துஆ ஜௌஷன் கபீர்


بسم الله الرحمن الرحيم

துஆ ஜௌஷன் கபீர்

 

இப்பிரார்த்தனையினை இமாம் ஸைனுல்ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது தந்தை இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்தும், அவர் அதனை தனது பாட்டனார் நபிகள் நாயகம்  அவர்களிடமிருந்தும் அறிவிப்புச் செய்கின்றார்கள். இந்த துஆவினைப் பற்றி கூறும் போது, ஒரு யுத்த களத்தில் நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் மிகவும் பாரமான ஓர் கவசத்தினை அணிந்திருந்தார்கள். அந்தக் கவசம் நபியவர்களை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தது. அப்போது நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் இறைவனிடம் பிரார்த்திக்க, இறை தூதுவர் ஹஸ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடம் வந்து, இவ்வாறு கூறினார்கள்: ' இறைவன் உங்களுக்கு ஸலாம் உரைத்தான்.மேலும் , இந்த பாரமான கவசத்தினை கழட்டுமாறும், அதற்கீடாக இந்த துஆவினை ஓதுமாறும், அது உமக்கும் உமது சமூகத்திற்கும் பாதுகாப்பு கவசமாக அமையும் என்றும் கூறினான்' என்றார்கள். பிறகு இப்பிரார்த்தனையின் பல சிறப்புக்களை அவர்கள் கூறத் தொடங்கினார்கள். அவற்றில் 'யார் வீட்டை விட்டு வெளியேறும் போது, அல்லது அதனை தன்னோடு வைத்திருந்தால் (தனதாத்மாவில் அதனை ஒன்றரைக் கழந்திருந்தால்) அவர் சுவனவாசியாவார். இறைவன் அவர் நல்லமல்கள் புரிவதற்கு அருள்புரிகின்றான். இது பல நோய்க்கான நிவாரணியாகவும், பல நற்கூலிகளையும், ஆன்மீக ரீதியான பல பயன்களையும் கொண்டுள்ளது'.
இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் 'எனது தந்தை இப்பிரார்த்தனையினை மனனமிடும்படி எனக்கு பரிந்துரைத்தார்கள்.மேலும் என்னிடம் அவரது கபனில் இதனை எழுதும் படியும் கூறினார்கள். இப்பிரார்த்தனையினை எனது குடும்பத்திற்கு கற்றுக்கொடுத்து , அதனை அதிகமாக ஓதும் படி அவர்களை ஊக்கப்படுத்துமாறும் கூறினார்கள்'.

சில குறிப்புக்கள்:
1. ஹதீஸில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் கபனில் துஆ ஜௌசன் கபீரினை எழுதுவது முஸ்தஹப்பாகும்.
2. அல்லாமா மஜ்லிஸி அவர்கள் , தனது ஷாதுல் மஆத் எனும் நூலில் இப்பிரார்த்தனையினை லைலத்துல் கத்ர் இரவுகளில் செய்யும் ஓர் அமலாக குறிப்பிட்டுள்ளார்கள். ஹதீஸ்களின் பிரகாரம் புனித ரமழான் மாதத்தில் இப்பிரார்த்தனையினை மூன்று முறை ஓதவேண்டும்ளூ குறைந்தது ஒரு முறையாவது ரமழானில் ஓத வேண்டும்.
3. இப்பிரார்த்தனை நூறு அடிகளைக் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு அடியும் இறைவனது பத்து திருநாமங்களைக் கொண்டுள்ளது என்பதும் , மொத்தமாக இறைவனது ஆயிரம் திருப்பெயர்களை கொண்டுள்ளது என்பதும் பிரபல்யமான கூற்றாகும். ஆனால், இதில் ஆயிரத்தொரு இறைதிருநாமங்கள் உண்டு ளூ ஐம்பத்தி ஐந்தாம் அடி பதினொறு திருநாமங்களைக் கொண்டுள்ளது.
4. துஆவின் ஒவ்வொரு அடியும் முடிவடைந்ததும் இறைவனிடம் நரகத்தினை விட்டுப் பாதுகாக்கும் படி கூறும் பொருளுடைய கீழ்வரும் துஆவினை ஓத வேண்டும்.

سُبْحانَكَ يا لا اِلـهَ إلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ
(இறைவா! ) நீ தூய்மையானவன் உன்னையன்றி வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை;! எனக்கு அபயமளிப்பாயாக! எனக்கு அபயமளிப்பாயாகாயாக! , என் இரட்சகனே! நரக நெருப்பிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக!

(1)اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا اَللهُ يا رَحْمنُ يا رَحيمُ يا كَريمُ يا مُقيمُ يا عَظيمُ يا قَديمُ يا عَليمُ يا حَليمُ يا حَكيمُ
அல்லாஹ்வே! கருணையாளனே! அன்பாளனே! பெருந்தன்மைமிக்கவனே! நிலையானவனே! மேன்மைமிக்கவனே! தொன்மையானவனே! அனைத்தும் அறிந்தவனே! பொறுமையாளனே! நுட்பமிக்கவனே!

سُبْحانَكَ يا لا اِلـهَ إلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ
நீ தூய்மையானவன் உன்னையன்றி வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை;! எனக்கு அபயமளிப்பாயாக! எனக்கு அபயமளிப்பாயாகாயாக! , என் இரட்சகனே! நரக நெருப்பிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக!

(2) يا سَيِّدَ السّاداتِ يا مُجيبَ الدَّعَواتِ
தலைவர்களுக்கெல்லாம் தலைமையானவனே! பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவனே!
يا رافِعَ الدَّرَجاتِ يا وَلِيَّ الْحَسَناتِ
அந்தஸ்துக்களை உயர்த்துபவனே! நலவுகளுக்கு சொந்தக்காரனே!
يا غافِرَ الْخَطيئاتِ يا مُعْطِيَ الْمَسْأَلاتِ
தவறுகளை மன்னிப்பவனே! கேட்பவற்றை தருபவனே!
يا قابِلَ التَّوْباتِ يا سامِعَ الْاَصْواتِ
பாவமன்னிப்பினை ஏற்றுக்கொள்பவனே! சப்தங்களை செவிமடுப்பவனே!
يا عالِمَ الْخَفِيّاتِ يا دافِعَ الْبَلِيّاتِ
மறைவானவற்றை அறிபவனே! தீங்குகளை தடுப்பவனே!

(3) يا خَيْرَ الْغافِرينَ يا خَيْرَ الْفاتِحينَ
மன்னிப்பவர்களில் மிகவும் சிறந்தவனே! கஷ்டங்களை போக்குவதில் மிகவும் சிறந்;தவனே!
يا خَيْرَ النّاصِرينَ يا خَيْرَ الْحاكِمينَ
உதவியாளர்களில் மிகவும் சிறந்;தவனே! தீர்ப்பு வழங்குவதில் மிகவும் சிறந்;தவனே!
يا خَيْرَ الرّازِقينَ يا خَيْرَ الْوارِثينَ
உணவளிப்பவர்களில் மிகவும் சிறந்;தவனே! வாரிசுகளில் மிகவும் சிறந்;தவனே!

يا خَيْرَ الْحامِدينَ يا خَيْرَ الذّاكِرينَ
புகழ்வோரில் மிகவும் சிறந்;தவனே! ஞாபகிப்போரில் மிகவும் சிறந்;தவனே!
يا خَيْرَ الْمُنْزِلينَ يا خَيْرَ الْمُحْسِنينَ
இறக்கிவைப்போர்களில் மிகவும் சிறந்;தவனே! நலவு செய்போரில் மிகவும் சிறந்;தவனே!

(4) يا مَنْ لَهُ الْعِزَّةُ وَالْجَمالُ يا مَنْ لَهُ الْقُدْرَةُ وَالْكَمالُ
கண்ணியத்திற்கம் அழகிற்கும் உரித்தானவனே! ஆற்றலுக்கும் பரிபூரணத்திற்கும் உரியவனே!
يا مَنْ لَهُ الْمُلْكُ وَالْجَلالُ يا مَنْ هُوَ الْكَبيرُ الْمُتَعالُ
ஆட்சிக்கும் உயர்விற்கும் உரியவனே! உயர்வான அந்தஸ்திற்கு உரியவனே!
يا مُنْشِىءَ الْسَّحابِ الثِّقالِ يا مَنْ هُوَ شَديدُ الْمِحالِ
(மழைதரும்)கனமான மேகங்களை உருவாக்குபவனே! கடுமையாக பழிதீர்ப்பவனே!
يا مَنْ هُوَ سَريعُ الْحِسابِ يا مَنْ هُوَ شَديدُ الْعِقابِ
துரிதமான கேள்வி கணக்கு கேட்பவனே! கடுமையாக தண்டனை வழங்குபவனே!
يا مَنْ عِنْدَهُ حُسْنُ الثَّوابِ يا مَنْ عِنْدَهُ اُمُّ الْكِتابِ
அழகிய கூலிகளை கொண்டுள்ளவனே! மூல நூலைக் கொண்டுள்ளவனே!

(5)اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا حَنّانُ يا مَنّانُ يا دَيّانُ يا بُرْهانُ يا سُلْطانُ يا رِضْوانُ يا غُفْرانُ يا سُبْحانُ يا مُسْتَعانُ يا ذَا الْمَنِّ وَالْبَيانِ
கிருபையாளனே! அருள்புரிபவனே! மறுமைநாளில் தீர்ப்பளிப்பவனே! வழிகாட்டுபவனே! ஆட்சியாளனே! பொருந்திக்கொள்பவனே! , அதிகம் மன்னிப்பவனே! துதிசெய்யப்படுபவனே! உதவியாளனே! அருட்கொடைக்கும் தெளிவான வார்த்தைகளுக்கும் உரிமையாளனே!

(6) يا مَنْ تَواضَعَ كُلُّ شَيْء لِعَظَمَتِهِ يا مَنِ اسْتَسْلَمَ كُلُّ شَيْء لِقُدْرَتِهِ
அவனது மகத்துவத்திற்கு முன்னால் அனைத்தும் அடிபணிந்துள்ள அத்தகைய(இறை)வனே!! அவனது சக்திக்கு முன்னால் அனைத்தும் சரணடைந்துள்ள அத்தகைய(இறை)வனே!
يا مَنْ ذَلَّ كُلُّ شَيْء لِعِزَّتِهِ يا مَنْ خَضَعَ كُلُّ شَيْء لِهَيْبَتِهِ
அவனது சங்கைக்கு முன்னால் அனைத்தும் இழிவடைந்துவிட்டதே அத்தகைய(இறை)வனே! அவனது உயர்ந்த அந்தஸ்திற்கு முன்னால் அனைத்தும் பணிந்துள்ளதே அத்தகைய(இறை)வனே!
يا مَنِ انْقادَ كُلُّ شَيْء مِنْ خَشْيَتِهِ يا مَنْ تَشَقَّقَتِ الْجِبالُ مِنْ مَخافَتِهِ
அவன் மீதான அச்சத்தினால் அனைத்தும் அடிபணிந்து நடக்கின்றதே அத்தகைய(இறை)வனே! அவன் மீதான பயத்தினால் மலையும் வெடித்ததே அத்தகைய(இறை)வனே!
يا مَنْ قامَتِ السَّماواتُ بِاَمْرِهِ يا مَنِ اسْتَقَرَّتِ الْاَرَضُونَ بِاِذْنِهِ
அவனது கட்டளையின் காரணமாக வானங்கள் நிலைத்துள்ளதே அத்தகைய(இறை)வனே! அவனது அனுமதியோடு பூமியாவும் உறுதிபெற்றதே அத்தகைய(இறை)வனே!
يا مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ يا مَنْ لا يَعْتَدي عَلى اَهْلِ مَمْلَكَتِهِ
அவனது புகழைக் கொண்டு இடி துதிசெய்கின்றதே அத்தகைய(இறை)வனே! தனக்கு கீழுள்ளோர்களுக்கு அநீதியிழைக்காத அத்தகைய(இறை)வனே!

(7) يا غافِرَ الْخَطايا يا كاشِفَ الْبَلايا
தவறுகளை மன்னிப்பவனே துன்பங்களை நீக்குபவனே!
يا مُنْتَهَي الرَّجايا يا مُجْزِلَ الْعَطايا
நம்பிக்கையின் இறுதி இலக்கே! கூலிகளை அள்ளி வழங்குபவனே!
يا واهِبَ الْهَدايا يا رازِقَ الْبَرايا
அன்பளிப்புக்களை தருபவனே! படைப்பினங்களுக்கு உணவளிப்பவனே!
يا قاضِيَ الْمَنايا يا سامِعَ الشَّكايا
ஆசைகளை நிறைவேற்றுபவனே! முறையீடுகளை கேட்பவனே!
يا باعِثَ الْبَرايا يا مُطْلِقَ الْاُسارى
படைப்பினங்களை மீண்டும் எழுப்புபவனே! கைதிகளை விடுதலை செய்பவனே!

(8) ياذَا الْحَمْدِ وَالثَّناءِ يا ذَا الْفَخْرِ وَاْلبَهاءِ
புகழுக்கும் நன்றிக்கும் உரித்தானவனே! பெருமைக்கும் ஒளிமைக்கும் உரியவனே!
يا ذَا الْمَجْدِ وَالسَّناءِ يا ذَا الْعَهْدِ وَالْوَفاءِ
பெருந்தன்மைக்கும் உயர்வுக்கும் உரியவனே! ஒப்பந்தத்திற்கும் வாக்களித்ததை நிறைவேற்றுவதற்கும் உரித்தானவனே!
يا ذَا الْعَفْوِ وَالرِّضاءِ يا ذَا الْمَنِّ وَالْعَطاءِ
மன்னிப்பிற்றும் திருப்பொருத்தத்திற்கும் உரியவனே! அருட்கொடைக்கும் கொடை வழங்குவதற்கும் உரியவனே!
يا ذَا الْفَصْلِ وَالْقَضاءِ يا ذَا الْعِزِّ وَالْبَقاءِ
(சத்தியத்தினையும் அசத்தியத்தினையும்) பிரிப்பதற்கும், தீர்ப்பு வழங்குவதற்கும் உரித்தானவனே! கண்ணியத்திற்கும், நிலையான நிரந்தரத்திற்கும் உரியவனே!
يا ذَا الْجُودِ وَالسَّخاءِ يا ذَا الاْلاءِ وَالنَّعْماءِ
கொடைக்கும் அள்ளி வழங்குவதற்கும் உரியவனே! நலவுகளுக்கும் அருட்கொடைகளுக்கும் உரித்தானவனே!

(9) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,

يا مانِعُ يا دافِعُ يا رافِعُ يا صانِعُ يا نافِعُ يا سامِعُ يا جامِعُ يا شافِعُ يا واسِعُ يا مُوسِعُ
(துன்பங்களைத்) தடுப்பவனே! தீங்குகளை தூரமாக்குபவனே! மேலே உயர்த்துபவனே! உருவாக்குபவனே! பயனளிப்பவனே! கேட்பவனே! ஒன்றுசேர்ப்பவனே! பரிந்துரைப்பவனே! விசாலமானவனே! விருத்திசெய்பவனே!

(10) يا صانِعَ كُلِّ مَصْنُوع يا خالِقَ كُلِّ مَخْلُوق
அனைத்து உருவாக்கப்பட்டதையும் உருவாக்கியவனே! அனைத்து படைப்புக்களையும் படைத்தவனே!
يا رازِقَ كُلِّ مَرْزُوق يا مالِكَ كُلِّ مَمْلُوك
ஜீவிப்போர் அனைவருக்கும் உணவளிப்பவனே! அனைத்து சொத்துக்களுக்கும் உரிமையாளனே!
يا كاشِفَ كُلِّ مَكْرُوب يا فارِجَ كُلِّ مَهْمُوم
அனைத்து கஷ்டங்களையும் நீக்குபவனே! துக்கத்திலுள்ள அனைவரையும் மகிழ்ச்சிபடுத்துபவனே!
يا راحِمَ كُلِّ مَرْحُوم يا ناصِرَ كُلِّ مَخْذُول
அருள்பாளிக்கப்படுவோர் அனைவருக்கும் கருணைகாட்டுபவனே! உதவியற்ற அனைவருக்கும் உதவுபவனே!

يا ساتِرَ كُلِّ مَعْيُوب يا مَلْجَأَ كُلِّ مَطْرُود
அனைத்து குறையுடையோர்களின் குறைகளையும் மறைப்பவனே! துரத்தப்பட்டோர் அனைவருக்கும் அடைக்கலம் வழங்குபவனே!

(11) يا عُدَّتى عِنْدَ شِدَّتي يا رَجائي عِنْدَ مُصيبَتي
கஷ்ட நிலைகளில் எனது சேமிப்பே! துயர நிலைகளில் எனது நம்பிக்கையே!

يا مُونِسي عِنْدَ وَحْشَتي يا صاحِبي عِنْدَ غُرْبَتي
அச்சத்தின் போது எனது துணையே! தனிமையில் எனது தோழனே!
يا وَلِيّي عِنْدَ نِعْمَتي يا غِياثى عِنْدَ كُرْبَتى
அருட்கொடைகளில் எனது பாதுகாவலனே! கஷ்டங்களின் போது எனக்கு உதவுபவனே!
يا دَليلي عِنْدَ حَيْرَتى يا غَنائى عِنْدَ افْتِقارى
குழப்பமான நிலையில் எனது வழிகாட்டியே! தேவையுள்ள நிலையில் எனது தேவையை நிறைவேற்றுபவனே!
يا مَلجَئي عِنْدَ اضْطِرارى يا مُعينى عِنْدَ مَفْزَعى
இயலாத நிலைகளில் எனது அடைக்கலமே! அச்சமான நிலையில் எனக்கு உதவுபவனே!

(12) يا عَلاّمَ الْغُيُوبِ يا غَفّارَ الذُّنُوبِ
மறைவானவற்றை நன்கறிந்தவனே! பாவங்களை மன்னிப்பவனே!
يا سَتّارَ الْعُيُوبِ يا كاشِفَ الْكُرُوبِ
குறைகளை மறைப்பவனே! கவலைகளை போக்குபவனே!
يا مُقَلِّبَ الْقُلُوبِ يا طَبيبَ الْقُلُوبِ
உள்ளங்களை மாற்றுபவனே! உள்ளங்களின் மருத்துவனே!
يا مُنَوِّرَ الْقُلُوبِ يا اَنيسَ الْقُلُوبِ
உள்ளங்களை ஒளிமையாக்குபவனே! இதயங்களின் கருணையாளனே!
يا مُفَرِّجَ الْهُمُومِ يا مُنَفِّسَ الْغُمُومِ
துயரங்களை நீக்குபவனே! சோகங்களை தூய்மைசெய்பவனே!

(13) اَللّـهُمَّ اِنّى اَسْأَلُكَ بِاْسمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا جَليلُ يا جَميلُ يا وَكيلُ يا كَفيلُ يا دَليلُ يا قَبيلُ يا مُديلُ يا مُنيلُ يا مُقيلُ يا مُحيلُ
பெருந்தன்மை மிக்க கண்ணியவானே! அழகானவனே! பொறுப்பாளியே! போதுமானவனே! வழிகாட்டியே! ஏற்றுக்கொள்பவனே! ஆட்சிவழங்குபவனே! நலவு செய்பவனே! பிழைபொறுப்பவனே! தப்பிக்கச் செய்பவனே!

(14) يا دَليلَ الْمُتَحَيِّرينَ يا غِياثَ الْمُسْتَغيثينَ
குழப்பநிலையிலுள்ளோருக்கு வழிகாட்டுபவனே! உதவிகேட்போருக்கு உதவுபவனே!
يا صَريخَ الْمُسْتَصْرِخينَ يا جارَ الْمُسْتَجيرينَ
நீதிகேட்போருக்கு நீதிவழங்குபவனே! தஞ்சம்புகுவோருக்கு அடைக்கலம் வழங்குபவனே!
يا اَمانَ الْخائِفينَ يا عَوْنَ الْمُؤْمِنينَ
பயந்தோருக்கு அபயமளிப்பவனே! நம்பிக்கையாளர்களுக்கு உதவுபவனே!
يا راحِمَ الْمَساكينَ يا مَلْجَأَ الْعاصينَ
வசதியற்றோருக்கு கருணைகாட்டுபவனே! தவறிழைத்தோருக்கு அடைக்கலம் வழங்குபவனே!
يا غافِرَ الْمُذْنِبينَ يا مُجيبَ دَعْوَةِ الْمُضْطَرّينَ
பாவிகளை மன்னிப்பவனே! கஷ்ட நிலையில் அழைப்போருக்கு விடையளிப்பவனே!

(15) يا ذَا الْجُودِ وَالْاِحْسانِ يا ذَا الْفَضْلِ وَالْاِمْتِنانِ
கொடைக்கும் நலவுக்கும் உரிமையாளனே! அள்ளிவழங்குவதற்கும் அருட்கொடைக்கும் உரித்தானவனே!
يا ذَا الْاَمْنِ وَالْاَمانِ يا ذَا الْقُدْسِ وَالسُّبْحانِ
பாதுகாப்பிற்கும் அமைதிநிலைக்கும் உரிமையாளனே! பரிசுத்தத்திற்கும் தூய்மைக்கும் உரியவனே!
يا ذَا الْحِكْمَةِ وَالْبَيانِ يا ذَا الرَّحْمَةِ وَالرِّضْوانِ
நுட்பத்திற்கும் தெளிவிற்கும் உரியவனே! கருணைக்கும் திருப்பொருத்தத்திற்கும் உரித்தானவனே!
يا ذَا الْحُجَّةِ وَالْبُرْهانِ يا ذَا الْعَظَمَةِ وَالسُّلْطانِ
ஆதாரத்திற்கும் சான்றுக்கும் உரியவனே! கண்ணியத்திற்கும் ஆட்சிக்கும் உரிமையாளனே!
يا ذَا الرَّأْفَةِ وَالْمُسْتَعانِ يا ذَا العَفْوِ وَالْغُفْرانِ
இரக்கத்திற்குரியவனே! உதவியாளனே! மன்னிப்பிற்கும் பாவமன்னிப்பிற்கும் உரிமையாளனே!

(16) يا مَنْ هُوَ رَبُّ كُلِّ شَيْء يا مَنْ هُوَ اِلـهُ كُلِّ شَيء
அனைத்திற்கும் இரட்சகனே! அனைத்திற்கும் இறைவனே!
يا مَنْ هُوَ صانِعُ كُلِّ شَيْء يا مَنْ هُوَ خالِقُ كُلِّ شَيْء
அனைத்தையும் உருவாக்கியவனே! அனைத்தையும் படைத்தவனே!
يا مَنْ هُوَ قَبْلَ كُلِّ شَيْء يا مَنْ هُوَ بَعْدَ كُلِّ شَيْء
அனைத்திற்கும் முன்புள்ளவனே! அனைத்திற்கு பின்னரும் உள்ளவனே!
يا مَنْ هُوَ فَوْقَ كُلِّ شَيْء يا مَنْ هُوَ عالِمٌ بِكُلِّ شَيْء
அனைத்திற்கும் மேலேயுள்ளவனே! அனைத்தையும் அறிந்தவனே!
يا مَنْ هُوَ قادِرٌ عَلى كُلِّ شَيْء يا مَنْ هُوَ يَبْقى وَيَفْنى كُلُّ شَيْء
அனைத்திற்கும் ஆற்றல் மிக்கவனே! அனைத்தும் அழிந்ததும் அழியாமல் நிலைத்திருப்பவனே!

(17) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,

يا مُؤْمِنُ يا مُهَيْمِنُ يا مُكَوِّنُ يا مُلَقِّنُ يا مُبَيِّنُ يا مُهَوِّنُ يا مُمَكِّنُ يا مُزَيِّنُ يا مُعْلِنُ يا مُقَسِّمُ
அச்சம் தீர்ப்பவனே! (அனைத்தையும்) மிகைப்பவனே! தோற்றுவிப்பவனே! உணர்த்துபவனே! தெளிவுபடுத்துபவனே! இலகுபடுத்துபவனே! சக்தியளிப்பவனே! அழகுபடுத்துபவனே! வெளிப்படுத்துபவனே! பிரித்தளிப்பவனே!

(18) يا مَنْ هُوَ فى مُلْكِهِ مُقيمٌ يا مَنْ هُوَ فى سُلْطانِهِ قَديمٌ
ஆட்சியில் நிரந்தரமானவனே! அதிகாரத்தில் பழமைமிக்கவனே!
يا مَنْ هُو فى جَلالِهِ عَظيمٌ يا مَنْ هُوَ عَلى عِبادِهِ رَحيمٌ
உயர்ந்த அந்தஸ்துள்ளவனே! அடியார்கள் மீது அன்புகாட்டுபவனே!
يا مَنْ هُوَ بِكُلِّ شَيْء عَليمٌ يا مَنْ هُوَ بِمَنْ عَصاهُ حَليمٌ
அனைத்து விடயங்களையும் அறிந்தவனே! பாவிகள் மீது பணிவுகாட்டுபவனே!
يا مَنْ هُوَ بِمَنْ رَجاهُ كَريمٌ يا مَنْ هُوَ فى صُنْعِهِ حَكيمٌ
தன்மீது நம்பிக்கை கொண்டோருக்கு கொடையளிப்பவனே! தனது படைப்பில் நுட்பமிக்கவனே!
يا مَنْ هُوَ فى حِكْمَتِهِ لَطيفٌ يا مَنْ هُوَ فى لُطْفِهِ قَديمٌ
மிகவும் நுட்பமாக அறிந்துள்ளவனே! கருணைகாட்டுவதில் பழமைமிக்கவனே!

(19) يا مَنْ لا يُرْجى إلاّ فَضْلُهُ يا مَنْ لا يُسْأَلُ إلاّ عَفْوُهُ
கொடையையும் அருளையுமின்றி வேறேதும் அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படாதவனே! மன்னிப்பைத் தவிர வேறேதும் அவனிடம் கேட்கப்படாதவனே!
يا مَنْ لا يُنْظَرُ إلاّ بِرُّهُ يا مَنْ لا يُخافُ إلاّ عَدْلُهُ
நலவினைத் தவிர வேறேதும் அவனிடமிருந்து பார்க்கப்படாதவனே! நீதியைத் தவிர வேறேதுக்குமாய் அஞ்சப்படாதவனே!
يا مَنْ لا يَدُومُ إلاّ مُلْكُهُ يا مَنْ لا سُلْطانَ إلاّ سُلْطانُهُ
அவனது ஆட்சியைத் தவிர வேறேதும் நிலைபெறாத அத்தகையவனே! அவனது அதிகாரத்தினைத் தவிர வேறேதும் அதிகாரம் இல்லாதவனே!
يا مَنْ وَسِعَتْ كُلَّ شَيْء رَحْمَتُهُ يا مَنْ سَبَقَتْ رَحْمَتُهُ غَضَبَهُ
அனைத்தையும் அவனது கருணை சூழ்ந்துள்ளதே அத்தகையவனே! அவனது கோபத்தை விட தனது கருணை முந்திக்கொண்ட அத்தகையவனே!
يا مَنْ اَحاطَ بِكُلِّ شَيْء عِلْمُهُ يا مَنْ لَيْسَ اَحَدٌ مِثْلَهُ
அனைத்தையும் தனதறிவால் சூழ்ந்துள்ளவனே! அவனைப் போன்று ஒருவரும் ஒப்பாய் இல்லாதவனே!

(20)يا فارِجَ الْهَمِّ يا كاشِفَ الْغَمِّ
கவலைகளைப் போக்குபவனே! துயரங்களை அகற்றுபவனே!
يا غافِرَ الذَّنْبِ يا قابِلَ التَّوْبِ
பாவங்களை மன்னிப்பவனே! பாவமன்னிப்பினை ஏற்றுக்கொள்பவனே!
يا خالِقَ الْخَلْقِ يا صادِقَ الْوَعْدِ
படைப்புக்களைப் படைத்தவனே! வாக்களித்தால் மாறுசெய்யாதவனே!
يا مُوفِىَ الْعَهْدِ يا عالِمَ السِّرِّ
வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனே! இரகசியங்களை அறிந்தவனே!
يا فالِقَ الْحَبِّ يا رازِقَ الْاَنامِ
வித்துக்களை வெடித்து முளைக்கச்செய்பவனே! மனிதர்களுக்கு உணவளிப்பவனே!


(21) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,


يا عَلِيُّ يا وَفِيُّ يا غَنِيُّ يا مَلِيُّ يا حَفِيُّ يا رَضِيُّ يا زَكِيُّ يا بَدِيُّ يا قَوِيُّ يا وَلِيُّ
மேன்மைமிக்கவனே! வாக்கை நிறைவேற்றுபவனே! தேவையற்றவனே! ஆற்றல்மிக்கவனே! அங்கீகரிப்பவனே! பொருந்திக்கொள்பவனே! தூய்மையானவனே! படைப்பவனே! சக்திமிக்கவனே! பொறுப்புதாரியே!

(22) يا مَنْ اَظْهَرَ الْجَميلَ يا مَنْ سَتَرَ الْقَبيحَ
அழகினை வெளிப்படுத்தியவனே! அசிங்கங்களை மறைத்தவனே!
يا مَنْ لَمْ يُؤاخِذْ بِالْجَريرَةِ يا مَنْ لَمْ يَهْتِكِ السِّتْرَ
தவறுகளுக்கு தண்டனை வழங்காதவனே! (பிறரின்) திரைகளை நீக்காதவனே!
يا عَظيمَ الْعَفْوِ يا حَسَنَ التَّجاوُزِ
மிகப்பெரும் மன்னிப்பின் நாயனே! அழகிய முறையில் தவறுகளை கடந்துசெல்பவனே!
يا واسِعَ الْمَغْفِرَةِ يا باسِطَ الْيَدَيْنِ بِالرَّحْمَةِ
விசாலமான மன்னிப்பை வழங்குபவனே! கருணையெனும் கைகளை விரித்துள்ளவனே!
يا صاحِبَ كُلِّ نَجْوى يا مُنْتَهى كُلِّ شَكْوى
அனைத்து இரகசியங்களையும் நன்கறிந்தவனே! அனைத்து முறையீடுகளினதும் இறுதி இலக்கே!

(23) يا ذَا النِّعْمَةِ السّابِغَةِ يا ذَا الرَّحْمَةِ الْواسِعَةِ
கணக்கில்லா அருட்கொடைக்கு உரித்தானவனே! விசாலமான கருணைக்கு சொந்தக்காரனே!
يا ذَا الْمِنَّةِ السّابِقَةِ يا ذَا الْحِكْمَةِ الْبالِغَةِ
ஆரம்பமான அருட்கொடைகளுக்கு உரிமையாளனே! மிகைத்து நிற்கும் நுன்னறிவின் சொந்தக்காரனே!

يا ذَا الْقُدْرَةِ الْكامِلَةِ يا ذَا الْحُجَّةِ الْقاطِعَةِ
பரிபூரன ஆற்றல்மிக்கவனே! உறுதியான அத்தாட்சியின் உரிமையாளனே!
يا ذَا الْكَرامَةِ الظّاهِرَةِ يا ذَا الْعِزَّةِ الدّائِمَةِ
வெளிப்படையான பெருந்தன்மையின் நாயனே! நிரந்தர கண்ணியத்தின் உரிமையாளனே!
يا ذَا الْقُوَّةِ الْمَتينَةِ يا ذَا الْعَظَمَةِ الْمَنيعَةِ
நிலையான சக்தியின் நாயனே! எண்ணிப்பார்க்க முடியாத அந்தஸ்திற்கு உரித்தானவனே!

(24) يا بَديعَ السَّماواتِ يا جاعِلَ الظُّلُماتِ
வானங்களைப் படைத்தவனே! இருள்களை உருவாக்கியவனே!
يا راحِمَ الْعَبَراتِ يا مُقيلَ الْعَثَراتِ
கண்ணீர் வடிப்போருக்கு கருணைகாட்டுபவனே! சறுக்குதல்களை பெரிதுபடுத்தாதவனே!
يا ساتِرَ الْعَوْراتِ يا مُحْيِيَ الْاَمْواتِ
குறைகளை மறைப்பவனே! மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனே!
يا مُنْزِلَ الاياتِ يا مُضَعِّفَ الْحَسَناتِ
வேத வசனங்களை இறக்குபவனே! நன்மைகளை இரட்டிப்பாக்குபவனே!
يا ماحِيَ السَّيِّئاتِ يا شَديدَ النَّقِماتِ
தீமைகளை அழிப்பவனே! கடுமையாக தண்டிப்பவனே!


(25) اَللّـهُمَّ اِنّى اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,

يا مُصَوِّرُ يا مُقَدِّرُ يا مُدَبِّرُ يا مُطَهِّرُ يا مُنَوِّرُ يا مُيَسِّرُ يا مُبَشِّرُ يا مُنْذِرُ يا مُقَدِّمُ يا مُؤَخِّرُ
வடிவமைப்பவனே! நிர்ணயிப்பவனே! நிர்வாகிப்பவனே! தூய்மைப்படுத்துபவனே! ஒளிமையாக்குபவனே! இலகுபடுத்துபவனே! நன்மாராயம் கூறுபவனே! எச்சரிக்கை செய்பவனே! முற்படுத்துபவனே! பிற்படுத்துபவனே!

(26) يا رَبَّ الْبَيْتِ الْحَرامِ يا رَبَّ الشَّهْرِ الْحَرامِ
புனித கஃபாவின் இரட்சகனே! புனித மாதத்தின் இரட்சகனே!
يا رَبَّ الْبَلَدِ الْحَرامِ يا رَبَّ الرُّكْنِ وَالْمَقامِ
புனித நகரத்தின் இரட்சகனே! ருக்ன் (ஹஜருல் அஸ்வத்),மகாம்(ஹஸ்ரத் இப்றாஹீம் அவர்கள் நின்ற இடத்தின்) இரட்சகனே!
يا رَبَّ الْمَشْعَرِ الْحَرامِ يا رَبَّ الْمَسْجِدِ الْحَرامِ
மஷ்அருள் ஹராமின் இரட்சகனே! மஸ்ஜிதுல் ஹராமின் நாயனே!
يا رَبَّ الْحِلِّ وَالْحَرامِ يا رَبَّ النُّورِ وَالظَّلامِ
ஹில்(இஹ்ராம் ஆடை களையும் நேரத்திற்கும்), ஹராம் (இஹ்ராம் ஆடை அணியும் நேரத்திற்கும்) இரட்சகனே! ஒளியினதும் இருளினதும் இரட்சகனே!
يا رَبَّ التَّحِيَّةِ وَالسَّلامِ يا رَبَّ الْقُدْرَةِ فِي الْاَنامِ
சாந்தி , சமாதானத்தின் (ஸலாம் சொல்லுதலின்) இரட்சகனே! படைப்பினங்களில் ஆற்றலை உருவாக்கும் இரட்சகனே!

(27) يا اَحْكَمَ الْحاكِمينَ يا اَعْدَلَ الْعادِلينَ
தீர்ப்பளிப்போரில் மேலான நீதிபதியே! நீதிவழங்குவோரில் மேலான நீதியாளனே!
يا اَصْدَقَ الصّادِقينَ يا اَطْهَرَ الطّاهِرينَ
உண்மையாளர்களில் மேலான உண்மையாளனே! தூய்மையாளர்களில் மிகவும் பரிசுத்தமானவனே!
يا اَحْسَنَ الْخالِقينَ يا اَسْرَعَ الْحاسِبينَ
மிகவும் சிறந்த படைப்பாளனே! மிகவும் துரிதமாக விசாரனை செய்பவனே!
يا اَسْمَعَ السّامِعينَ يا اَبْصَرَالنّاظِرينَ
கேட்போரில் மிகவும் சிறப்பாக கேட்பவனே! பார்;ப்போரில் சிறந்த பார்வையாளனே!
يا اَشْفَعَ الشّافِعينَ يا اَكْرَمَ الْاَكْرَمينَ
பரிந்துரை செய்போரில் சிறந்த பரிந்துரையாளனே! சங்கையாளர்களில் மிகவும் சிறந்த சங்கையாளனே!

(28) يا عِمادَ مَنْ لا عِمادَ لَهُ يا سَنَدَ مَنْ لا سَنَدَ لَهُ
ஆதரவற்றோருக்கு ஆதரவாய் இருப்பவனே! பின்புலமற்றோருக்கு அத்தாட்சியாய் இருப்பவனே!
يا ذُخْرَ مَنْ لا ذُخْرَ لَهُ يا حِرْزَ مَنْ لا حِرْزَ لَهُ
சேமிப்பற்றோருக்கு சேமிப்பாய் இருப்பவனே! அடைக்கலமற்றோருக்கு அடைக்கலமானவனே!
يا غِياثَ مَنْ لا غِياثَ لَهُ يا فَخْرَ مَنْ لا فَخْرَ لَهُ
உதவியற்றோருக்கு உதவுபவனே! பெருமிதமற்றோருக்கு பெருமிதமாய் இருப்பவனே!
يا عِزَّ مَنْ لا عِزَّ لَهُ يا مُعينَ مَنْ لا مُعينَ لَهُ
கண்ணியமற்றோருக்கு கண்ணியமாக இருப்பவனே! உதவியற்றோருக்கு உதவியாய் இருப்பவனே! !
يا اَنيسَ مَنْ لا اَنيسَ لَهُ يا اَمانَ مَنْ لا اَمانَ لَهُ
துணையற்றோருக்கு துணையாய் இருப்பவனே! பாதுகாப்பற்றோருக்கு பாதுகாப்பாய் இருப்பவனே!

(29) اَللّـهُمَّ اِنّى اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا عاصِمُ يا قائِمُ يا دائِمُ يا راحِمُ يا سالِمُ يا حاكِمُ يا عالِمُ يا قاسِمُ يا قابِضُ يا باسِطُ
பாவங்கள் செய்யவிடாமல் பாதுகாப்பவனே! நிலையானவனே! நிரந்தரமானவனே! அன்புகாட்டுபவனே! குறைகளற்றவனே! அதிகாரம் செய்பவனே! அறிந்தவனே! பிரித்துவழங்குபவனே! கைப்பற்றுபவனே! விசாலமானவனே!

(30) يا عاصِمَ مَنِ اسْتَعْصَمَهُ يا راحِمَ مَنِ اسْتَرْحَمَهُ
பாவங்களை விட்டும் தூரப்படுத்துமாறு கேட்போருக்கு பாவம் செய்யாமல் தடுப்பவனே! கருணை வேண்டுவோருக்கு கருணைகாட்டுபவனே!
يا غافِرَ مَنِ اسْتَغْفَرَهُ يا ناصِرَ مَنِ اسْتَنْصَرَهُ
பாவமன்னிப்பு வேண்டுவோரின் பாவங்களை மன்னிப்பவனே! உதவிகோருவோருக்கு உதவுபவனே!
يا حافِظَ مَنِ اسْتَحْفَظَهُ يا مُكْرِمَ مَنِ اسْتَكْرَمَهُ
பாதுகாப்புத் தேடுவோருக்கு பாதுகாப்பளிப்பவனே! கண்ணியம் வேண்டுவோருக்கு கண்ணியமளிப்பவனே!
يا مُرْشِدَ مَنِ اسْتَرْشَدَهُ يا صَريخَ مَنِ اسْتَصْرَخَهُ
நேர்வழிவேண்டுவோருக்கு வழிகாட்டுபவனே! உதவிவேண்டுவோருக்கு உதவுபவனே!
يا مُعينَ مَنِ اسْتَعانَهُ يا مُغيثَ مَنِ اسْتَغاثَهُ
உதவிவேண்டுவோருக்கு உதவிசெய்பவனே! அபயம் தேடுபவர்களுக்கு அபயமளிப்பவனே!

(31) يا عَزيزاً لا يُضامٌ يا لَطيفاً لا يُرامُ
இழிவு ஏற்படாத கண்ணியத்துக்குரியவனே! நேசத்தினை புரிந்து கொள்ள முடியாத(ளவு) கருணையாளனே!
يا قَيُّوماً لا يَنامُ يا دائِماً لا يَفُوتُ
உறக்கமற்று நிலைத்திருப்பவனே! அழிவற்ற நிரந்தரமானவனே!
يا حَيّاً لا يَمُوتُ يا مَلِكاً لا يَزُولُ
மரணமற்ற ஜீவனுள்ளவனே! அழியாத சாம்ராஜியத்தின் ஆட்சியாளனே!
يا باقِياً لا يَفْنى يا عالِماً لا يَجْهَلُ
முடிவில்லாத நிலையானவனே! அறியாமை ஏற்படாத அறிஞனே!
يا صَمَداً لا يُطْعَمُ يا قَوِيّاً لا يَضْعُفُ
உணவுத்தேவையில்லாத தேவையற்றவனே! பலவீனமடையாத ஆற்றல்மிக்கவனே!

(32) اَللّـهُمَّ اِنّى اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا اَحَدُ يا واحِدُ يا شاهِدُ يا ماجِدُ يا حامِدُ يا راشِدُ يا باعِثُ يا وارِثُ يا ضارُّ يا نافِعُ
ஏகனே! ஒருவனே! சாட்சியாளனே! பெருந்தன்மைமிக்கவனே! புகழுபவனே! வழிகாட்டியே! மரணித்தவர்களை எழுப்புபவனே! அனந்தரம் கொள்பவனே! நஷ்டம் ஏற்படுத்துபவனே! பலன் தருபவனே!

(33) يا اَعْظَمَ مِنْ كُلِّ عَظيم يا اَكْرَمَ مِنْ كُلِّ كَريم
அனைத்து மகத்தானவர்களை விடவும் மிகவும் மகத்தானவனே! அனைத்து சங்கையாளர்களை விடவும் மிகவும் சங்கையானவனே!
يا اَرْحَمَ مِنْ كُلِّ رَحيم يا اَعْلَمَ مِنْ كُلِّ عَليم
அனைத்து கருணையாளர்களை விடவும் மிகக் கருணையாளனே! அனைத்து அறிந்தவர்களை விடவும் மிகவும் அறிந்தவனே!
يا اَحْكَمَ مِنْ كُلِّ حَكيم يا اَقْدَمَ مِنْ كُلِّ قَديم
அனைத்து தீரப்;பளிப்பவர்களை விடவும் மிகவும் நன்றாக தீர்ப்பளிப்பவனே! அனைத்து பழமைகளைவிடவும் மிகவும் பழமைமிக்கவனே!


يا اَكْبَرَ مِنْ كُلِّ كَبير يا اَلْطَفَ مِنْ كُلِّ لَطيف
அனைத்து பெரியதைவிடவும் மிகவும் பெரியவனே! அனைத்து அன்பாளர்களை விடவும் மிகவும் அன்புசெலுத்துபவனே!
يا اَجَلَّ مِن كُلِّ جَليل يا اَعَزَّ مِنْ كُلِّ عَزيز
அனைத்து உயர்வானவர்களைவிடவும் மிகவும் உயர்ந்தவனே! அனைத்து கண்ணியமிக்கவர்களைவிடவும் மிகவும் கண்ணியமானவனே!

(34) يا كَريمَ الصَّفْحِ يا عَظيمَ الْمَنِّ
பொருத்தருளலுடன் மன்னிப்பவனே! மிகப்பெரும் கொடையாளனே!
يا كَثيرَ الْخَيْرِ يا قَديمَ الْفَضْلِ
அதீத நலவுசெய்பவனே! பழமைமிகு கொடையாளனே!
يا دائِمَ اللُّطْفِ يا لَطيفَ الصُّنْعِ
நிரந்தர கருணையாளனே! படைப்பில் நுட்பமிக்கவனே!
يا مُنَفِّسَ الْكَرْبِ يا كاشِفَ الضُّرِّ
துயரங்களை விலக்குபவனே! கஷ்டங்களை நீக்குபவனே!
يا مالِكَ الْمُلْكِ يا قاضِيَ الْحَقِّ
ஆட்சியின் அதிபதியே! சத்தியத்தின் நீதிபதியே!

(35) يا مَنْ هُوَ فى عَهْدِهِ وَفِيٌّ يا مَنْ هُوَ في وَفائِهِ قَوِيٌّ
தனது வாக்கினை நிறைவேற்றுபவனே! தனது வாக்கினை நிறைவேற்றுவதில் ஆற்றல் மிக்கவனே!
يا مَنْ هُوَ في قُوَّتِهِ عَلِيٌّ يا مَنْ هُوَ في عُلُوِّهِ قَريبٌ
தனது ஆற்றலில் மேன்மைமிக்கவனே! தனது உயர்வான மேன்மையிலும் மிகவும் நெருக்கமானவனே!
يا مَنْ هُوَ فى قُرْبِهِ لَطيفٌ يا مَنْ هُوَ فى لُطْفِهِ شَريفٌ
தனது நெருக்கத்திலும் தயவுள்ளவனே! தனது அன்பிலும் பெருந்தன்மை மிக்கவனே!

يا مَنْ هُوَ فى شَرَفِهِ عَزيزٌ يا مَنْ هُوَ فى عِزِّهِ عَظيمٌ
தனது பெருந்தன்மையிலும் கண்ணியமிக்கவனே! தனது கண்ணியத்திலும் பிரமாண்டமானவனே!
يا مَنْ هُوَ فى عَظَمَتِهِ مَجيدٌ يا مَنْ هُوَ فى مَجْدِهِ حَميدٌ
தனது பிரமாண்டத்திலும் உயர்வானவனே! தனது உயர்விலும் புகழுக்குறியவனே!

(36) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يَا كَافِي يَا شَافِي يَا وَافِي يَا مُعَافِي‏يَا هَادِي يَا دَاعِي يَا قَاضِي يَا رَاضِي يَا عَالِي يَا بَاقِي‏
போதுமானவனே! நிவாரணி அளிப்பவனே! வாக்கினை நிறைவேற்றுபவனே! மன்னிப்பவனே! நேர்வழிகாட்டுபவனே! அழைப்பவனே! தீர்ப்பளிப்பவனே! பொருந்திக்கொள்பவனே! உயர்வானவனே! நிரந்தரமானவனே!

(37) يا مَنْ كُلُّ شَيْء خاضِعٌ لَهُ يا مَنْ كُلُّ شَيْء خاشِعٌ لَهُ
அவனுக்கு முன்னால் அனைத்தும் பணிந்துவிட்டதே அத்தகையவனே! அனைத்தும் அவனுக்கு முன்னால் இயலாமையினால் சிரம் சாய்த்துவிட்டதே அத்தகையவனே!
يا مَنْ كُلُّ شَيْء كائِنٌ لَهُ يا مَنْ كُلُّ شَيْء مَوْجُودٌ بِهِ
அவனின் மூலமே அனைத்தும் தோற்றம் பெற்றனவே அத்தகையவனே! அனைத்து உள்ளமையும் அவன் மூலமே உருவாகியதே அத்தகையவனே!
يا مَنْ كُلُّ شَيْء مُنيبٌ اِلَيْهِ يا مَنْ كُلُّ شَيْء خائِفٌ مِنْهُ
அனைத்தும் அவனிடமே பாவமன்னிப்புக் கேட்டு மீழுகின்ற அத்தகையவனே! அனைத்தும் அஞ்சக்கூடியவனே!

يا مَنْ كُلُّ شَيْء قائِمٌ بِهِ يا مَنْ كُلُّ شَيْء صائِرٌ اِلَيْهِ
அவன் மூலமே அனைத்தும் நிலைத்து நிற்கின்றதே அத்தகையவனே! அனைத்தும் அவனிடமே மீண்டு செல்கின்றதே அத்தகையவனே!
يا مَنْ كُلُّ شَيْء يُسَبِّحُ بِحَمْدِهِ يا مَنْ كُلُّ شَيْء هالِكٌ إلاّ وَجْهَهُ
அனைத்தும் அவனது புகழைக்கொண்டே துதிசெய்கின்றனவே அத்தகையவனே! அவனையன்றி அனைத்தும் அழிந்துவிடுமே அத்தகையவனே!

(38) يا مَنْ لا مَفَرَّ إلاّ اِلَيْهِ يا مَنْ لا مَفْزَعَ إلاّ اِلَيْهِ
அவனையின்றி வேறு எங்கும் விரண்டோட முடியாதே அத்தகையவனே! அவனையின்றி வேறு எங்கும் அடைக்கலம் கிடைக்காதே அத்தகையவனே!
يا مَنْ لا مَقْصَدَ إلاّ اِلَيْهِ يا مَنْ لا مَنْجا مِنْهُ إلاّ اِلَيْهِ
அவனையின்றி வேறு இலக்கில்லையே அத்தகையவனே! வெற்றிப்பாதை அவனையின்றி வேறு இல்லையே அத்தகையவனே!
يا مَنْ لا يُرْغَبُ إلاّ اِلَيْهِ يا مَنْ لا حَوْلَ وَلا قُوَّةَ إلاّ بِهِ
அவனையின்றி ஆசைகொள்ள வேறு எதுவுமில்லையே அத்தகையவனே! அவன் மூலமேயின்றி சக்தியும் ஆற்றலுமில்லையே அத்தகையவனே!
يا مَنْ لا يُسْتَعانُ إلاّ بِهِ يا مَنْ لا يُتَوَكَّلُ إلاّ عَلَيْهِ
அவன் மூலமேயின்றி உதவி கிடைக்காதே அத்தகையவனே! அவன் மீதேயன்றி பிறரில் நம்பிக்கை வைக்க முடியாதே அத்தகையவனே!
يا مَنْ لا يُرْجى إلاّ هُوَ يا مَنْ لا يُعْبَدُ إلاّ هو
அவனையின்றி யாரிடமும் எதிர்பார்க்க முடியாதே அத்தகையவனே! அவனையின்றி வணங்கப்படக்கூடியவர் யாருமில்லையே அத்தகையவனே!


(39) يا خَيْرَ الْمَرْهُوبينَ يا خَيْرَ الْمَرْغُوبينَ
அஞ்சப்படுவோரில் மிகச் சிறந்தவனே! நேசிக்கப்படுவோரில் மிகச் சிறந்தவனே!
يا خَيْرَ الْمَطْلُوبينَ يا خَيْرَ الْمَسْؤولينَ
வேண்டப்படுவோரில் மிகச் சிறந்தவனே! கேட்கப்படுவோரில் மிகச் சிறந்தவனே!
يا خَيْرَ الْمَقْصُودينَ يا خَيْرَ الْمَذْكُورينَ
இலக்குகளில் மிகச் சிறந்தவனே! ஞாபகிக்கப்படுவோரில் மிகச் சிறந்தவனே!
يا خَيْرَ الْمَشْكُورينَ يا خَيْرَ الْمَحْبُوبينَ
நன்றி தெரிவிக்கப்படுவோரில் மிகச் சிறந்தவனே! நேசிக்கப்படுவோரில் மிகச் சிறந்தவனே!
يا خَيْرَ الْمَدْعُوّينَ يا خَيْرَ الْمُسْتَأْنِسينَ
அழைக்கப்படுவோரில் மிகச் சிறந்தவனே! தோழமை கொள்ளப்படுவோரில் மிகச் சிறந்தவனே!

(40) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا غافِرُ يا ساتِرُ يا قادِرُ يا قاهِرُ يا فاطِرُ يا كاسِرُ يا جابِرُ يا ذاكِرُ يا ناظِرُ يا ناصِرُ
மன்னிப்பவனே! மறைப்பவனே! சக்தியுள்ளவனே! மிகைப்பவனே! படைப்பவனே! தகர்ப்பவனே! நிவர்த்திசெய்பவனே! ஞாபகிப்பவனே! பார்ப்பவனே! உதவிசெய்பவனே!

(41) يا مَنْ خَلَقَ فَسَوّى يا مَنْ قَدَّرَ فَهَدى
படைத்து, ஒழுங்குபடுத்தியவனே! நிர்ணயம் செய்து, நேர்வழியும் காட்டியவனே!
يا مَنْ يَكْشِفُ الْبَلْوى يا مَنْ يَسْمَعُ النَّجْوى
துயரங்களைப் போக்குபவனே! மறைவாகப் பேசுவதை செவிமடுப்பவனே!

يا مَنْ يُنْقِذُ الْغَرْقى يا مَنْ يُنْجِي الْهَلْكى
மூழ்குபவர்களை காப்பாற்றுபவனே! அழிவிலிருந்து படைப்புக்களை பாதுகாப்பவனே!
يا مَنْ يَشْفِي الْمَرْضى يا مَنْ اَضْحَكَ وَاَبْكى
நோயாளிகளை சுகப்படுத்துபவனே! சிரிக்கவும் செய்து, அழவும் செய்பவனே!
يا مَنْ اَماتَ وَاَحْيى يا مَنْ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالاُنْثى
மரணிக்கச் செய்பவனும் உயிர்ப்பிப்பவனுமே! ஆண், பெண் என ஜோடியாகப் படைத்தவனே!

(42) يا مَنْ فيِ الْبَرِّ وَالْبَحْرِ سَبيلُهُ يا مَنْ فِي الاْفاقِ اياتُهُ
கடலிலும் தரையிலும் அவனை அடையும் வழியுள்ளவனே! அனைத்து உள்ளமையிலும் அவனை பிரதிபலிக்கும் அத்தாட்சிகள் உள்ளவனே!
يا مَنْ فِى الاْياتِ بُرْهانُهُ يا مَنْ فِي الْمَماتِ قُدْرَتُهُ
அனைத்து அடையாலங்களிலும் அவனது இருப்பை வெளிப்படுத்தும் அத்தாட்சிகள் உள்ளவனே! மரணங்களில் அவனது சக்தியின் வெளிப்பாட்டினை கொண்டுள்ளவனே!
يا مَنْ فِي الْقُبُورِ عِبْرَتُهُ يا مَنْ فِي الْقِيامَةِ مُلْكُهُ
மண்ணறைகளில் தனது படிப்பினைகளை வைத்துள்ளவனே! மறுமையில் தனது ஆட்சியினை கொண்டுள்ளவனே!
يا مَنْ فِي الْحِسابِ هَيْبَتُهُ يا مَنْ فِي الْميزانِ قَضاؤُهُ
கேள்வி கணக்கில் தனது உயர்வைக் கொண்டிருப்பவனே! மீஸானில் தனது தீர்ப்பைக் கொண்டுள்ளவனே!
يا مَنْ فِي الْجَنَّةِ ثَوابُهُ يا مَنْ فِي النّارِ عِقابُهُ
சுவனத்தில் தனது கூலியினைக் கொடுப்பவனே! நரகத்தில் தனது வேதனையை வழங்குபவனே!

 

(43) يا مَنْ اِلَيْهِ يَهْرَبُ الْخائِفُونَ يا مَنْ اِلَيْهِ يَفْزَعُ الْمُذْنِبُونَ
அச்சமுள்ளோருக்கு அடைக்களம் கொடுப்பவனே! பாவிகள் பாதுகாப்பளிப்பவனே!
يا مَنْ اِلَيْهِ يَقْصِدُ الْمُنيبُونَ يا مَنْ اِلَيْهِ يَرْغَبُ الزّاهِدُونَ
பாவமன்னிப்புக் கோரி மீண்டு வருவோரின் இலக்குக்குரியவனே! பேணுதலுள்ளவர்கள் ஆசைகொள்ளும் அத்தகையவனே!
يا مَنْ اِلَيْهِ يَلْجَأُ الْمُتَحَيِّرُونَ يا مَنْ بِهِ يَسْتَأْنِسُ الْمُريدُونَ
நிலைகுழம்பியவர்களுக்கு அடைக்களம் கொடுப்பவனே! நாட்டம்கொண்டோர் தோழமைகொள்பவனே!
يا مَنْ بِه يَفْتَخِرُ الْمُحِبُّونَ يا مَنْ فى عَفْوِهِ يَطْمَعُ الْخاطِئُونَ
நேசம் கொண்டோர் பெருமைப்படும் அத்தகையவனே! தவறிழைப்போர் பேராசைகொள்ளும் மன்னிப்புக்குரியவனே!
يا مَنْ اِلَيْهِ يَسْكُنُ الْمُوقِنُونَ يا مَنْ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ
நம்பிக்கையுடையோர் அவனிடம் அமைதியடைகின்றார்களே அத்தகையவனே! அவன் மீது நம்பிக்கைவைத்து பொறுப்பேற்றுபவர்கள் பொறுப்பேற்றும் அத்தகையவனே!

(44) اَللّـهُمَّ اِنّى اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا حَبيبُ يا طَبيبُ يا قَريبُ يا رَقيبُ يا حَسيبُ يا مُهيبُ يا مُثيبُ يا مُجيبُ يا خَبيرُ يا بَصيرُ
நேசனே! குணப்படுத்துபவனே! நெருக்கமானவனே! பாதுகாவலனே! கணக்குப்பார்ப்பவனே! உயர்வோடு உள்ளவனே! கூலி வழங்குபவனே! விடையளிப்பவனே! அறிந்தவனே! பார்ப்பவனே!

 

(45) يا اَقَرَبَ مِنْ كُلِّ قَريب يا اَحَبَّ مِنْ كُلِّ حَبيب
அனைத்து நெருக்கத்தைவிடவும் மிகவும் நெருக்கமானவனே! அனைத்து நேசிக்கப்படுவோரைவிடவும் மிகவும் நேசிக்கப்படுபவனே!
يا اَبْصَرَ مِنْ كُلِّ بَصير يا اَخْبَرَ مِنْ كُلِّ خَبير
அனைத்து பார்ப்போரைவிடவும் மிகவும் பார்ப்பவனே! அனைத்து அறிந்தவர்களை விடவும் நன்கறிந்தவனே!
يا اَشْرَفَ مِنْ كُلِّ شَريف يا اَرْفَعَ مِنْ كُلِّ رَفيع
அனைத்து கண்ணியவான்களைவிடவும் மிகவும் கண்ணியம் வாய்ந்தவனே! அனைத்து உயர்ந்த அந்தஸ்தை விடவும் மிக உயர் அந்தஸ்துடையவனே!
يا اَقْوى مِنْ كُلِّ قَوِيٍّ يا اَغْنى مِنْ كُلِّ غَنِيٍّ
அனைத்து சக்திகொண்டோரைவிடவும் மிகவும் ஆற்றல் மிக்கவனே! அனைத்து தேவையற்றோரை விடவும் அதீத தேவையற்றவனே!
يا اَجْوَدَ مِنْ كُلِّ جَواد يا اَرْاَفَ مِنْ كُلِّ رَؤوُف
அனைத்து கொடையாளர்களை விடவும் மிகவும் கொடையாளனே! அனைத்து அன்புடையோரை விடவும் மிகவும் அன்புகாட்டுபவனே!

(46) يا غالِباً غَيْرَ مَغْلُوب يا صانِعاً غَيْرَ مَصْنُوع
மிகைக்கப்படாத மிகைப்பாளனே! உருவாக்கப்படாத தோற்றுவிப்பாளனே!
يا خالِقاً غَيْرَ مَخْلُوق يا مالِكاً غَيْرَ مَمْلُوك
படைக்கப்படாத படைப்பாளனே! யாரும் உரிமை கொண்டாட முடியாத உரிமையாளனே!
يا قاهِراً غَيْرَ مَقْهُور يا رافِعاً غَيْرَ مَرْفُوع
மிகைக்கப்படாத மிகைப்பாளனே! அந்தஸ்தில் மிகைக்க முடியாத உயர் அந்தஸ்துடையவனே!
يا حافِظاً غَيْرَ مَحْفُوظ يا ناصِراً غَيْرَ مَنْصُور
பாதுகாப்புத் தேவையில்லாத பாதுகாப்பாளனே! உதவி தேவைப்பாடாத உதவியாளனே!
يا شاهِداً غَيْرَ غائِب يا قَريباً غَيْرَ بَعيد
மறைவில்லாமல் என்றும் சமூகமளிப்பவனே! தொலைவிலில்லாமல் என்றும் நெருக்கத்திலுள்ளவனே!

(47) يا نُورَ النُّورِ يا مُنَوِّرَ النُّورِ
ஒளியின் ஒளியே! ஒளியை ஒளிமையாக்குபவனே!
يا خالِقَ النُّورِ يا مُدَبِّرَ النُّورِ
ஒளியைப் படைத்தவனே! ஒளியை நிர்வகிப்பவனே!
يا مُقَدِّرَ النُّورِ يا نُورَ كُلِ نُور
ஒளியை ஒழுங்குபடுத்துபவனே! அனைத்து ஒளிக்கும் ஒளியானவனே!
يا نُوراً قَبْلَ كُلِ نُور يا نُوراً بَعْدَ كُلِّ نُور
அனைத்து ஒளிக்கும் முன்புள்ள ஒளியே! அனைத்து ஒளிக்கும் பின்னருள்ள ஒளியே!
يا نُوراً فَوْقَ كُلِ نُور يا نُوراً لَيْسَ كَمِثْلِهِ نُورٌ
அனைத்து ஒளிக்கும் மேலேயுள்ள ஒளியே! அவனது ஒளியைப் போல் எந்த ஒளியுமில்லாத ஒளியே!

(48) يا مَنْ عَطاؤُهُ شَريفٌ يا مَنْ فِعْلُهُ لَطيفٌ
கண்ணியமிகு கொடையுடையவனே! கருணையுடனான செயலுடையவனே!
يا مَنْ لُطْفُهُ مُقيمٌ يا مَنْ اِحْسانُهُ قَديمٌ
நிரந்தரமான கருணையுள்ளவனே! பலமைவாய்ந்த நலவுடையவனே!
يا مَنْ قَوْلُهُ حَقٌّ يا مَنْ وَعْدُهُ صِدْقٌ
சத்திய வார்த்ததைகளைக் கொண்டவனே! உண்மையான வாக்குறுதிகளை கொண்டுள்ளவனே!
يا مَنْ عَفْوُهُ فَضْلٌ يا مَنْ عَذابُهُ عَدْلٌ
அவனது மன்னிப்பு அன்பாகுமே அத்தகையவனே! அவனது தண்டனை நீதியாகுமே அத்தகையவனே!
يا مَنْ ذِكْرُهُ حُلْوٌ يا مَنْ فَضْلُهُ عَميمٌ
அவனது ஞாபகம் இனிமையாகும் அத்தகையவனே! அவனது அன்பு அனைவருக்கும் உரித்தாகுமே அத்தகைய(இறை)வனே!

(49) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا مُسَهِّلُ يا مُفَصِّلُ يا مُبَدِّلُ يا مُذَلِّلُ يا مُنَزِّلُ يا مُنَوِّلُ يا مُفْضِلُ يا مُجْزِلُ يا مُمْهِلُ يا مُجْمِلُ
இலகுபடுத்துபவனே! பிரிப்பவனே! மாற்றம் செய்பவனே! இழிவுபடுத்துபவனே! இறக்குபவனே! வழங்குபவனே! சிறப்பிப்பவனே! பெரும் அருட்கொடைகளை கொடுப்பவனே! சந்தர்ப்பம் வழங்குபவனே! அழகுபடுத்துபவனே!

(50) يا مَنْ يَرى وَلا يُرى يا مَنْ يَخْلُقُ وَلا يُخْلَقُ
பார்ப்பவனே, பிறரால் பார்க்க முடியாதவனே! பிறரால் படைக்கப்பட முடியாத, படைப்பாளனே!
يا مَنْ يَهْدى وَلا يُهْدى يا مَنْ يُحْيي وَلا يُحْيا
பிறரை நேர்வழிப்படுத்தக்கூடிய, பிறரால் நேர்வழிப்படுத்த முடியாதவனே! பிறரால் உயிர்ப்பிக்க முடியாத , பிறரை உயிர்ப்பிப்பவனே!
يا مَنْ يَسْأَلُ وَلا يُسْأَلُ يا مَنْ يُطْعِمُ وَلا يُطْعَمُ
பிறரால் கேட்கப்படாதவனே, பிறரை கேள்வி கேட்பவனே! பிறருக்கு உணவளிக்கக் கூடிய, பிறரால் உணவளிக்க முடியாதவனே!
يا مَنْ يُجيرُ وَلا يُجارُ عَلَيْهِ يا مَنْ يَقْضى وَلا يُقْضى عَلَيْهِ
பிறருக்கு அடைக்கலம் வழங்கக் கூடியவனே, பிறரால் அடைக்கலம் வழங்கப்பட முடியாதவனே! பிறருக்கு தீர்ப்பளிப்பவனே, பிறரால் தீர்ப்பளிக்கப்பட முடியாதவனே!


يا مَنْ يَحْكُمُ وَلا يُحْكَمُ عَلَيْهِ يا مَنْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً اَحَدٌ
பிறருக்கு நீதி வழங்குபவனே, பிறரால் நீதி வழங்கப்பட முடியாதவனே! அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை, அவனுக்கு நிகராக எவருமில்லையே அத்தகைய(இறை)வனே!

(51) يا نِعْمَ الْحَسيبُ يا نِعْمَ الطَّبيبُ
அழகிய கணக்காளனே! அழகிய மருத்துவனே!
يا نِعْمَ الرَّقيبُ يا نِعْمَ الْقَريبُ
அழகிய பாதுகாவலனே! அழகிய நெருக்கத்திற்குரியவனே!
يا نِعْمَ الْمـٌجيبُ يا نِعْمَ الْحَبيبُ
அழகிய பதிலளிப்பாளனே! அழகிய நேசனே!
يا نِعْمَ الْكَفيلُ يا نِعْمَ الَوْكيلُ
அழகிய பொறுப்பாளியே! அழகிய பொறுப்புதாரியே!
يا نِعْمَ الْمَوْلى يا نِعْمَ النَّصيرُ
அழகிய தலைவனே! அழகிய உதவியாளனே!

(52) يا سُرُورَ الْعارِفينَ يا مُنَى الْمُحِبّينَ
மெய்ஞ்ஞானிகளை மகிழ்விப்பவனே! நேசிப்போரின் பேராசையே!
يا اَنيسَ الْمُريدينَ يا حَبيبَ التَّوّابينَ
நாட்டம்கொண்டோரின் தோழமையே! பாவமன்னிப்புக் கேட்போரின் நண்பனே!
يا رازِقَ الْمُقِلّينَ يا رَجاءَ الْمُذْنِبينَ
ஏழைகளுக்கு உணவளிப்பவனே! பாவிகளின் ஆதரவாளனே!
يا قُرَّةَ عَيْنِ الْعابِدينَ يا مُنَفِّسُ عَنِ الْمَكْرُوبينَ
வணக்கசாளிகளின் கண்குளிர்ச்சியே! கஷ்டப்படுவோரின் கஷ்டங்களை நீக்குபவனே!

يا مُفَرِّجُ عَنِ الْمَغْمُومينَ يا اِلـهَ الْاَوَّلينَ وَالاخِرينَ
துன்பப்படுவோரின் துன்பங்களைப் போக்குபவனே! முன்னோரினதும் பின்னோரினதும் வணக்கத்துக்குரிய நாயனே!

(53) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا رَبَّنا يا اِلهَنا يا سَيِّدَنا يا مَوْلانا يا ناصِرَنا يا حافِظَنا يا دَليلَنا يا مُعينَنا يا حَبيبَنا يا طَبيبَنا
எங்கள் இரட்சகனே! எங்கள் வணக்கத்துக்குரியவனே! எங்களது தலைவனே! எங்களது எஜமானே! எங்களது உதவியாளனே! எங்கள் பாதுகாவலனே! எங்களது வழிகாட்டியே! எங்களுக்கு உதவி செய்பவனே! எங்கள் நேசனே! எங்களது மருத்துவனே!

(54) يا رَبَّ النَّبيّينَ وَالْاَبْرارِ يا رَبَّ الصِّدّيقينَ وَالْاَخْيارِ
நல்லோர்களினதும் நபிமார்களினதும் இரட்சகனே! தேர்வு செய்யப்பட்டோரினதும் உண்மையாளர்களினதும் இரட்சகனே!
يا رَبَّ الْجَنَّةِ وَالنّارِ يا رَبَّ الصِّغارِ وَالْكِبارِ
சுவனத்தினதும் நரகத்தினதும் இரட்சகனே! சிறியோரினதும் பெரியோரினதும் இரட்சகனே!
يا رَبَّ الْحُبُوبِ وَالِّثمارِ يا رَبَّ الْاَنْهارِ وَالْاَشْجارِ
விதைகளினதும் பழங்களினதும் இரட்சகனே! ஆறுகளினதும் மரங்களினதும் இரட்சகனே!
يا رَبَّ الصَّحارى وَالْقِفارِ يا رَبَّ الْبَراري وَالْبِحارِ
பாலைவனங்களினதும் தரிசு நிலங்களினதும் இரட்சகனே! தரையினதும் கடல்களினதும் இரட்சகனே!
يا رَبَّ اللَّيْلِ وَالنَّهارِ يا رَبَّ الْاِعْلانِ وَالْاِسْرارِ
இரவினதும் பகலினதும் இரட்சகனே! இரகசியங்களினதும் பரகசியங்களினதும் இரட்சகனே!

(55) يا مَنْ نَفَذَ في كُلِّ شَيْء اَمْرُهُ يا مَنْ لَحِقَ بِكُلِّ شَيْء عِلْمُهُ
அவனது கட்டளை அனைத்து விடயங்களிலும் ஊடுருவியுள்ளதே அத்தகையவனே! அவனது அறிவு அனைத்து விடயங்களையும் சூழ்ந்துள்ளதே அத்தகையவனே!
يا مَنْ بَلَغَتْ اِلى كُلِّ شَيْء قُدْرَتُهُ يا مَنْ لا تُحْصِى الْعِبادُ نِعَمَهُ
அவனது சக்தி அனைத்து விடயங்களையும் சூழ்ந்துள்ளதே அத்தகையவனே! அவனது அருட்கொடைகளை அடியார்கள் கணக்கெடுக்க முடியாதே அத்தகையவனே!
يا مَنْ لا تَبْلُغُ الْخَلائِقُ شُكْرَهُ يا مَنْ لا تُدْرِكُ الْاَفْهامُ جَلالَهُ
படைப்பினங்கள் அவனுக்கு நன்றிசெலுத்துவது முடியாத காரியமே அத்தகையவனே! பகுத்தறிவுகள் அவனது அந்தஸ்தினை அடைந்து கொள்ள முடியாதே அத்தகையவனே!
يا مَنْ لا تَنالُ الْاَوْهامُ كُنْهَهُ يا مَنِ الْعَظَمَةُ وَالْكِبْرِياءُ رِداؤُهُ
சிந்தனைகள் அவனது யதார்த்தத்தை( சுயத்தை) அடைய முடியாதே அத்தகையவனே! கண்ணியத்தினையும் உயர்வினையும்; தனது ஆடையாகக் கொண்டுள்ளவனே!
يا مَنْ لا تَرُدُّ الْعِبادُ قَضاءَهُ يا مَنْ لا مُلْكَ إلاّ مُلْكُهُ
அவனது தீர்ப்புக்களை அடியார்கள் தட்டமுடியாதே அத்தகையவனே! அவனது ஆட்சியைத் தவிர வேறு ஆட்சியில்லாதவனே!
يا مَنْ لا عَطاءَ إلاّ عَطاؤُهُ
அவனது கொடையை விட வேறு கொடையில்லாதவனே!

(56) يا مَنْ لَهُ الْمَثَلُ الْاَعْلى يا مَنْ لَهُ الصِّفاتُ الْعُلْيا
மேலான வர்ணிப்புள்ளதே அத்தகையவனே! உயர்ந்த பண்புகளுள்ளதே அத்தகையவனே!
يا مَنْ لَهُ الاْخِرَةُ وَالْاُولى يا مَنْ لَهُ الْجَنَّةُ الْمَاْوى
(படைப்பின்)ஆரம்பமும் முடிவும் யாருக்கானதோ அத்தகையவனே! நிரந்தரமான சுவனம் யாருடையதோ அத்தகையவனே!
يا مَنْ لَهُ الاياتُ الْكُبْرى يا مَنْ لَهُ الْاَسْماءُ الْحُسْنى
மிகப்பெரும் அடையாளங்கள் யாருக்கானதோ அத்தகையவனே! யாருக்கு அழகிய திருநாமங்கள் உண்டோ அத்தகையவனே!
يا مَنْ لَهُ الْحُكْمُ وَالْقَضاءُ يا مَنْ لَهُ الْهَواءُ وَالْفَضاءُ
தீர்ப்பும் நீதியும் யாருக்கானதோ அத்தகையவனே! ஆகாயமும் வெற்றிடங்களும் யாருக்கானதோ அத்தகையவனே!
يا مَنْ لَهُ الْعَرْشُ وَالثَّرى يا مَنْ لَهُ السَّماواتُ الْعُلى
அர்ஷும் (சிம்மாசனமும்) பூமியும் யாருக்கானதோ அத்தகையவனே! உயர்ந்த வானங்கள் யாருக்கானதோ அத்தகையவனே!

(57) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا عَفُوُّ يا غَفُورُ يا صَبُورُ يا شَكُورُ يا رَؤوفُ يا عَطُوفُ يا مَسْؤولُ يا وَدُودُ يا سُبُّوحُ يا قُدُّوسُ
கிருபையாளனே! மன்னிப்பளிப்பவனே! பொறுமையாளனே! நன்றியினை ஏற்பவனே! அன்பாளனே! கருணையாளனே! வேண்டப்படக்கூடியவனே! நேசிப்பவனே! மிகவும் பரிசுத்தமானவனே! தூய்மையானவனே!


(58) يا مَنْ فِي السَّماءِ عَظَمَتُهُ يا مَنْ فِي الْاَرْضِ آياتُهُ
வானங்களில் அவனது மகிமை விளங்குகின்றதே அத்தகையவனே! பூமியிலே அவனது (ஆற்றலின்) அடயாளங்கள் உள்ளனவே அத்தகைய(இறை)வனே!
يا مَنْ في كُلِّ شَيْء دَلائِلُهُ يا مَنْ فِي الْبِحارِ عَجائِبُهُ
அனைத்திலும் அவனது உள்ளமைக்கான அத்தாட்சிகள் தெரிகின்றதே அத்தகையவனே! கடல்களிலே அவனது அதிசயங்கள் உள்ளதே அத்தகைய(இறை)வனே!


يا مَنْ فِي الْجِبالِ خَزائِنُهُ يا مَنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعيدُهُ
மலைகளிலே அவனது புதையல்கள் உள்ளதே அத்தகையவனே! படைப்புக்களை ஆரம்பித்து ,பின்னர் அவனிடமே அவை மீண்டு செல்லுமே அத்தகையவனே!
يا مَنْ اِلَيْهِ يَرْجِـعُ الْاَمْرُ كُلُّهُ يا مَنْ اَظْهَرَ فى كُلِّ شَيْء لُطْفَهُ
அனைத்து விடயங்களும் அவனிடமே திரும்புமே அத்தகையவனே! அவனது அன்பு அனைத்திலும் தெரிகின்றதே அத்தகையவனே!
يا مَنْ اَحْسَنَ كُلَّ شَيْء خَلْقَهُ يا مَنْ تَصَرَّفَ فِي الْخَلائِقِ قُدْرَتُهُ
அனைத்தையும் அழகிய முறையில் படைத்துள்ளவனே! படைப்புக்களில் அவனது சக்தி ஊடுருவியுள்ளதே அத்தகையவனே!

(59) يا حَبيبَ مَنْ لا حَبيبَ لَهُ يا طَبيبَ مَنْ لا طَبيبَ لَهُ
நண்பனில்லாதவர்களுக்கு நண்பனாய் இருப்பவனே! மருத்துவரில்லாதவர்களுக்கு மருத்துவனாய் இருப்பவனே!
يا مُجيبَ مَنْ لا مُجيبَ لَهُ يا شَفيقَ مَنْ لا شَفيقَ لَهُ
அழைப்பிற்கு விடையளிக்க யாருமில்லாதவர்களுக்கு விடையளிப்பவனே! அன்புகாட்ட யாருமிலல்hதவர்களுக்கு அன்புகாட்டுபவனே!
يا رَفيقَ مَنْ لا رَفيقَ لَهُ يا مُغيثَ مَن لا مُغيثَ لَهُ
தோழனில்லாதவர்களுக்கு தோழனாய் இருப்பவனே! உதவிசெய்ய யாருமில்லாதவர்களுக்கு உதவிசெய்பவனே!
يا دَليلَ مَنْ لا دَليلَ لَهُ يا اَنيسَ مَنْ لا اَنيسَ لَهُ
வழிகாட்ட யாருமில்லாதவர்களுக்கு வழிகாட்டுபவனே! துணையில்லாதவர்களுக்கு துணையாய் இருப்பவனே!
يا راحِمَ مَنْ لا راحِمَ لَهُ يا صاحِبَ مَنْ لا صاحِبَ لَهُ
கருணைகாட்ட யாருமில்லாதவர்களுக்கு கருணைகாட்டுபவனே! உதவியாளர் இல்லாதவர்களுக்கு உதவியாளராய் இருப்பவனே!

(60) يا كافِيَ مَنِ اسْتَكْفاهُ يا هادِيَ مَنِ اسْتَهْداهُ
அவனே போதுமென தேடிவருவோருக்கு போதுமாய் இருப்பவனே! அவனிடம் நேர்வழி தேடிவருவோருக்கு நேர்வழிகாட்டுபவனே!
يا كالِىءَ مَنِ اسْتَكْلاهُ يا راعِيَ مَنِ اسْتَرْعاهُ
அவனிடம் பாதுகாப்பு வேண்டுவோருக்கு பாதுகாப்பு வழங்குபவனே! அவனிடம் பொறுப்பாளியாய் இருக்கும் படி வேண்டுவோருக்கு பொறுப்பாய் இருப்பவனே!
يا شافِيَ مَنِ اسْتَشْفاهُ يا قاضِيَ مَنِ اسْتَقْضاهُ
நோய்க்கு நிவாரணம் வேண்டுவோருக்கு நிவாரணமளிப்பவனே! நீதி கேட்டு வருவோருக்கு நீதி வழங்குபவனே!
يا مُغْنِيَ مَنِ اسْتَغْناهُ يا مُوفِيَ مَنِ اسْتَوْفاهُ
அவனிடம் தேவைநிறைவேற்றத்;தைக் கேட்போருக்கு அதனை வழங்கியருளுபவனே! அவனிடம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுவோருக்கு வாக்குறுதியை நிறைவேற்றுபவனே!
يا مُقَوِّيَ مَنِ اسْتَقْواهُ يا وَلِيَّ مَنِ اسْتَوْلاهُ
அவனிடம் சக்தியினை கேட்போருக்கு சக்தி வழங்குபவனே! அவனிடம் பொறுப்பாளனாய் இருக்கும் படி வேண்டுவோருக்கு பொறுப்பாளனாய் இருப்பவனே!

(61) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا خالِقُ يا رازِقُ يا ناطِقُ يا صادِقُ يا فالِقُ يا فارِقُ يا فاتِقُ يا راتِقُ يا سابِقُ يا سامِقُ
படைத்தவனே! உணவளிப்பவனே! பேசுபவனே! உண்மை உரைப்பவனே! வெடித்து முளைக்கச்செய்பவனே! பிரிப்பவனே! பிளக்கச்செய்பவனே! சீர்செய்பவனே! முன்செல்பவனே! உயர்வான அந்தஸ்துள்ளவனே!

(62) يا مَنْ يُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهارَ يا مَنْ جَعَلَ الظُّلُماتِ وَالْاَنْوارَ
இரவு , பகலை மாற்றுபவனே! இருள்களையும் வெளிச்சங்களையும் உருவாக்கியவனே!
يا مَنْ خَلَقَ الظِّلَّ وَالْحَرُورَ يا مَنْ سَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ
நிழலையும் உஷ்னத்தையும் படைத்தவனே! சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியுள்ளவனே!
يا مَنْ قَدَّرَ الْخَيْرَ وَالشَّرَّ يا مَنْ خَلَقَ الْمَوْتَ وَالْحَياةَ
நலவையும் தீங்கையும் நிர்ணயித்துள்ளவனே! மரணத்தையும் வாழ்வையும் படைத்துள்ளவனே!
يا مَنْ لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ يا مَنْ لَمْ يَتَّخِذْ صاحِبَةً وَلا وَلَداً
படைத்தலுக்கும் கட்டளையிடுதலுக்கும் உரிமையாளனே! துணையும் பிள்ளையும் தனக்கு தெரிவுசெய்து கொள்ளாதவனே!
يا مَنْ لَيْسَ لَهُ شَريكٌ فِى الْمُلْكِ يا مَنْ لَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ
ஆட்சியில் தனக்கு எவ்வித இணையுமில்லாதவனே! தனக்கு இழிநிலையை ஏற்படுத்தக்கூடிய உதவியாளர்கள் யாருமில்லாதவனே!

(63) يا مَنْ يَعْلَمُ مُرادَ الْمُريدينَ يا مَنْ يَعْلَمُ ضَميرَ الصّامِتينَ
நாட்டம் கொண்டோரின் எண்ணங்களை அறிந்துள்ளவனே! மௌனமாய் உள்ளோரின் உள்ளங்களிலுள்ளவற்றை தெரிந்தவனே!
يا مَنْ يَسْمَعُ اَنينَ الْواهِنينَ يا مَنْ يَرى بُكاءَ الْخائِفينَ
முடியாதோரின் அழுகுரல்களை கேட்பவனே! அச்சம்கொண்டோரின் அழுகைகளைப் பார்ப்பவனே!
يا مَنْ يَمْلِكُ حَوائِجَ السّائِلينَ يا مَنْ يَقْبَلُ عُذْرَ التّائِبينَ
தேவையுள்ளோர் தங்களது தேவைகளை முன்வைத்து கேட்கப்படுவது அவனிடமே! பாவமன்னிப்பு வேண்டி தௌபா செய்வோரின் காரணங்களை ஏற்றுக்கொள்பவனே!

يا مَنْ لا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدينَ يا مَنْ لا يُضيعُ اَجْرَ الْمـٌحْسِنينَ
விஷமிகளின் செயல்களை சீர்செய்யாதவனே! நல்லோரின் கூலிகளை வீணாக்காதவனே!
يا مَنْ لا يَبْعُدُ عَنْ قُلُوبِ الْعارِفينَ يا اَجْوَدَ الْاَجْودينَ
மெய்ஞ்ஞானிகளின் உள்ளங்களிலிருந்து தூரமாகாதவனே! கொடைகொடுப்பவர்களில் அதிகமாய் கொடுப்பவனே!

(64) يا دائِمَ الْبَقاءِ يا سامِعَ الدُّعاءِ
என்றும் நிலைத்திருப்பவனே! பிரார்த்தனைகளை செவிமடுப்பவனே!
يا واسِعَ الْعَطاءِ يا غافِرَ الْخَطاءِ
விசாலமான கொடையுடையவனே! தவறுகளை மன்னிப்பவனே!
يا بَديعَ السَّماءِ يا حَسَنَ الْبَلاءِ
வானத்தினை படைத்தவனே! அழகிய சோதனைகளைத் தருபவனே!
يا جَميلَ الثَّناءِ يا قَديمَ السَّناءِ
அழகிய புகழுக்குரியவனே! பழமைவாய்ந்த உயர்வுக்குரியவனே!
يا كَثيرَ الْوَفاءِ يا شَريفَ الْجَزاءِ
அதீத வாய்மைமிக்கவனே! நற்கூலிவழங்குவதில் சங்கையாளனே!

(65) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا سَتّارُ يا غَفّارُ يا قَهّارُ يا جَبّارُ يا صَبّارُ يا بارُّ يا مُخْتارُ يا فَتّاحُ يا نَفّاحُ يا مُرْتاحُ
திரையிட்டு மறைப்பவனே! மன்னிப்பவனே! பரிபூரண ஆற்றலுடையவனே! வல்லமைமிக்கவனே! பொறுமையாளனே! நலவு செய்பவனே! சுய தேர்வு உள்ளவனே! வழியமைத்துத் தருபவனே! அருள் வழங்குபவனே! மகிழ்விப்பவனே!

(66) يا مَنْ خَلَقَنى وَسَوّاني يا مَنْ رَزَقَني وَرَبّاني
என்னைப் படைத்து , சீரமைத்தவனே! எனக்கு அன்றாடம் உணவளித்து , இரட்சித்தவனே!
يا مَنْ اَطْعَمَنى وَسَقانى يا مَنْ قَرَّبَنى وَ اَدْنانى
என்னை உண்ணவும் செய்து , பருகவும் செய்பவனே! என்னை உன்னிடம் நெருங்கச் செய்து, தனக்கு நெருக்கமாய் ஆக்கியவனே!
يا مَنْ عَصَمَنى وَكَفانى يا مَنْ حَفِظَني وَكَلانى
பாவங்கள் செய்வதை விட்டும் என்னைப் பாதுகாத்து, எனக்கு போதுமானவனாய் இருப்பவனே! என்னைப் பாதுகாத்து, காப்பவனே!
يا مَنْ اَعَزَّنى وَاَغْنانى يا مَنْ وَفَّقَنى وَهَدانى
என்னை கண்ணியப்படுத்தி, என்னை வளமிக்கவனாகவும் ஆக்கியவனே! எனக்கு நற்பாக்கியத்தினை வழங்கி, என்னை நேர்வழிப்படுத்தியவனே!
يا مَنْ آنَسَنى وَآوَانى يا مَنْ اَماتَنى وَاَحْيانى
எனக்கு நேசம் காட்டி, அடைக்கலம் தந்தவனே! என்னை மரணிக்கச் செய்து, மீண்டும் உயிர்ப்பிப்பவனே!

(67) يا مَنْ يُحِقُّ الْحَقَّ بِكَلِماتِهِ يا مَنْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبادِهِ
சத்தியத்தினை தனது வார்த்தைகளைக் கொண்டு உறுதிப்படுத்துபவனே! தனது அடியார்களிடமிருந்து பாவமன்னிப்பினை ஏற்றுக்கொள்பவனே!
يا مَنْ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ يا مَنْ لا تَنْفَعُ الشَّفاعَةُ إلاّ بِاِذْنِهِ
மனிதனுக்கும் அவனது உள்ளத்திற்குமிடையில் தடையை ஏற்படுத்துபவனே! அவனது அனுமதியின்றி எவ்வித பரிந்துரையும் பயனளிக்காதே அத்தனையவனே!
يا مَنْ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبيلِهِ يا مَنْ لا مُعَقِّبَ لِحُكْمِهِ
அவனது பாதையிலிருந்து தவறிச்செல்வோரை நன்கறிந்வனே! தனது தீர்ப்பினை பிற்படுத்தாதவனே!

يا مَنْ لا رادَّ لِقَضائِهِ يا مَنِ انْقادَ كُلُّ شَيْء لِاَمْرِهِ
தனது தீர்ப்;;;பில் மறுபரிசீலினை செய்யாதவனே! அவனது கட்டளைகளை அனைத்தும் ஏற்று நடக்கும் அத்தகையவனே!
يا مَنِ السَّماواتُ مَطْوِيّاتٌ بِيَمينِهِ يا مَنْ يُرْسِلُ الرِّياحَ بُشْراً بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ
வானங்கள் அனைத்தும் அவனது ஆற்றலிலே சிக்குண்டுள்ளனவே அத்தகையவனே! தனது அருளினை நன்மாராயம் கூற காற்றினை அனுப்புபவனே!

(68) يا مَنْ جَعَلَ الْاَرْضَ مِهاداً يا مَنْ جَعَلَ الْجِبالَ اَوْتاداً
பூமியினை வாழ்வதற்கு ஏற்றதாக ஆக்கியவனே! மலைகளை (பூமியை உறுதிப்படுத்தும்) ஆணிகளாக ஆக்கியவனே!
يا مَنْ جَعَلَ الشَّمْسَ سِراجاً يا مَنْ جَعَلَ الْقَمَرَ نُوراً
சூரியனை பிரகாசிக்கும் விளக்காய் ஆக்கியவனே! சந்திரனை (இரவில்) ஒளிவீசுவதாய் தோற்றுவித்தவனே!
يا مَنْ جَعَلَ اللَّيْلَ لِباساً يا مَنْ جَعَلَ النَّهارَ مَعاشاً
இரவை ஆடையாய் ஆக்கியவனே! பகலை வாழ்க்கை வசதிகளைத் தேடிக்கொள்ளும் நேரமாக ஆக்கியவனே!
يا مَنْ جَعَلَ النَّوْمَ سُباتاً يا مَنْ جَعَلَ السَّمآءَ بِناءً
தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கியவனே! வானங்களை கட்டிடங்களாக ஆக்கியவனே!
يا مَنْ جَعَلَ الْاَشْياءَ اَزْواجاً يا مَنْ جَعَلَ النّارَ مِرْصاداً
அனைத்தையும் சோடி சோடியாக படைத்தவனே! பாவிகளை எதிர்பார்த்திருக்கும் இடமாக நரகினை ஆக்கியவனே!


(69) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا سَميعُ يا شَفيعُ يا رَفيعُ يا مَنيعُ يا سَريعُ يا بَديعُ يا كَبيرُ يا قَديرُ يا خَبيرُ يا مُجيرُ
செவிமடுப்பவனே! பரிந்துரை செய்பவனே! உயர்வானவனே! உயர் அந்தஸ்துள்ளவனே! துரிதமான விடையளிப்பவனே! தோற்றுவிப்பவனே! பெரியவனே! சக்திமிக்கவனே! அறிந்துள்ளவனே! அடைக்கலம் வழங்குபவனே!

(70) يا حَيّاً قَبْلَ كُلِّ حَيٍّ يا حَيّاً بَعْدَ كُلِّ حَيٍّ
உயிருள்;ள அனைத்துக்கு முன்பும் என்றும் உயிருள்ளவனாய் இருந்தவனே! உயிருள்;ள அனைத்துக்கு பின்பும் எப்போதும்; உயிருள்ளவனாய் இருப்பவனே!
يا حَيُّ الَّذي لَيْسَ كَمِثْلِهِ حَيٌّ يا حَيُّ الَّذي لا يُشارِكُهُ حَيٌّ
அவனைப் போல் எவ்வித உயிரும் இல்லாதவனே! எவ்வித உயிரும் அவனுக்கு இணையாய் இல்லாத ஜீவனே!
يا حَيُّ الَّذى لا يَحْتاجُ اِلى حَيٍّ يا حَيُّ الَّذى يُميتُ كُلَّ حَيٍّ
உயிருள்ள எதனளவிலும் தேவையில்லாத ஜீவனே! உயிருள்ள அனைத்தையும் மரணிக்கச் செய்யும் ஜீவனே!
يا حَيُّ الَّذى يَرْزُقُ كُلَّ حَيٍّ يا حَيّاً لَمْ يَرِثِ الْحَياةَ مِنْ حَيٍّ
உயிருள்ள அனைத்திற்கும் உணவளிக்கும் ஜீவனே! உயிருள்ள எதிலிருந்தும் தனதுயிரை வாரிசாகப் பெறாத ஜீவனே!
يا حَيُّ الَّذى يُحْيِي الْمَوْتى يا حَيُّ يا قَيُّومُ لا تَأخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ
மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் ஜீவனே! என்றும் உயிருள்ளவனே! என்றும் நிலையானவனே! அவனை சிறு தூக்கமும் பெரும் உறக்கமும் பீடிக்காது.

(71) يا مَنْ لَهُ ذِكْرٌ لا يُنْسى يا مَنْ لَهُ نُورٌ لا يُطْفى
மறக்க முடியாத ஞாபகத்திற்குரியவனே! அணைந்து போகாத ஒளியுடையவனே!
يا مَنْ لَهُ نِعَمٌ لا تُعَدُّ يا مَنْ لَهُ مُلْكٌ لا يَزُولُ
எண்ணிக்கையிட முடியாத அருட்கொடைகளுடையவனே! அழிந்து போகாத ஆட்சிக்குரியவனே!
يا مَنْ لَهُ ثَناءٌ لا يُحْصى يا مَنْ لَهُ جَلالٌ لا يُكَيَّفُ
கணக்கெடுக்க முடியாத புகழுக்குரியவனே! மாற்றமடையாத மகத்துவத்திற்குரியவனே!
يا مَنْ لَهُ كَمالٌ لا يُدْرَكُ يا مَنْ لَهُ قَضاءٌ لا يُرَدُّ
விளங்கிக் கொள்ள முடியாத பரிபூரணத்திற்குரியவனே! மறுக்க முடியாத தீர்ப்புக்குரியவனே!
يا مَنْ لَهُ صِفاتٌ لا تُبَدَّلُ يا مَنْ لَهُ نُعُوتٌ لا تُغَيَّرُ
மாற்றமுடியாத பண்புகளுடையவனே! மாற்றம் காணாத வர்ணனையுடையவனே!

(72) يا رَبَّ الْعالَمينَ يا مالِكَ يَوْمِ الدّينِ
அகிலத்தாரின் இரட்சகனே! தீர்ப்புநாளின் அதிபதியே!
يا غايَةَ الطّالِبينَ يا ظَهْرَ اللاّجينَ
தேடுவோரின் இறுதி இலக்கே! தஞ்சம் புகுந்தோர்களின் பாதுகாவலனே!
يا مُدْرِكَ الْهارِبينَ يا مَنْ يُحِبُّ الصّابِرينَ
விரண்டோடியவர்களை அடைந்துகொள்பவனே! பொறுமையாளர்களை நேசிப்பவனே!
يا مَنْ يُحِبُّ التَّوّابينَ يا مَنْ يُحِبُّ الْمُتَطَهِّرينَ
பாவமன்னிப்புக் கோருவோரை நேசிப்பவனே! தூய்மையாளர்களை விரும்புபவனே!
يا مَنْ يُحِبُّ الْمُحْسِنينَ يا مَنْ هُوَ اَعْلَمُ بِالْمُهْتَدينَ
நன்மைசெய்வோரை நேசிப்பவனே! நேர்வழி அடைந்தோரை நன்கறிந்தவனே!


(73) اَللّـهُمَّ اِنّى اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا شَفيقُ يا رَفيقُ يا حَفيظُ يا مُحيطُ يا مُقيتُ يا مُغيثُ يا مُعِزُّ يا مُذِلُّ يا مُبْدِئُ يا مُعيدُ
கருணையாளனே! தோழனே! பாதுகாவலனே! சூழ்ந்துள்ளவனே! ஆற்றலளிப்பவனே! உதவிசெய்பவனே! கண்ணியம் வழங்குபவனே! இழிவுபடுத்துபவனே! ஆரம்பிப்பவனே! திருப்பி எடுத்துக்கொள்பவனே!

(74) يا مَنْ هُوَ اَحَدٌ بِلا ضِدٍّ يا مَنْ هُوَ فَرْدٌ بِلا نِدٍّ
எதிரியில்லாத ஏகனே! இணையில்லா தனித்தவனே!
يا مَنْ هُوَ صَمَدٌ بِلا عَيْب يا مَنْ هُوَ وِتْرٌ بِلا كَيْف
குறைகளில்லா தேவையற்றவனே! வர்ணிக்க முடியாத ஒருவனே!
يا مَنْ هُوَ قاض بِلا حَيْف يا مَنْ هُوَ رَبٌّ بِلا وَزير
அநீதியிழைக்காத நீதியாளனே! அமைச்சரில்லாத இரட்சகனே!
يا مَنْ هُوَ عَزيزٌ بِلا ذُلٍّ يا مَنْ هُوَ غَنِيٌّ بِلا فَقْر
இழிவில்லா கண்ணியமிக்கவனே! தேவைகளற்ற வளமுடையவனே!
يا مَنْ هُوَ مَلِكٌ بِلا عَزْل يا مَنْ هُوَ مَوْصُوفٌ بِلا شَبيه
நீக்க முடியாத ஆட்சியாளனே! ஒப்பில்லா பண்புகளுடையவனே!

(75) يا مَنْ ذِكْرُهُ شَرَفٌ لِلذّاكِرينَ يا مَنْ شُكْرُهُ فَوْزٌ لِلشّاكِرينَ
ஞாபகிப்பவர்களுக்கு அவனது ஞாபகம் சிறப்பாகுமே அத்தகையவனே! அவனுக்கு நன்றி கூறல் நன்றி தெரிவிப்பவர்களுக்கு வெற்றியாகுமே அத்தகையவனே!

يا مَنْ حَمْدُهُ عِزٌّ لِلْحامِدينَ يا مَنْ طاعَتُهُ نَجاةٌ لِلْمُطيعينَ
அவனது புகழ் புகழ்வோருக்கு கண்ணியமாகுமே அத்தகையவனே! அவனுக்கு அடிபணிதல் அடிபணிந்தோருக்கு வெற்றியாகுமே அத்தகைய(இறை)வனே!
يا مَنْ بابُهُ مَفْتُوحٌ لِلطّالِبينَ يا مَنْ سَبيلُهُ واضِحٌ لِلْمُنيبينَ
அவனிடம் வேண்டிவருவோருக்கு அவனது வாயல் திரந்திருக்குமே அத்தகையவனே! பாவமன்னிப்புக்கேட்டு மீண்டு வருவோருக்கு அவனது பாதை தெளிவாக உள்ளதே அத்தகையவனே!
يا مَنْ آياتُهُ بُرْهانٌ لِلنّاظِرينَ يا مَنْ كِتابُهُ تَذْكِرَةٌ لِلْمُتَّقينَ
பார்வையுள்ளோருக்கு அவனது அடையாளங்கள் ஆதாரமாகுமே அத்தகையவனே! இறையச்சமுள்ளோருக்கு அவனது வேதம் ஞாபகமூட்டலாகுமே அத்தகையவனே!
يا مَنْ رِزْقُهُ عُمُومٌ لِلطّائِعينَ وَالْعاصينَ يا مَنْ رَحْمَتُهُ قَريبٌ مِنَ الْمحْسِنينَ
அடிபணிந்து நடப்பவர்களுக்கும் மாறுசெய்வோருக்கும் அவனது உணவு பொதுவானதே அத்தகையவனே! நல்லோருக்கு அவனது அருள் மிக அருகிலுள்ளதே அத்தகையவனே!

(76) يا مَنْ تَبارَكَ اسْمُهُ يا مَنْ تَعالى جَدُّهُ
தனது பெயர் வளமிக்கவனே! தனது அந்தஸ்து உயர்வானவனே!
يا مَنْ لا اِلـهَ غَيْرُهُ يا مَنْ جَلَّ ثَناؤُهُ
அவனையின்றி வணங்கப்படக்கூடியவர்கள் யாருமற்றவனே! தனது புகழ் அதீதமானவனே!
يا مَنْ تَقَدَّسَتْ اَسْماؤُهُ يا مَنْ يَدُومُ بَقاؤُهُ
தனது பெயர்கள் பரிசுத்தமானவனே! தனது இருப்பு நிலையானவனே!
يا مَنِ الْعَظَمَةُ بَهاؤُهُ يا مَنِ الْكِبْرِياءُ رِداؤُهُ
தனக்கு பாரிய நலவும் அழகும் உள்ளவனே! பெருமிதத்தை தனது ஆடையாகக் கொண்டவனே!

يا مَنْ لا تُحْصى الاؤُهُ يا مَنْ لا تُعَدُّ نَعْماؤُهُ
எண்ணிக்கையிட முடியாத அருட்கொடைகளுக்குரியவனே! கணக்கெடுக்க முடியா அருட்கொடைகளை வழங்குபவனே!

(77) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا مُعينُ يا اَمينُ يا مُبينُ يا مَتينُ يا مَكينُ يا رَشيدُ يا حَميدُ يا مَجيدُ يا شَديدُ يا شَهيدُ
உதவுபவனே! நம்பிக்கையாளனே! வெளிப்படுத்துபவனே! உறுதியானவனே! ஆற்றல் மிக்கவனே! நேர்வழிகாட்டுபவனே! புகழுக்குரியவனே! சிறப்புக்குரியவனே! சக்திமிக்கவனே! சாட்சியாளனே!

(78) يا ذَا الْعَرْشِ الْمَجيدِ يا ذَا الْقَوْلِ السَّديدِ
சிறப்புக்குரிய பெரிய அர்ஷு(சிம்மாசனம்)க்குரியவனே! உறுதியான வார்த்ததைகளுக்கு சொந்தக்காரனே!
يا ذَا الْفِعْلِ الرَّشيدِ يا ذَا الْبَطْشِ الشَّديدِ
நேர்வழிகாட்டும் அழகிய செயலுக்குரியவனே! கடுமையாக தண்டிப்பவனே!
يا ذَا الْوَعْدِ وَالْوَعيدِ يا مَنْ هُوَ الْوَلِيُّ الْحَميدُ
நற்கூலியும் தண்டனையும் வழங்குபவனே! புகழுக்குரிய பொறுப்பாளியே!
يا مَنْ هُوَ فَعّالٌ لِما يُريدُ يا مَنْ هُوَ قَريبٌ غَيْرُ بَعيد
நாடியதை செய்பவனே! தொலைவில்லா நெருக்கமானவனே!
يا مَنْ هُوَ عَلى كُلِّ شَيْء شَهيدٌ يا مَنْ هُوَ لَيْسَ بِظَلاّم لِلْعَبيدِ
அனைத்துக்கும் சாட்சியாய் இருப்பவனே! அடியார்களுக்கு அநீதியிழைக்காதவனே!
(79) يا مَنْ لا شَريكَ لَهُ وَلا وَزيرَ يا مَنْ لا شَبيهَ لَهُ وَلا نَظيرَ
இணையும் அமைச்சரும் இல்லாதவனே! ஒப்பும் உதாரணமும் அற்றவனே!
يا خالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ الْمُنيرِ يا مُغْنِيَ الْبائِسِ الْفَقيرِ
சூரியனையும் ஒளிவீசும் சந்திரனையும் படைத்தவனே! இயலாத ஏழைகளின் தேவைகளை பூர்த்திசெய்பவனே!
يا رازِقَ الْطِّفْلِ الصَّغيرِ يا راحِمَ الشَّيْخِ الْكَبيرِ
சிறு குழந்தைகளுக்கு உணவளிப்பவனே! வயதான பெரியவர்கள் மீது அன்பு காட்டுபவனே!
يا جابِرَ الْعَظْمِ الْكَسيرِ يا عِصْمَةَ الْخآئِفِ الْمُسْتَجيرِ
உடைந்த எலும்புகளை ஒட்டச்செய்பவனே! அஞ்சி அடைக்கலமானவர்களை பாவம் செய்யாமல் பாதுகாப்பவனே!
يا مَنْ هُوَ بِعِبادِهِ خَبيرٌ بَصيرٌ يا مَنْ هُوَ عَلى كُلِّ شَيْء قَديرٌ
தனது அடியார்களைப் பற்றி நன்கறிந்தவனும் அவர்களைப் பார்ப்பவனுமே! அனைத்தின் மீதும் ஆற்றல் மிக்கவனே!

(80) يا ذَا الْجُودِ وَالنِّعَمِ يا ذَا الْفَضْلِ وَالْكَرَمِ
கொடைக்கும் அருளுக்கும் உரித்தானவனே! அன்புக்கும் கொடுக்கலுக்கும் உரியவனே!
يا خالِقَ اللَّوْحِ وَالْقَلَمِ يا بارِئَ الذَّرِّ وَالنَّسَمِ
லவ்ஹுகையும்(ஏடு), கலமையும்(எழுதுகோல்) படைத்தவனே! நுனுக்கமான படைப்புகளையும் மனிதர்களையும் படைத்தவனே!
يا ذَا الْبَأْسِ وَالنِّقَمِ يا مُلْهِمَ الْعَرَبِ وَالْعَجَمِ
கஷ்டங்களை வழங்குவதற்கும் தண்டிப்பதற்கும் உரியவனே! அரபிகளினதும் அரபல்லாதவர்களினதும் உள்ளங்களில் நல்லெண்ணத்தை உதிக்கச் செய்பவனே!
يا كاشِفَ الضُّرِّ وَالْاَلَمِ يا عالِمَ السِّرِّ وَالْهِمَمِ
நெருக்கடிகளையும் வேதனைகளையும் நீக்குபவனே! இரகசியங்களையும் எண்ணங்களையும் அறிந்தவனே!
يا رَبَّ الْبَيْتِ وَالْحَرَمِ يا مَنْ خَلَقَ الْاَشياءَ مِنَ الْعَدَمِ
கஃபாவினதும் ஹரத்தினதும் இரட்சகனே! இல்லாமையிலிருந்து அனைத்தையும் படைத்தவனே!

(81) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا فاعِلُ يا جاعِلُ يا قابِلُ يا كامِلُ يا فاصِلُ يا واصِلُ يا عادِلُ يا غالِبُ يا طالِبُ يا واهِبُ
செயற்படுத்துபவனே! உருவாக்குபவனே! ஏற்றுக்கொள்பவனே! பூரணமானவனே! பிரிப்பவனே! இணைப்பவனே! நீதியாளனே! மிகைப்பவனே! விசாரிப்பவனே! கொடுப்பவனே!

(82) يا مَنْ اَنْعَمَ بِطَوْلِهِ يا مَنْ اَكْرَمَ بِجُودِهِ
ஆற்றலோடு அருட்கொடை வழங்குபவனே! கொடைகொடுப்பது மூலம் நலவு செய்பவனே!
يا مَنْ جادَ بِلُطْفِهِ يا مَنْ تَعَزَّزَ بِقُدْرَتِهِ
தனது அன்பினால் கொடைகொடுப்பவனே! தனது ஆற்றலினால் கண்ணியப்படுத்துபவனே!
يا مَنْ قَدَّرَ بِحِكْمَتِهِ يا مَنْ حَكَمَ بِتَدْبيرِهِ
தனது நுட்பத்தினால் நிர்ணயம் செய்பவனே! தனது நிர்வகிப்பினால் தீர்ப்பளிப்பவனே!
يا مَنْ دَبَّرَ بِعِلْمِهِ يا مَنْ تَجاوَزَ بِحِلْمِهِ
தனது அறிவால் நிர்வாகம் செய்பவனே! தனது பொறுமையினால் மன்னிப்பளித்து கடந்து செல்பவனே!
يا مَنْ دَنا في عُلُوِّهِ يا مَنْ عَلا في دُنُوِّهِ
தனது உயர் அந்தஸ்திலும் மிக நெருக்கமாய் உள்ளவனே! நெருக்கத்திலும் உயர் அந்தஸ்துடையவனே!

(83) يا مَنْ يَخْلُقُ ما يَشاءُ يا مَنْ يَفْعَلُ ما يَشاءُ
நினைப்பதை படைப்பவனே! நாடுபதை செயற்படுத்துபவனே!

يا مَنْ يَهْدي مَنْ يَشاءُ يا مَنْ يُضِلُّ مَنْ يَشاءُ
நாடியோரை நேர்வழிப்படுத்துபவனே! நாடியோரை வழிதவறச் செய்பவனே!
يا مَنْ يُعَذِّبُ مَنْ يَشاءُ يا مَنْ يَغْفِرُ لِمَنْ يَشآءُ
நாடியோருக்கு தண்டனை வழங்குபவனே! நாடியோரை மன்னிப்பவனே!
يا مَنْ يُعِزُّ مَنْ يَشاءِ يا مَنْ يُذِلُّ مَنْ يَشاءُ
நாடியோரை கண்ணியப்படுத்துபவனே! நாடியோரை இழிவுபடுத்துபவனே!
يا مَنْ يُصَوِّرُ فِي الْاَرْحامِ ما يَشاءُ يا مَنْ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشاءُ
தான் நாடியதுபோல் கருவில் உருவமைப்பவனே! தான் நாடியோருக்கு மாத்திரம் தனித்துவமான கருணையை வழங்குபவனே!

(84) يا مَنْ لَمْ يَتَّخِذْ صاحِبَةً وَلا وَلَداً يا مَنْ جَعَلَ لِكُلِّ شَيْء قَدْراً
தனக்கு துணையும் பிள்ளையும் தேர்வுசெய்யாதவனே! அனைத்துக்கும் அளவினை நிர்ணயம் செய்தவனே!
يا مَنْ لا يُشْرِكُ في حُكْمِهِ اَحَداً يا مَنْ جَعَلَ الْمَلائِكَةَ رُسُلاً
தனது கட்டளைகளில் யாரையும் இணையாக வைக்காதவனே! மலக்குகளை தனது தூதினை கொண்டுவருவோர்களாக ஆக்கியவனே!
يا مَنْ جَعَلَ فِي السَّماءِ بُرُوجاً يا مَنْ جَعَلَ الْاَرْضَ قَراراً
வானங்களில் கோபுரங்களை உருவாக்கியவனே! பூமியினை வாழும் தளமாக ஆக்கியுள்ளவனே!
يا مَنْ خَلَقَ مِنَ الْماءِ بَشَراً يا مَنْ جَعَلَ لِكُلِّ شَيْء اَمَداً
மனிதனை தண்ணீரிலிருந்து படைத்தவனே! அனைத்துக்கும் கால வரையறையினை வழங்கியுள்ளவனே!
يا مَنْ اَحاطَ بِكُلِّ شَيْء عِلْماً يا مَنْ اَحْصى كُلَّ شَيْء عَدَداً
அனைத்தையும் தனது அறிவால் சூழ்ந்துள்ளவனே! அனைத்தின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்துள்ளவனே!

(85) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا اَوَّلُ يا آخِرُ يا ظاهِرُ يا باطِنُ يا بَرُّ يا حَقُّ يا فَرْدُ يا وِتْرُ يا صَمَدُ يا سَرْمَدُ
ஆரம்பமானவனே! இறுதியானவனே! வெளிப்படையானவனே! அந்தரங்கமானவனே! நலவுசெய்பவனே! சத்தியமானவனே! தனியானவனே! ஒருவனே! தேவையற்றவனே! நிரந்தரமானவனே!

(86) يا خَيْرَ مَعْرُوف عُرِفَ يا اَفْضَلَ مَعْبُود عُبِدَ
மிகச் சிறந்த நலவாய் அறியப்பட்டுள்ளவனே! வணங்கப்படுவோரில் மிகச்சிறந்தவனாக வணங்கப்படுபவனே!
يا اَجَلَّ مَشْكُور شُكِرَ يا اَعَزَّ مَذْكُور ذُكِرَ
நன்றி செலுத்தப்படுவோரில் மிகவும் உயர்வாக நன்றி செலுத்தப்படுபவனே! ஞாபகிக்கப்படுவோரில் மிக கண்ணியமாக ஞாபகிக்கப்படுபவனே!
يا اَعْلى مَحْمُود حُمِدَ يا اَقْدَمَ مَوْجُود طُلِبَ
புகழப்படுவோரில் உயர்வான புகழுக்குரியவனே! வேண்டப்படுவோரில் மிகவும் பழமைவாய்ந்தவனே!
يا اَرْفَعَ مَوْصُوف وُصِفَ يا اَكْبَرَ مَقْصُود قُصِدَ
வர்ணிக்கப்படுவோரில் மிக உயர்வாக வர்ணிக்கப்படுபவனே! நாட்டம் கொள்ளப்படுவோரில் மிகவும் பெரியவனே!
يا اَكْرَمَ مَسْؤول سُئِلَ يا اَشْرَفَ مَحْبُوب عُلِمَ
கேட்கப்படுவோரில் மிகவும் சங்கைமிக்கவனே!; மிகவும் கண்ணியமிகு நேசிக்கப்படுபவனாக அறியப்பட்டவனே!

(87) يا حَبيبَ الْباكينَ يا سَيِّدَ الْمُتَوَكِّلينَ
அழுவோரின் நேசனே! நம்பிக்கைவைப்போரின் தலைவனே!
يا هادِيَ الْمُضِلّينَ يا وَلِيَّ الْمُؤْمِنينَ
வழிதவறியோரை நேர்வழிப்படுத்துபவனே! முஃமின்களின் பொறுப்பாளியே!
يا اَنيسَ الذّاكِرينَ يا مَفْزَعَ الْمَلْهُوفينَ
ஞாபகிப்போரின் தோழனே! மனமுடைந்தோரின் அடைக்கலமே!
يا مُنْجِيَ الصّادِقينَ يا اَقْدَرَ الْقادِرينَ
உண்மையாளர்களை வெற்றிபெறச் செய்பவனே! ஆற்றலுள்ளோரில் மிகவும் ஆற்றல் மிக்கவனே!
يا اَعْلَمَ الْعالِمينَ يا اِلـهَ الْخَلْقِ اَجْمَعينَ
அறிஞர்களில் மிகவும் அறிந்தவனே! அனைத்துப் படைப்புக்களும் வணங்கும் இறைவனே!

(88) يا مَنْ عَلا فَقَهَرَ يا مَنْ مَلَكَ فَقَدَرَ
உயர் அந்தஸ்தினால் படைப்பினங்களை மிகைப்பவனே! உரிமைகொள்வதினால் ஆற்றல் மிக்கவனே!
يا مَنْ بَطَنَ فَخَبَرَ يا مَنْ عُبِدَ فَشَكَرَ
மறைவாக இருந்து (அனைத்தையும்) நன்கறிபவனே! வணங்கப்படுவதினால் அவர்களுக்கு கூலி வழங்குபவனே!
يا مَنْ عُصِيَ فَغَفَرَ يا مَنْ لا تَحْويهِ الْفِكَرُ
மாறுசெய்யப்பட்டாலும் மன்னிப்பவனே! சிந்தனைகள் அவனை அடைந்தகொள்ள முடியாதே அத்தகையவனே!
يا مَنْ لا يُدْرِكُهُ بَصَرٌ يا مَنْ لا يَخْفى عَلَيْهِ اَثَرٌ
பார்வைகள் அவனை அடைந்த கொள்ள முடியாதே அத்தகையவனே! எந்ததோர் அடையாளமும் அவனுக்க மறைவாய் இல்லையே அத்தகையவனே!
يا رازِقَ الْبَشَرِ يا مُقَدِّرَ كُلِّ قَدَر
மனிதர்களுக்கு உணவளிப்பவனே! அனைத்தையும் நிர்ணயம் செய்பவனே!

(89) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا حافِظُ يا بارِئُ يا ذارِئُ يا باذِخُ يا فارِجُ يا فاتِحُ يا كاشِفُ يا ضامِنُ يا آمِرُ يا ناهي
பாதுகாவலனே! படைப்பவனே! தோற்றுவிப்பவனே! உயர் அந்தஸ்துள்ளவனே! துயரங்களை நீக்குபவனே! வெற்றிபெறுபவனே! வெளிப்படுத்துபவனே! பொறுப்பாளியே! கட்டளையிடுபவனே! தடுப்பவனே!

(90) يا مَنْ لا يَعْلَمُ الْغَيْبَ إلاّ هُوَ يا مَنْ لا يَصْرِفُ السُّوءَ إلاّ هُوَ
மறைவானவற்றை அவனையன்றி வேறு யாரும் அறியமாட்டார்களே அத்தகையவனே! தீங்குகளை அவனையன்றி வேறுயாரும் திருப்பமாட்டார்களே அத்தகையவனே!
يا مَنْ لا يَخْلُقُ الْخَلْقَ إلاّ هُوَ يا مَنْ لا يَغْفِرُ الذَّنْبَ إلاّ هُوَ
அவனையன்றி வேறுயாரும் படைப்பினங்களை படைக்கமாட்டார்களே அத்தகையவனே! பாவங்களை அவனையன்றி வேறு யாரும் பாவங்களை மன்னிக்க மாட்டார்களே அத்தகையவனே!
يا مَنْ لا يُتِمُّ النِّعْمَةَ إلاّ هُوَ يا مَنْ لا يُقَلِّبُ الْقُلُوبَ إلاّ هُوَ
அவனையன்றி அருட்கொடைகளை வேறு யாரும் பூரணப்படுத்த மாட்டார்களே அத்தகையவனே! அவனையன்றி உள்ளங்களை மாற்றம் செய்பவர்கள் வேறு யாருமில்லையே அத்தகையவனே!
يا مَنْ لا يُدَبِّرُ الْاَمْرَ إلاّ هُوَ يا مَنْ لا يُنَزِّلُ الْغَيْثَ إلاّ هُوَ
அவனையன்றி அனைத்து விடயங்களையும் நிர்வகிப்பது வேறு யாருமில்லையே அத்தகையவனே! அவனையன்றி மழையினை வேறு யாரும் இறக்க மாட்டார்களே அத்தகையவனே!
يا مَنْ لا يَبْسُطُ الرِّزْقَ إلاّ هُوَ يا مَنْ لا يُحْيِي الْمَوْتى إلاّ هُوَ
அவகையன்றி உணவினை விருத்து செய்வது வேறு யாருமில்லையே அத்தகையவனே! மரணித்தவர்களை அவனையன்றி வேறு யாரும் உயிர்ப்பிக்க மாட்டார்களே அத்தகையவனே!

(91) يا مُعينَ الْضُعَفاءِ يا صاحِبَ الْغُرَباءِ
பலவீனமானோருக்கு உதவுபவனே! தனிமைப்பட்டோரின் தோழனே!
يا ناصِرَ الْاَوْلِياءِ يا قاهِرَ الْاَعْداءِ
நேசர்களுக்கு உதவுபவனே! எதிரிகளை மிகைப்பவனே!
يا رافِعَ السَّماءِ يا اَنيسَ الْاَصْفِياءِ
வானத்தினை உயர்த்தியவனே! தேர்வு செய்யப்பட்டோரின் நண்பனே!
يا حَبيبَ الْاَتْقِياءِ يا كَنْزَ الْفُقَراءِ
இறையச்சமுள்ளோரின் நேசனே! தேவையுடையோரின் பொக்கிஷமே!
يا اِلـهَ الْاَغْنِياءِ يا اَكْرَمَ الْكُرَماءِ
வளமிக்கவர்களின் இறைவனே! சங்கையுள்ளோரில் மிகவும் சங்கையாளனே!

(92) يا كافِياً مِنْ كُلِّ شَيْء يا قائِماً عَلى كُلِّ شَيْء
அனைத்திலிருந்தும் போதுமானவனே! அனைத்தையும் நிலைபெறச் செய்பவனே!
يا مَنْ لا يُشْبِهُهُ شَيْءٌ يا مَنْ لا يَزيدُ في مُلْكِهِ شَيْءٌ
தனக்கு ஒப்பாய் எதுவுமில்லாதவனே! தன்னாட்சியில் எதுவும் அதிகரிக்காத அத்தகையவனே!
يا مَنْ لا يَخْفى عَلَيْهِ شَيْءٌ يا مَنْ لا يَنْقُصُ مِنْ خَزائِنِهِ شَيْءٌ
தனக்கு மறைவாய் எதுவுமில்லாதவனே! எவ்வித குறைவும் அவனது கஜானாவில் ஏற்படாத கருவூலம் கொண்டவனே!
يا مَنْ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ يا مَنْ لا يَعْزُبُ عَنْ عِلْمِهِ شَيءٌ
அவனைப் போன்று எதுவுமில்லாதவனே! அவனது அறிவின் எல்லையைக் கடந்து எதுவும் இல்லையே அத்தகையவனே!
يا مَنْ هُوَ خَبيرٌ بِكُلِّ شَيْء يا مَنْ وَسِعَتْ رَحْمَتُهُ كُلَّ شَيْء
அனைத்தையும் நன்கறிந்தவனே! அனைத்தையும் அவனது அன்பு சூழ்ந்துள்ளதே அத்தகையவனே!

(93) اَللّـهُمَّ اِنّي اَسْئَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا مُكْرِمُ يا مُطْعِمُ يا مُنْعِمُ يا مُعْطى يا مُغْني يا مُقْني يا مُفْني يا مُحْيي يا مُرْضي يا مُنْجي
சங்கைசெய்பவனே! உணவளிப்பவனே! அருள்பாலிப்பவனே! கொடைவழங்குபவனே! தேவைகளை நிவர்த்திசெய்பவனே! மூலதனம் வழங்குபவனே! அழிப்பவனே! உயிர்ப்பிப்பவனே! திருப்பொருத்தத்தை ஏற்படுத்துபவனே! வெற்றி பெறச் செய்பவனே!

(94) يا اَوَّلَ كُلِّ شَيْء وَآخِرَهُ يا اِلـهَ كُلِّ شَيْء وَمَليكَهُ
அனைத்தின் ஆர்மபமும் இறுதியுமானவனே! அனைத்தின் இறைவனும் அவற்றின் உரிமையாளனுமே!
يا رَبَّ كُلِّ شَيْء وَصانِعَهُ يا بارِئَ كُلِّ شَيْء وَخالِقَهُ
அனைத்தின் இரட்சகனும் அவற்றை தோற்றுவித்தவனுமே! அனைத்தையும் உருவாக்கியவனும் அவற்றை படைத்தவனுமே!
يا قابِضَ كُلِّ شَيْء وَباسِطَهُ يا مُبْدِئَ كُلِّ شَيْء وَمُعيدَهُ
அனைத்தையும் நெருக்கிப்பிடிப்பவனும் அவற்றை விரிவுபடுத்துபவனுமே! அனைத்தையும் ஆரம்பித்தவனும் அவற்றை மீளப் பெறுபவனுமே!
يا مُنْشِئَ كُلِّ شَيْء وَمُقَدِّرَهُ يا مُكَوِّنَ كُلِّ شَيْء وَمُحَوِّلَهُ
அனைத்தையும் உருவாக்கியவனும் அவற்றை நிர்ணயிப்பவனுமே! அனைத்தின் இருப்பையும் ஏற்படுத்தியவனும் அவற்றை மாற்றம் செய்பவனுமே!
يا مُحْيِيَ كُلِّ شَيْء وَمُميتَهُ يا خالِقَ كُلِّ شَيْء وَوارِثَهُ
அனைத்தையும் உயிர்ப்பிப்பவனும் அவற்றை மரணிக்கச் செய்பவனுமே! அனைத்தையும் படைத்தவனும் அவற்றின் வாரிசானவனுமே!

(95) يا خَيْرَ ذاكِر وَمَذْكُور يا خَيْرَ شاكِر وَمَشْكُور
மிகச்சிறந்த ஞாபகிப்பவனும் ஞாபகிக்கப்படுபவனுமே! மிகச்சிறந்த நன்றியாளனும் நன்றி தெரிவிக்கப்படுபவனுமே!

يا خَيْرَ حامِد وَمَحْمُود يا خَيْرَ شاهِد وَمَشْهُود
மிகச்சிறந்த புகழுரைப்பவனும் புகழப்பட்டவனுமே! மிகச்சிறந்த சாட்சியாளனும் சாட்சிசொல்லப்பட்டவனுமே!
يا خَيْرَ داع وَمَدْعُوٍّ يا خَيْرَ مُجيب وَمُجاب
மிகச்சிறந்த அழைப்பாளனும் அழைக்கப்பட்டவனுமே! மிகச்சிறந்த விடையளிப்பவனும் விடையளிக்கப்பட்டவனுமே!
يا خَيْرَ مُؤنِس وَاَنيس يا خَيْرَ صاحِب وَجَليس
மிகச்சிறந்த நண்பனும் நண்பனாக்கப்பட்டவனுமே! மிகச்சிறந்த துணையும் துணையாக்கப்பட்டவனுமே!
يا خَيْرَ مَقْصُود وَمَطْلُوب يا خَيْرَ حَبيب وَمَحْبُوب
மிகச்சிறந்த இலக்கும் வேண்டப்பட்டவனுமே! மிகச்சிறந்த நேசனும் நேசிக்கப்பட்டவனுமே!

(96) يا مَنْ هُوَ لِمَنْ دَعاهُ مُجيبٌ يا مَنْ هُوَ لِمَنْ اَطاعَهُ حَبيبٌ
அழைப்போர் அனைவருக்கும் விடையளிப்பவனே! அடிபணிந்தோர் அனைவருக்கும் நேசனே!
يا مَنْ هُوَ اِلى مَنْ اَحَبَّهُ قَريبٌ يا مَنْ هُوَ بِمَنِ اسْتَحْفَظَهُ رَقيبٌ
நேசிப்போர் அனைவருக்கும் மிக அருகில் இருப்பவனே! பாதுகாப்புத் தோடும் அனைவருக்கும் பாதுகாவலனே!
يا مَنْ هُوَ بِمَنْ رَجاهُ كَريمٌ يا مَنْ هُوَ بِمَنْ عَصاهُ حَليمٌ
நம்பிக்கையோடு வருவோருக்கு அள்ளிவழங்குபவனே! மாறுசெய்தாலும் பொறுமையாய் இருப்பவனே!
يا مَنْ هُوَ في عَظَمَتِهِ رَحيمٌ يا مَنْ هُوَ في حِكْمَتِهِ عَظيمٌ
உயர்ந்த அந்தஸ்திலும் கருணையாளனே! நுட்பமாய் செயற்படுவதில் மகத்துவமிக்கவனே!
يا مَنْ هُوَ في اِحْسانِهِ قَديمٌ يا مَنْ هُوَ بِمَنْ اَرادَهُ عَليمٌ
நலவுசெய்வதில் பழமைமிக்கவனே! அவனை எண்ணியோர் அனைவரையும் அறிந்தவனே!

(97) اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ بِاسْمِكَ
இறைவா! உனது திருநாமங்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகின்றேன்,
يا مُسَبِّبُ يا مُرَغِّبُ يا مُقَلِّبُ يا مُعَقِّبُ يا مُرَتِّبُ يا مُخَوِّفُ يا مُحَذِّرُ يا مُذَكِّرُ يا مُسَخِّرُ يا مُغَيِّرُ
காரணங்களை உருவாக்குபவனே! ஆர்வப்படுத்துபவனே! மாற்றங்களை ஏற்படுத்துபவனே! பிற்போடவைப்பவனே! ஒழுங்கு படுத்துபவனே! அச்சம் கொள்ளச் செய்பவனே! எச்சரிக்கை செய்பவனே! ஞாபகமூட்டுபவனே! வசப்படுத்துபவனே! மாற்றம் செய்பவனே!

(98) يا مَنْ عِلْمُهُ سابِقٌ يا مَنْ وَعْدُهُ صادِقٌ
அனைத்து உருவாக்கத்திற்கும் முன்னர் அவனது அறிவு உள்ளவனே! வாக்குகள் உண்மையாய் உள்ளவனே!
يا مَنْ لُطْفُهُ ظاهِرٌ يا مَنْ اَمْرُهُ غالِبٌ
வெளிப்படையான கருணையுடையவனே! அனைத்தையும் அவனது கட்டளைகள் மிகைத்தவனே!
يا مَنْ كِتابُهُ مُحْكَمٌ يا مَنْ قَضاؤُهُ كأئِنٌ
நுட்பமான வேதமுடையவனே! நடந்தேறும் தீர்ப்புடையவனே!
يا مَنْ قُرْانُهُ مَجيدٌ يا مَنْ مُلْكُهُ قَديمٌ
மகத்தான குர்ஆனுடையவனே! பழமைமிகு ஆட்சியுடையவனே!
يا مَنْ فَضْلُهُ عَميمٌ يا مَنْ عَرْشُهُ عَظيمٌ
பொதுவான கொடையுடையவனே! மிகப்பெரும் அர்ஷுடையவனே!

(99) يا مَنْ لا يَشْغَلُهُ سَمْعٌ عَنْ سَمْع يا مَنْ لا يَمْنَعُهُ فِعْلٌ عَنْ فِعْل
ஒன்றை செவிமடுப்பது பிற ஒன்றை செவிமடுப்பதை தடுக்காதே அத்தகையவனே! ஒரு செயல் மற்றைய செயலை செய்வதைத் தடுக்காதே அத்தகையவனே!
يا مَنْ لا يُلْهيهِ قَوْلٌ عَنْ قَوْل يا مَنْ لا يُغَلِّطُهُ سُؤالٌ عَنْ سُؤال
ஒரு பேச்சு மற்றோர் பேச்சை இடையூரு செய்யாதே அத்தகையவனே! ஒருவரின் வேண்டுதல் பிறரின் வேண்டுதலோடு தவறாக விளங்கிக் கொள்ளப்படாதே அத்தகையவனே!
يا مَنْ لا يَحْجُبُهُ شَيْءٌ عَنْ شَيْء يا مَنْ لا يُبْرِمُهُ اِلْحاحُ الْمُلِحّينَ
ஒன்று பிற ஒன்றுக்கு திரையாக அமையாதே அத்தகையவனே! விடாப்பிடியாய் கேட்பது வேதனையை ஏற்படுத்தாதே அத்தகையவனே!
يا مَنْ هُوَ غايَةُ مُرادِ الْمُريدينَ يا مَنْ هُوَ مُنْتَهى هِمَمِ الْعارِفينَ
நாட்டம் கொண்டோரின் இறுதி இலக்கானவனே! மெய்ஞ்ஞானிகளின் இறுதி நோக்கே!
يا مَنْ هُوَ مُنْتَهى طَلَبِ الطّالِبينَ يا مَنْ لا يَخْفى عَلَيْهِ ذَرَّةٌ فِي الْعالَمينَ
வேண்டுவோரின் இறுதி வேண்டுதலே! உலகில் ஓர் அணு கூட அவனுக்கு மறைவாய் இல்லையே அத்தகையவனே!

(100) يا حَليماً لا يَعْجَلُ يا جَواداً لا يَبْخَلُ
அவசரமில்லாத பொறுமையாளனே! கஞ்சத்தனமில்லாத கொடையாளனே!
يا صادِقاً لا يُخْلِفُ يا وَهّاباً لا يَمَلُّ
வாக்கை மீறாத வாய்மையாளனே! களைப்படையாத கொடையாளனே!
يا قاهِراً لا يُغْلَبُ يا عَظيماً لا يُوصَفُ
தோல்வி ஏற்படாத வெற்றியாளனே! வர்ணிக்க முடியாத பெருந்தன்மை மிக்கவனே!
يا عَدْلاً لا يَحيفُ يا غَنِيّاً لا يَفْتَقِرُ
அநீதியிழைக்காத நீதியாளனே! தேவைகள் ஏற்படாத வளம்கொண்டவனே!
يا كَبيراً لا يَصْغُرُ يا حافِظاً لا يَغْفُلُ
சிறுமையாகாத பெரியவனே! அலட்சியம் ஏற்படாத பாதுகாவலனே!

سُبْحانَكَ يا لا اِلـهَ إلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.
(இறiவா!) நீ தூய்மையானவன் உன்னையன்றி வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை;! எனக்கு அபயமளிப்பாயாக! எனக்கு அபயமளிப்பாயாகாயாக! , என் இரட்சகனே! நரக நெருப்பிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக!

 

Publications