின் மூலம் , அச்சம் கொண்டோருக்கு அபயமளிப்பவனே!


ரமழான் பதின்மூன்றாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ طَهِّرْنِى فِيهِ مِنَ الدَّنَسِ وَالْأَقْذارِ
இறைவா! இம்மாதத்தில் என்னை அசுத்தங்களிலும், அசிங்கங்களிலும் இருந்து தூய்மைப்படுத்துவாயாக!
وَصَبِّرْنِى فِيهِ عَلَىٰ كائِناتِ الْأَقْدارِ
இம்மாதத்தில் விரக்தியான நிகழ்வுகளில் எனக்கு பொறுமையினைத் தருவாயாக!
وَوَفِّقْنِى فِيهِ لِلتُّقىٰ وَصُحْبَةِ الْأَبْرارِ
மேலும், இறையச்சம் கொள்ளவும்
நல்லடியார்களோடு சகவாசம் கொள்ளவும் எனக்கு அருள்புரிவாயாக!
بِعَوْنِكَ يَا قُرَّةَ عَيْنِ الْمَساكِينِ
உன் உதவியினால் , எளியோரை மகிழ்விப்பவனே!

 

ரமழான் பதினான்காம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ لَاتُؤاخِذْنِى فِيهِ بِالْعَثَراتِ
இறைவா! இம் மாதத்தில் எனது தப்புக்களுக்காக என்னைத் தண்டிக்காதே!
وَأَقِلْنِى فِيهِ مِنَ الْخَطايا وَالْهَفَواتِ
இம்மாதத்தில் எனது பாவங்களையும் தவறுகளையும் மன்னிப்பாயாக!
وَلَا تَجْعَلْنِى فِيهِ غَرَضاً لِلْبَلايا وَالْآفاتِ
இம்மாதத்தில் சோதனைகளினதும் ஆபத்துக்களினதும் இலக்காக என்னை ஏற்படுத்திவிடாதே!
بِعِزَّتِكَ يَا عِزَّ الْمُسْلِمِينَ
உன் கண்ணியத்தினைக் கொண்டு ,தன்னை சரணடைந்தோரின் கண்ணியமானவனே!

 

ரமழான் பதினைந்தாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ ارْزُقْنِى فِيهِ طاعَةَ الْخاشِعِينَ
இறைவா! இம்மாதத்தில் பணிவச்சம் கொண்டோரின் அடிபணிதலை எனக்குத்தருவாயாக!
وَاشْرَحْ فِيهِ صَدْرِى بِإِنابَةِ الْمُخْبِتِينَ
இம்மாத்தில் உனக்கு அடிபணிந்து உன்பால் மீண்டோரின் இதய விசாலத்தைத் தருவாயாக!
بِأَمانِكَ يَا أَمانَ الْخائِفِينَ
உன் அபயத்தின் கிருபையால் , அச்சம் கொண்டோருக்கு அபயமளிப்பவனே!

 

ரமழான் பதினாறாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ وَفِّقْنِى فِيهِ لِمُوافَقَةِ الْأَبْرارِ
இறைவா!இம்மாதத்தில் நல்லோரின் சகவாசத்தினைப் பெற்றுத்தருவாயாக!
وَجَنِّبْنِى فِيهِ مُرافَقَةَ الْأَشْرارِ
தீயோரின் உறவுகளிலிருந்து தூரமாக்குவாயாக!
وَآوِنِى فِيهِ بِرَحْمَتِكَ إِلىٰ دارِ الْقَرارِ
இம்மாதத்தில் உன் கருணையால் அமைதியான நிரந்தர வசிப்பிடத்தில் எனக்கு இடம் தருவாயாக!
بِإِلٰهِيَّتِكَ يَا إِلٰهَ الْعالَمِينَ
உன் வணங்கப்படும் தன்மையினைக் கொண்டு, அகிலத்தாரின் இறையோனே!

 

ரமழான் பதினேழாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ اهْدِنِى فِيهِ لِصالِحِ الْأَعْمالِ
இறைவா! இம்மாத்தில் நல்லமல்கள் செய்வதற்கு எனக்கு வழிகாட்டுவாயாக!
وَاقْضِ لِى فِيهِ الْحَوائِجَ وَالْآمالَ
இம்மாதத்தில் எனது தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றிவைப்பாயாக!
يَا مَنْ لا يَحْتاجُ إِلَى التَّفْسِيرِ وَالسُّؤالِ
தெளிவுபடுத்துவதற்கும் வினவுவதற்கும் தேவையற்றவனே!
يَا عالِماً بِما فِى صُدُورِ الْعالَمِينَ
உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவனே!
صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَآلِهِ الطَّاهِرِينَ
உனது தூதர் முகம்மது (ஸல்)அவர்கள் மீதும், அவரது பரிசுத்தமான குடும்பத்தின் மீதும் ஸலவாத் உரைப்பாயாக!

 

ரமழான் பதினெட்டாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ نَبِّهْنِى فِيهِ لِبَرَكاتِ أَسْحارِهِ
இறைவா! இம்மாதத்தில் ஸஹர் நேரத்தின் மகிமையினை எனக்கு அறியவைப்பாயாக!
وَنَوِّرْ فِيهِ قَلْبِى بِضِياءِ أَنْوارِهِ
இம்மாதத்தில் எனது உள்ளத்தினை அதன் ஒளியினைக் கொண்டு பிரகாசிக்கவைப்பாயாக!
وَخُذْ بِكُلِّ أَعْضائِى إِلَى اتِّباعِ آثارِهِ
எனது அனைத்து உடல் அங்கங்களையும் அதன் பிரதிபலிப்பினை பின்பற்றவைப்பாயாக!
بِنُورِكَ يَا مُنَوِّرَ قُلُوبِ الْعارِفِينَ
உன் ஒளியினைக் கொண்டு, ஞானிகளின் உள்ளங்களை ஒளிமயமாக்குபவனே!

 

ரமழான் பத்தொன்பதாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ وَفِّرْ فِيهِ حَظِّى مِنْ بَرَكاتِهِ
இறைவா! இம்மாதத்தில் அதன் பூரண அருளினை அடையும் பாக்கியத்தைத் தருவாயாக!
وَسَهِّلْ سَبِيلِى إِلىٰ خَيْراتِهِ
அதன் நலவுகளை அடைய எனது வழிகளை இலகுபடுத்துவாயாக!
وَلَا تَحْرِمْنِى قَبُولَ حَسَناتِهِ
அதன் நலவுகளை பெற பாக்கியமற்றவனாக என்னை மாற்றிவிடாதே!
يَا هادِياً إِلَى الْحَقِّ الْمُبِين
தெளிவான உண்மையின் பக்கம் நேர்வழிகாட்டுபவனே!

 

ரமழான் இருபதாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ افْتَحْ لِى فِيهِ أَبْوابَ الْجِنانِ
இறைவா! இம்மாதத்தில் சுவனங்களின் வாயல்களை எனக்குத் திறந்துவிடுவாயாக!
وَأَغْلِقْ عَنِّى فِيهِ أَبْوابَ النِّيرانِ
இம்மாதத்தில் நரகங்களின் கதவுகளை என்மீது மூடிவிடுவாயாக!
وَوَفِّقْنِى فِيهِ لِتِلاوَةِ الْقُرْآنِ
இம்மாதத்தில் அல்-குர்ஆனை ஓதும் பாக்கியத்தை எனக்குத் தருவாயாக!
يَا مُنْزِلَ السَّكِينَةِ فِى قُلُوبِ الْمُؤْمِنِينَ
நம்பிக்கைகொண்டோரின் உள்ளங்களில் அமைதியினை இறக்கிவைப்பவனே!


ரமழான் இருபத்தியோராம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ اجْعَلْ لِى فِيهِ إِلىٰ مَرْضاتِكَ دَلِيلاً
இறைவா! இம்மாதத்தில் உனது திருப்பொருத்தத்தை அடைவதற்கு எனக்கு வழிகாட்டுவாயாக!
وَلَا تَجْعَلْ لِلشَّيْطانِ فِيهِ عَلَىَّ سَبِيلاً
இம்மாதத்தில் என்னை ஆக்கிரமிக்கும் வழியினை சைத்தானுக்கு கொடுத்துவிடாதே!
وَاجْعَلِ الْجَنَّةَ لِى مَنْزِلاً وَمَقِيلاً
எனது இறுதி வதிவிடமாக சுவர்கத்தினை ஆக்கி அருள்வாயாக!
يَا قاضِىَ حَوائِجِ الطَّالِبِينَ
கேட்போரின் தேவைகளை நிறைவேற்றிவைப்பவனே!


ரமழான் இருபத்திரெண்டாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ افْتَحْ لِى فِيهِ أَبْوابَ فَضْلِكَ
இறைவா! இம்மாதத்தில் உனது நற்பேறுகளின் கதவுகளை எனக்குத் திறந்துவிடுவாயாக!
وَأَنْزِلْ عَلَىَّ فِيهِ بَرَكاتِكَ
இம்மாதத்தில் உனது அருள்களை என்மீது இறக்கிவைப்பாயாக!
وَوَفِّقْنِى فِيهِ لِمُوجِباتِ مَرْضاتِكَ
இம்மாதத்தில் உன் திருப்பொருத்தத்தினைப் பெரும் பாக்கியத்தினைத் தருவாயாக!
وَ أَسْكِنِّى فِيهِ بُحْبُوحاتِ جَنَّاتِكَ
இம்மாதத்தில் உனது சுவனங்களின் சூழலில் என்னை வாழவைப்பாயாக!
يَا مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ
அல்லல்படுவோரின் அழைப்பினை செவிமடுப்பவனே!

 

ரமழான் இருபத்திமூன்றாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ اغْسِلْنِى فِيهِ مِنَ الذُّنُوبِ
இறைவா! இம்மாதத்தில் பாவங்களைவிட்டும் என்னை சுத்தப்படுத்துவாயாக!
وَطَهِّرْنِى فِيهِ مِنَ الْعُيُوبِ
இம்மாதத்தில் குறைகளைவிட்டும் என்னை தூய்மைப்படுத்திவிடுவாயாக!
وَامْتَحِنْ قَلْبِى فِيهِ بِتَقْوَى الْقُلُوبِ
இம்மாதத்தில் என் உள்ளத்தினை இறையச்சத்தினைக் கொண்ட உள்ளமாக சோதிப்பாயாக!
يَا مُقِيلَ عَثَراتِ الْمُذْنِبِينَ
பாவிகளின் செயல்களை மன்னிப்பவனே!

 

ரமழான் இருபத்திநான்காம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ إِنِّى أَسْأَلُكَ فِيهِ مَا يُرْضِيكَ
இறைவா! இம்மாதத்தில் உன்னை மகிழ்விக்கின்றவற்றை உன்னிடம் நான் கேட்கின்றேன்.
وَأَعُوذُ بِكَ مِمَّا يُؤْذِيكَ
உன்னை வேதனைப்படுத்தும் விடயங்களைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
وَأَسْأَلُكَ التَّوْفِيقَ فِيهِ لِأَنْ أُطِيعَكَ وَلَا أَعْصِيَكَ
இம்மாதத்தில் உன்னைவழிப்படவும் உன்கட்டளைகளுக்கு மாறுசெய்யாமல் இருக்கவும் உனது கிருபையை உன்னிடம் கேட்கின்றேன்
يَا جَوادَ السَّائِلِينَ
கேட்போருக்கு வாரிவழங்குபவனே!

 

ரமழான் இருபத்தைந்தாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ اجْعَلْنِى فِيهِ مُحِبّاً لِأَوْلِيائِكَ
இறைவா! இம்மாதத்தில் உனது நேசர்களை நேசிப்பவனாக என்னை ஆக்குவாயாக!
وَمُعادِياً لِأَعْدائِكَ
உனது எதிரிகளை விரோதிகளாக கருதுபவனாகவும்
مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ أَنْبِيائِكَ
உனது இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையினைப் பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக!
يَا عاصِمَ قُلُوبِ النَّبِيِّينَ
நபிமார்களின் உள்ளங்களை பாதுகாப்பவனே!

 

ரமழான் இருபத்தாறாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ اجْعَلْ سَعْيِى فِيهِ مَشْكُوراً
இறைவா! இம்மாதத்தில் எனது செயல்களை நற்பயனுள்ளதாக ஆக்குவாயாக!
وَذَنْبِى فِيهِ مَغْفُوراً
இம்மாதத்தில் எனது பாவங்களை மன்னிக்கப்பட்டதாகவும்
وَعَمَلِى فِيهِ مَقْبُولاً
இம்மாதத்தில் எனது செயல்களை அங்கீகரிக்கப்பட்டதாகவும்
وَعَيْبِى فِيهِ مَسْتُوراً
இம்மாதத்தில் எனது குறைகளை மறைக்கப்பட்டதாகவும் ஆக்குவாயாக!
يَا أَسْمَعَ السَّامِعِينَ
செவிமடுப்போரில் மிகவும் செவிமடுப்பவனே!

 


ரமழான் இருபத்தியேழாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ ارْزُقْنِى فِيهِ فَضْلَ لَيْلَةِ الْقَدْرِ
இறைவா! இம்மாதத்தில் லைலத்துல் கத்ரின் சிறப்பினை எனக்குத் தந்தருள்வாயாக!
وَصَيِّرْ أُمُورِى فِيهِ مِنَ الْعُسْرِ إِلَى الْيُسْرِ
இம்மாதத்தில் எனது விடயங்களை கஷ்டத்திலிருந்து எளிதாக மாற்றிவிடுவாயாக!
وَاقْبَلْ مَعاذِيرِى
எனது பாவமன்னிப்பினை அங்கீகரிப்பாயாக!
وَحُطَّ عَنِّى الذَّنْبَ وَالْوِزْرَ
எனது பாவச் சுமைகளை என்னைவிட்டும் இறக்கிவைப்பாயாக!
يَا رَؤُوفاً بِعِبادِهِ الصَّالِحِينَ
நல்லடியார்களின் மீது கருணைகொண்டவனே!


ரமழான் இருபத்தியெட்டாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ وَفِّرْ حَظِّى فِيهِ مِنَ النَّوافِلِ
இறைவா! இம்மாதத்தில் முஸ்தஹப்பான வணக்கங்களில் ஈடுபடும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
وَأَكْرِمْنِى فِيهِ بِإِحْضارِ الْمَسائِلِ
இம்மாதத்தில் எனது தேவைகளை நிறைவேற்றி என்னை சங்கைப்படுத்துவாயாக!
وَقَرِّبْ فِيهِ وَسِيلَتِى إِلَيْكَ مِنْ بَيْنِ الْوَسائِلِ
இம்மாதத்தில் உன்னை நெருங்கும் வழிகளில் எனது வழியினை நெருக்கமாக்தித் தருவாயாக!
يَا مَنْ لَا يَشْغَلُهُ إِلْحاحُ الْمُلِحِّينَ
வற்புறுத்திக்கேட்பதினால் சலிப்படையாதவனே!


ரமழான் இருபத்தொன்பதாம் நாள் ஓதும் துஆ
اللّٰهُمَّ غَشِّنِى فِيهِ بِالرَّحْمَةِ
இறைவா! இம்மாதத்தில் உன் அன்பில் என்னை மூழ்கடித்துவிடுவாயாக!
وَارْزُقْنِى فِيهِ التَّوْفِيقَ وَالْعِصْمَةَ
இம்மாதத்தில் உன் பாதுகாப்பினையும் அருளினையும் எனக்களிப்பாயாக!
وَطَهِّرْ قَلْبِى مِنْ غَياهِبِ التُّهَمَةِ
அவதூறின் இருளிலிருந்து என் உள்ளத்தினை தூய்மைப்படுத்துவாயாக!
يَا رَحِيماً بِعِبادِهِ الْمُؤْمِنِينَ
நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள் மீது நேசம் கொண்டவனே!


ரமழான் முப்பதாம் நாள் ஓதும் துஆ

اللّٰهُمَّ اجْعَلْ صِيامِى فِيهِ بِالشُّكْرِ وَالْقَبُولِ
இறைவா! இம்மாதத்தில் எனது நோன்பினை நற்கூலிக்குரியதாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஆக்குவாயாக!
عَلَىٰ مَا تَرْضاهُ وَيَرْضاهُ الرَّسُولُ
நீயும் உன் தூதரும் பொருந்திக்கொண்ட நோன்பாக ஆக்குவாயாக!
مُحْكَمَةً فُرُوعُهُ بِالْأُصُولِ
அதன் துணையம்சங்கள் அதன் அடிப்படைகளால் பலம் பெற்றிருக்கும் நிலையை ஏற்படுத்தியருள்வாயாக!
بِحَقِّ سَيِّدِنا مُحَمَّدٍ وَآلِهِ الطَّاهِرِينَ
எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களினதும் அவரது பரிசுத்தக் குடும்பத்தினதும் பொருட்டினால்
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعالَمِينَ
அனைத்துப் புகழும் உலகத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே!

 

Publications