துஆ ஸஹ்ர் : துஆ பஹா

துஆ ஸஹ்ர் : துஆ பஹா
இந்த துஆ இறைவனுடைய பண்புகளை உள்ளடக்கியுள்ள ஓர் துஆவாகும். மனிதன் இறைவனை அடைவதற்கான வழிகளில் ஒன்றாக இந்த துஆ உள்ளது. இந்த துஆவின் பொருளினை அறிந்து ஓதுவதால் ஏகத்துவத்திலும் இறைவனது ஏனைய பண்புகளிலும் அதீத ஈர்ப்பும் நம்பிக்கையும் ஏற்படுகின்றது.
இந்த துஆவின் மாண்பு பற்றி இமாம் ரிழா  அவர்கள் , இவ்வாறு அறிவிக்கின்றார்கள் : ' இமாம் பாக்கிர்  அவர்கள் ரமழான் மாதத்தின் ஸஹர்களில் இந்த துஆவினை ஓதிவந்துள்ளார்கள். மேலும் இந்த துஆவில் இறைவனது மிகவும் கண்ணியம் வாய்ந்த பெயர் உள்ளதாகவும் , அதன் காரணமாக எமது பிரார்த்தனை மிகவும் துரிதமாக அங்கீகரிக்கப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்கள்.அந்த துஆ இதுவாகும்:

اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ بَهائِكَ بِأَبْهاهُ،
இறைவா! அனைத்து ஒளியிலும் ஒளிமையமான உனது ஒளியினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன் ,
وَكُلُّ بَهائِكَ بَهِيُّ،
உனது அனைத்து ஜோதியும் ஒளிமையமானது,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِبَهائِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து ஒளிமையத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ جَمالِكَ بِأَجْمَلِهِ،
இறைவா! அனைத்து அழகிலும் மிகவும் அழகான உனது அழகினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ جَمالِكَ جَمِيلٌ،
உனது அனைத்து அழகும் மிகவும் அழகானவையாகும்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِجَمالِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து பரிபூரண அழகினைக் கொண்டும் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ جَلالِكَ بِأَجَلِّهِ،
இறைவா! அனைத்து உயர்விலும் உயர்வான உனது அதி உயர்வைக் கொண்டு கேட்கின்றேன்,
وَكُلُّ جَلالِكَ جَلِيلٌ،
உனது அனைத்து மேன்மையும் மிகப் பெரியதாகும்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِجَلالِكَ كُلِّهِ،
இறைவா! உனது பரிபூரண உயர்வைக்கொண்டு கேட்கின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ عَظَمَتِكَ بِأَعْظَمِها،
இறைவா! அனைத்து கண்ணியத்திலும் கண்ணிமான உனது கண்ணியத்தினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,

وَكُلُّ عَظَمَتِكَ عَظِيمَةٌ،
உனது அனைத்து கண்ணியமும் மிகவும் கண்ணியமிக்கது,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِعَظَمِتِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து கண்ணியத்தினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ نُورِكَ بِأَنْوَرِهِ،
இறைவா! அனைத்து பிரகாசத்திலும் பிரகாசமான உனது பிரகாசத்தைக் கொண்டு வேண்டுகின்றேன்,
وَكُلُّ نُورِكَ نَيِّرٌ،
உனது அனைத்து ஒளிகளும் மிக ஒளிமையமானது,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِنُورِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து ஒளியினைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ رَحْمَتِكَ بِأَوْسَعِها،
இறைவா! மிகவும் விசாலமான உனது கருணையைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்,
وَكُلُّ رَحْمَتِكَ وَاسِعِةٌ،
உனது அனைத்து கருனையும் விசாலமானது,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து கருணையைக் கொண்டும் கேட்கின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ كَلِماتِكَ بِأَتَمِّها،
இறைவா! பரிபூரணமான உனது வார்த்தைகளைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்,
وَكُلُّ كَلِماتِكَ تامَّةٌ،
உனது அனைத்து வார்த்தைகளும் பரிபூரணமானவையாகும்,

اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِكَلِماتِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து வார்த்தைகளைக் கொண்டும் உன்னிடம் கேட்கின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ كَمالِكَ بِأَكْمَلِهِ،
இறைவா! அனைத்து பரிபூரணத்திலும் பரிபூரணமான உனது பரிபூரணத்தைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ كَمالِكَ كامِلٌ،
உனது அனைத்து பூரணமும் பரிபூரணமானவையாகும்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِكَمالِكَ كُلُّهِ،
இறைவா! உனது அனைத்து பரிபூரணத்தினைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ أَسْمائِكَ بِأَكْبَرِها،
இறைவா! மிகவும் மேன்னை நிறைந்த உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ أَسْمائِكَ كَبِيرَةٌ،
உனது அனைத்து திருநாமங்களும் மிகவும் மேன்மையானதாகும்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَسْمائِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து திருநாமங்களைக் கொண்டும் உன்னிடம் கேட்கின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ عِزَّتِكَ بِأَعَزِّها،
இறைவா! அனைத்து கண்ணியத்திலும் மிகவும் கண்ணியமிக்க உனது அந்தஸ்தினைக்; கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ عِزَّتكَ عَزِيزَةٌ،
உனது அனைத்து அந்தஸ்தும் மிகவும் உயர்வுமிக்கதாகும்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِعِزَّتِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து உயர்வான அந்தஸ்துக்களைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ مَشِيَّتِكَ بِأَمْضاها،
இறைவா! நிறைவேற்றப்பட்ட உனது நாட்டங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلٌ مَشِيَّتِكَ ماضِيَةٌ،
உனது நாட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டவையாகும்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمَشِيَّتِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து நாட்டங்களைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ قُدْرَتِكَ بِالقُدْرَةِ الَّتِي اسْتَطَلْتَ بِها عَلى كُلِّ شَيْ‏ءٍ،
இறைவா! அனைத்தினையும் உனது ஆற்றலினால் சூழ்ந்து கொண்டுள்ள உனது சக்தியினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ قُدْرَتِكَ مُسْتَطِيلَةٌ،
உனது அனைத்து சக்தியும் அனைத்தையும் சூழ்ந்து கொண்டுள்ளன,
اللّهم إِنّي أسألُك بقدرتِك كلِّها،
இறைவா! உனது அனைத்து சக்தியினைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ عِلْمِكَ بِأَنْفَذِهِ،
இறைவா! மிகவும் பயன்மிக்க உனது அறிவினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ عِلْمِكَ نافِذٌ،
உனது அனைத்து அறிவும் பயன்மிக்கதாகும்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِعِلْمِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து அறிவினைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ قَوْلِكَ بِأَرْضاهُ،
இறைவா! மிகவும் திருப்திகரமான உனது பேச்சினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ قَوْلِكَ رَضِيُّ،
உனது அனைத்து பேச்சுக்களும் திருப்தியானவையே,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِقَوْلِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து பேச்சுக்களைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ مَسائِلِكَ بِأَحَبِّها إِلَيْكَ،
இறைவா! உனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய விடயங்களைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்,
وَكُلُّها إِلَيْكَ حَبِيبَةٌ،
அவை அனைத்தும் உனது விருப்புக்குரியவையாகும்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمَسائِلِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து விடயங்களைக் கொண்டும் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ شَرَفِكَ بِأَشْرَفِهِ،
இறைவா! மிகவும் உயர்வு மிக்க உனது சிறப்பினைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்,
وَكُلُّ شَرَفِكَ شَرِيفٌ،
உனது அனைத்து சிறப்புகளும் உயர்வுமிக்கதாகும்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِشَرَفِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து சிறப்பினைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ سُلْطانِكَ بِأَدْوَمِهِ،
இறைவா! என்றும் நிலையான உனது ஆட்சியினைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ سُلْطانِكَ دائِمٌ،
உனது அனைத்து ஆட்சி அதிகாரமும் நிரந்தரமானதாகும்,

اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِسُلْطانِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து ஆட்சி அதிகாரத்தினைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ مُلْكِكَ بِأَفْخَرِهِ،
இறைவா! மிகவும் பெருமைமிக்க உனது அரசாட்சியைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ مُلْكِكَ فاخِرٌ،
உனது அனைத்து அரசாட்சியும் பெருமைமிக்கதாகும்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمُلْكِكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து அரசாட்சியைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ عُلُوِّكَ بِأَعْلاهُ،
இறைவா! மிகவும் உயர்வு நிலையான உனது தகுதிநிலையைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ عُلُوِّكَ عالٍ،
உனது அனைத்து தகுதிநிலையும் உயர்வுமிக்கதாகும்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِعُلُوِّكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து தகுதிநிலைகளைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ مَنِّكَ بِأَقْدَمِهِ،
இறைவா! மிகவும் பழமைவாய்ந்த(ஆதியற்ற) உனது அருட்கொடைகளைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்,
وَكُلُّ مَنِّكَ قَدِيمٌ،
உனது அனைத்து அருட்கொடைகளும் ஆதியற்ற பழமைமிக்கதாகும்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمَنِّكَ كُلِّهِ،
இறைவா! உனது அனைத்து அருட்கொடைகளைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ آياتِكَ بِأَكْرَمِها،
இறைவா! மிகவும் சங்கை நிறைந்த உனது அத்தாட்சிகளைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَكُلُّ آياتِكَ كَرِيمَةٌ،
உனது அனைத்து அத்தாட்சிகளும் மிகவும் சங்கை நிறைந்ததாகும்,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِآياتِكَ كُلِّها،
இறைவா! உனது அனைத்து அத்தாட்சிகளைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي‌أَسْأَلُكَ بِما أَنْتَ فِيهِ مِنَ الشَّأْنِ وَالجَبَرُوتِ،
இறைவா! நீ கொண்டுள்ள உனது அந்தஸ்தினையும் உனது உயர்வையும் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
وَأَسْأَلُكَ بِكُلِّ شَأْنٍ وَحْدَهُ وجَبَرُوتٍ وَحْدَها،
உனக்கு தனித்துவமிக்க அனைத்து அந்தஸ்தினையும் உயர்வையும் கொண்டு வேண்டுகின்றேன்,
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِما تُجِيبُنِي حِينَ أَسْأَلُكَ، فَأَجِبْنِي يااَللهُ
இறைவா! உன்னிடம் கேட்கின்ற போது எனக்கு பதிலளிக்குமாறு உன்னிடம் வேண்டுகின்றேன், என் இறைவா! எனக்கு பதிலளிப்பாயாக!

இதன் பிறகு உங்களுக்கு என்ன தேவையுள்ளதோ அதனை இறைவனிடம் கேட்டுக்கொள்ளுங்கள்ளூ இன்ஷாஅல்லாஹ் அவை நிறைவேற்றப்படும்.

Publications