ஷஃபான் மாதத்தின் சிறப்பும் அதில் செய்யப்பட வேண்டிய அமல்களும்

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஷஃபான் மாதத்தின் சிறப்பும் அதில் செய்யப்பட வேண்டிய அமல்களும்

 


ஷஃபான் மிகவும் சிறப்பும் கண்ணியமும் நிறைந்த மாதமாகும். இம்மாதம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மாதம் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதம் பற்றி கூறுகையில் 'ஷஃபான் எனது மாதமாகும். யார் எனது மாதத்தில் ஒரு நோன்பினை நோற்கின்றாரோ அவருக்கு சுவர்க்கம் கடமையாக்கப்படுகின்றது. யார் இரண்டு நோன்புகளை நோற்கின்றாரோ அவர் மறுமையில் நபிமார்களோடும் உண்மையாளர்களோடும் இருப்பார்'

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ' ஷஃபான் மாதம் வந்துவிட்டால் இமாம் ஸைனுல்ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது தோழர்களை அழைத்து இவ்வாறு கூறுவார்கள் : 'எனது தோழர்களே! இது என்ன மாதம் என்று அறிவீர்களா? இது ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தினைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் : ' நிச்சயமாக ஷஃபான் எனது மாதமாகும். உங்களது நபியின் மீதான அன்புக்காக வேண்டியும், உமது இறைவனை நெருங்குவதற்காகவும் இம்மாதத்தில் நோன்புவையுங்கள்'. அலீ பின் ஹுஸைனான எனது ஆத்மா எவனிடமுள்ளதோ அவன் மீது ஆணையாக! எனது தந்தை இமாம் ஹுஸைன் பின் அலீ அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள் இதனைக் கூற கேட்டுள்ளேன் : 'யார் ஷஃபான் மாதத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதான அன்பிலும், இறைவனை நெருங்குவதற்காகவும் நோன்பு நோற்கின்றாரோ ,அவரை இறைவன் நேசிக்கின்றான், மேலும் மறுமையில் அவரை அவனது சங்கைகளின் அருகில் நெருங்கச் செய்கின்றான், மேலும் அவருக்கு சுவனத்தினை கடமையாக்குகின்றான்'.
கண்ணியமிகு ஷஃபான் மாதம் இஸ்லாமிய வரலாற்றில் பல வகையான நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு என்னவெனில் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் அபுல் பழ்ல் அப்பாஸ் பின் அலீ அலைஹிமுஸ்ஸலாம் , இமாம் அலீ பின் ஹுஸைன் ஸைனுல் ஆபிதீன் அலைஹிமுஸ்ஸலாம் , ஹஸ்ரத் அலீ அக்பர் பின் ஹுஸைன் அலைஹிமுஸ்ஸலாம் மற்றும் காலத்தின் இமாம் - இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் பிறந்த தினங்களாகும். இம்மாதத்தில் பரிசுத்தமான மூன்று இமாம்களின் பிறந்ததினம் இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளாகும். அதிலும் குறிப்பாக எமது காலத்தின் இமாமான இமாம் முஹம்மது பின் ஹஸன் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பாகும்.

ஹதீஸ்கலை வல்லுனர் மர்ஹும் முஹத்திஸ் கும்மி அவர்கள் இமாம் ஹஸன் அஸ்கரீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அல்குர்ஆன் விரிவுரையிலிருந்து ஷஃபான் மாதத்தின் சிறப்பினைப் பற்றி ஓர் ஹதீஸினை அறிவிப்புச் செய்கின்றார்கள். அந்த ஹதீஸ் ஷஃபான் மாதம் முழுவதும் கொண்டுள்ள சிறப்பினை விபரிக்கின்றது. மிகவும் நீண்டதோர் ஹதீஸாகும். அதன் இரத்தினச் சுருக்கத்தினை இங்கு தருகின்றோம்.
அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஃபான் மாதத்தின் முதலாம் நாள் பள்ளியில் ஓர் குழுவினர் அமர்ந்து கொண்டு வீணான பேச்சுக்களை பேசுவதை அவதானித்தார்கள். திடீரென அவர்கள் கழா-கத்ர் பற்றி பேசத்தொடங்கினர். இமாம் அவர்கள் , அங்கிருந்தவர்களிடம் 'வீணான இந்தப் பேச்சுக்களை விட்டுவிடுங்கள். இன்று ஷஃபான் மாதத்தின் முதலாம் நாளாகும். இது நலவுகளினதும் , நல்லமல்களினதும் மையமாக இருப்பதினால் இதற்கு ஷஃபான் என்று பெயரிடப்பட்டுள்ளது. தொழுகை, ஸகாத், நன்மையை ஏவி – தீமையினைத் தடுத்தல் போன்ற நல்லமல்களும், பெற்றோர் , அயலவர்களுக்கு நலவுசெய்தல் போன்றவையும், தேவையுடையவர்களுக்கு ஸதகா செய்தல் போன்ற அமல்களினதும் மையமாக இது உள்ளது'. இமாமவர்கள் இதைத் தொடர்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக பின்வரும் ஹதீஸினை குறிப்பிட்டார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஷஃபான் மாதத்தின் முதலாம் நாள் வந்துவிட்டால் இறைவன் சுவனத்து வாயல்களைத் திறக்குமாறு கட்டளையிடுகின்றான். மேலும் தூபா எனும் மரத்தின் கிளைகளை உலக மக்களுக்கு அருகாமையில் கொண்டு செல்லுமாறும் கட்டளையிடுகின்றான். இறைவனது புறத்திலிருந்து ஓர் அழைப்பாளர் 'இது தூபா மரத்தின் கிளைகளாகும், இப்போது உங்களிடமுள்ளது. அவற்றைப் பற்றிப்பிடியுங்கள் உங்களை சுவனத்தினை நோக்கி கொண்டுசெல்லும். சக்கூம் மரக்கிளையினை விட்டும் தூரமாகுங்கள்.ஏனெனில் அது உங்களை நரகை நோக்கி அழைத்துச் செல்லும்'. மேலும் நபியவர்கள் கூறினார்கள் ' என்னை தூதராக அனுப்பிய அந்த இறைவன் மீது ஆணையாக! யார் இம்மாதத்தில் ஓர் நல்லமலினை செய்கின்றாரோ அவர் தூபா மரத்தின் கிளைகளில் ஒன்றைப் பிடித்துவிட்டார், அது அவரை சுவனத்துக்கு அழைத்துச் செல்லும். யாரொருவர் தீமையான ஓர் செயலின் பின்னால் செல்கின்றாரோ அவர் சக்கூமின் கிளைகளில் ஒன்றைப் பிடித்துவிட்டார். அது அவரை நரகிற்கு அழைத்துச்செல்லும்'.
பின்பு நபியவர்கள் தூபா மரத்தின் கிளைகளுக்குரிய நல்லமல்களுக்கு உதாரணம் கூறினார்கள்:
'யார் இம்மாதத்தில் கடமையான தொழுகைகளோடு , முஸ்தஹப்பான தொழுகைகளையும் தொழுகின்றாரோ, அல்லது நோன்பு நோற்கின்றாரோ, அல்லது கணவன்- மனைவி , பெற்றோர்- பிள்ளைகள், குடும்பத்தினர்கள் , அல்லது அயலவர்களுக்கு மத்தியில் சமாதானத்தினையும் நல்லுறவினையும் ஏற்படுத்துகின்றாரோ அவர் தூபா மரக்கிளையினைப் பிடித்துவிட்டார்'.
மேலும் கூறினார்கள்: ' என்னை தூதராக அனுப்பிய அந்த இறைவன் மீது ஆணையாக! யார் இம்மாதத்தில் தீமைகளின் பின்னால் செல்கின்றாரோ , அவர் சக்கூமில் தொங்குகின்றார். அது அவரை நரகுக்கு இட்டுச்செல்லும்.யார் கடமையான தொழுகைகளில் அலட்சியமாக இருக்கின்றாரோ, அல்லது ஓர் தேவையுடையவர் அவரிடம் வந்து தனது தேவைகளைக் கூறி, அதனை நிறைவேற்றும் சக்தியிருந்தும் அதனை நிறைவேற்றாமல் இருந்தால், அல்லது கடனைத் திருப்பித் தர முடியாத கடனாளியின் உரிய காரணத்தினை அங்கீகரிக்கவில்லை என்றால், அல்லது கணவன்- மனைவி , பெற்றோர்- பிள்ளைகள், குடும்பத்தினர்கள் , அல்லது அயலவர்களுக்கு மத்தியில் பிரச்சினைகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தினால், அல்லது பிறருக்கு தான் கொடுக்க வேண்டிய கடனை தான் வாங்கவில்லை என்று பொய்யுரைத்தால், அல்லது அநாதைகளை அரவணைக்காமல் விட்டால், அல்லது வீணான இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், அல்லது தான் பிறருக்கு செய்த அநீதிகள், தனது பாவங்களை எண்ணிக்கையிட்டு மகிழ்ந்தால், அல்லது நோயாளியான தனது அன்டைவீட்டாரை சுகம் விசாரிக்காமலிருந்தால், அல்லது தனது பெற்றோரை துன்பப்படுத்தினால்,...இவை அனைத்தும் சக்கூம் மரக்கிளைகளாகும். அவரை நரகுக்கு இட்டுச்செல்லும்'.

இந்த ஹதீஸ் மிகவும் அழகிய முறையில் உதாரணங்களோடு எது சிறந்தவழி என்பதை எமக்கு தெளிவுபடுத்துகின்றது.

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டிய அமல்கள்
ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டிய அமல்களை இருவகையாக நோக்கலாம் .
1. பொதுவான அமல்கள்.
2. குறிப்பிட்ட தினங்களுக்கான அமல்கள்.

பொதுவான அமல்கள்
1. நோன்பு நோற்றல்: இம்மாதத்தில் நோன்பு நோற்றல் மிகவும் வேண்டிக்கொள்ளப்பட்ட சுன்னத்தான ஓர் விடயமாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் நோன்பு நோற்று, அதனை புனித ரமழான் நோன்போடு ஒன்றிணைத்தார்கள்.
ஷஃபான் மாத நோன்பின் சிறப்பு பற்றி பல ஹதீஸ்கள் உள்ளன . அவற்றில் சில:
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஷஃபான் எனது மாதமாகும். ரமழான் இறைவனது மாதமாகும். யார் எனது மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ, நான் அவருக்கு மறுமையில் இறைவனிடம் பரிந்துரை செய்வேன். யார் இரண்டு நோன்புகளை நோற்கின்றாரோ , இறைவன் அவரது கடந்த கால அனைத்து பாவங்களையும் மன்னிக்கின்றான். மேலும் யார் மூன்று நோன்பினை நோற்கின்றாரோ , அவரிடம் உனது செயல்களை முதலிலிருந்து ஆரம்பி(உனது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது) எனக் கூறப்படும்'.

 ஸப்வான் ஜம்மால் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னிடம் கூறினார்கள் 'உம்மை சூழ உள்ளவர்களை ஷஃபான் மாதத்தில் நோன்பு பிடிக்குமாறு வலியுறுத்து!' நான் இமாமவர்களிடம் 'உங்களுக்கு நான் சமர்ப்பணம் , இதற்கு அத்தனை சிறப்புண்டோ ?!| எனக்கேட்டேன். அதற்கு இமாம் அவர்கள் ' ஆம் , நபியவர்கள் ஷஃபான் பிறை தென்பட்டதும் ஒருவரை மதீனாவில் இவ்வாறு கூறுமாறு கட்டளையிடுவார்கள்: ' யத்ரீப் வாசிகளே! நான் இறைத்தூதராவேன், இது எனது மாதமாகும். இம்மாதத்தில் (நோன்பு நோற்பதன் மூலம் ) எனக்கு உதவுபவருக்கு இறைவன் அருள்புரியட்டும்'. இமாமவர்கள் தொடர்ச்சியாக கூறினார்கள்: ' அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : 'இந்தக் கூற்றினை நான் எப்போது செவியுற்றேனோ , அன்றிலிருந்து ஷஃபான் நோன்பினை நான் தவறவிட்டதில்லை. இன்ஷாஅல்லாஹ் நான் உயிரோடு உள்ள காலம் வரை அதனை தவறவிடமாட்டேன்'.

2. இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஹதீஸின் பிரகாரம் ஒவ்வொரு நாளும் எழுபது முறை
أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَسْأَلُهُ التَّوْبَةَ

3. ஒவ்வொரு நாளும் எழுபது முறை
أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِي لَاإِلٰهَ إِلّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيمُ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوبُ إِلَيْهِ
ஹதீஸ்களின் பிரகாரம் தெளிவாகுவது என்னவெனில் இம்மாதத்தில் மிகவும் சிறந்த அமல் பாவமன்னிப்புத் தேடுவதாகும். இம்மாதத்தில் எழுபது முறை பாவமன்னிப்புத் தேடுவது மற்றைய மாதங்களில் எழுபதாயிரம் தடவை பாவமன்னிப்புத் தேடுவதற்கு சமமாகும்.

4. ஸதகா கொடுத்தல்: இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இம்மாதத்தில் மிகவும் சிறந்த அமல் எது ? என வினவப்பட்டது. அதற்கு இமாம் அவர்கள் 'ஸதகா கொடுத்தல் மற்றும் பாவமன்னிப்புத் தேடல்ளூ யார் இம்மாதத்தில் ஸதகா கொடுக்கின்றாரோ , அவரது ஸதகாவினை இறைவன் அபிவிருத்தியடையச் செய்கின்றான். நீங்கள் ஒட்டகக் குட்டியினை வளர்ப்பது போல்.அதனை மறுமையில் உரியவரிடம் அவன் ஒப்படைக்கின்றான். அது உஹது மலையைவிட பெரியதாக இருக்கும்'.
இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஹதீஸின் பிரகாரம் இம்மாதத்தில் ஸதகா கொடுத்தல் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான காரணமாக அமைகின்றது.

5. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஸலவாத் கூறுதல்ளூ நபியவர்கள் கூறியதாக இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'ஷஃபான் எனது மாதமாகும், இந்த மாதத்தில் என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் அதிகமாக ஸலவாத் கூறுங்கள்'.


6. இம்மாதம் முழுவதும் ஆயிரம் தடவை
لَاإِلٰهَ إِلّا اللّٰهُ، وَلا نَعْبُدُ إِلّا إِيَّاهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
இவ்வாறு கூறவேண்டும். நபியவர்கள் கூறியுள்ளார்கள் 'யார் இவ்வாறு செய்கின்றாரோ , அவர் மறுமையில் பௌர்ணமி நிலவு போன்று ஒளி வீசியவராக மண்ணறையிலிருந்து எழுப்பப்படுவார்'.

7. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரண்டு ரக்அத் தொழுகை
உண்டு. ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திகாவிற்குப் பின் , நூறு தடவை சூரா இக்லாஸை ஓத வேண்டும். ஸலாம் கொடுத்து தொழுகை முடிந்ததும் நூறு முறை ஸலவாத் கூற வேண்டும். நபியவர்களிடமிருந்து இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'யார் இந்தத் தொழுகையினை தொழுகின்றாரோ, இறைவன் அவரது மார்க்க , மற்றும் உலகளாவிய தேவைகளையும் நிறைவேற்றுகின்றான். அத்தினத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ , இறைவன் நரகத்தினை அவருக்கு தடைவிதிக்கின்றான்'.
இந்த ஹதீஸின் தொடரில் நபியவர்கள் கூறுகின்றார்கள் 'ஷஃபான் மாதம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் , வானத்தினை மலக்குகள் அழகுபடுத்துகின்றனர், மேலும்; கூறுகின்றனர் 'இறைவா! இம்மாதத்தில் நோன்பு நோற்றோரின் பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களது பிரார்த்தனையையும் அங்கீகரிப்பாயாக!'.

8. ஷஃபான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் , சூரியன் நடு
உச்சியை கடந்து சென்றதும் (ளுகர் தொழுகையின் நேரம்), மேலும் இரவின் நடுப்பகுதியிலும் கீழ் வரும் ஸலவாத்தினை ஓத வேண்டும். இது இமாம் ஸைனுல் ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஸலவாத்தாகும்.

اللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ
இறைவா! நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஸலவாத்து கூறுவாயாக!

شَجَرَةِ النُّبُوَّةِ، وَمَوضِعِ الرِّسالَةِ، وَمُخْتَلَفِ الْمَلائِكَةِ، وَمَعْدِنِ الْعِلْمِ، وَأَهْلِ بَيْتِ الْوَحْىِ
அவர்கள் நபித்துவத்தின் விருட்சகமாவார்கள்;, இறைத்தூதுத்துவத்தின் தலமும் மலக்குமார்கள் வந்து செல்லும் இடமுமாவார்கள், அவர்கள் அறிவின் பொக்கிஷம் , வஹி (அருளப்பட்ட) வீட்டுக்குரியவர்கள் அவர்கள்.

اللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ
இறைவா! நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஸலவாத்து கூறுவாயாக!

الْفُلْكِ الْجارِيَةِ فِى اللُّجَجِ الْغامِرَةِ، يَأْمَنُ مَنْ رَكِبَها، وَيَغْرَقُ مَنْ تَرَكَهَا،
அவர்கள் ஆழமான சமுத்திரங்களில் பயணிக்கும் கப்பலாவார்கள், யார் அதில் ஏறுகின்றார்களோ அவர்கள் மூழ்காமல் பாதுகாக்கப்படுவர், யார் அதில் ஏறவில்லையோ அவர்கள் மூழ்கிவிடுவர்.

الْمُتَقَدِّمُ لَهُمْ مارِقٌ، وَالْمُتَأَخِّرُ عَنْهُمْ زاهِقٌ، وَاللَّازِمُ لَهُمْ لاحِقٌ
யார் அவர்களை முந்திச் செல்கின்றார்களோ அவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிடுவர், யார் அவர்களை விட்டும் பின்தங்கிவிடுகின்றார்களோ அவர்கள் அழிந்துவிடுவர்;, மேலும் யார் அவர்களோடு ஒன்றாய்ச்சேர்ந்து பயணிக்கின்றார்களோ அவர்களோடு சத்தியத்தில் இணைந்துவிடுவர்.
اللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ
இறைவா! நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஸலவாத்து கூறுவாயாக!

الْكَهْفِ الْحَصِينِ، وَغِياثِ الْمُضْطَرِّ الْمُسْتَكِينِ، وَمَلْجَاَ الْهارِبِينَ، وَعِصْمَةِ الْمُعْتَصِمِينَ .
அவர்கள் பாதுகாப்பு அரணாவார்கள், துன்பங்களிலும் துயரங்களிலும் உள்ளவர்களுக்கு உதவுபவர்கள், தஞ்சம் என்று வருவோருக்கு அடைக்கலம் அவர்கள், பாவங்களை விட்டும் தூரமாவோருக்கு பாதுகாவலர்கள் அவர்கள்.

اللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ
இறைவா! நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஸலவாத்து கூறுவாயாக!

صَلاةً كَثِيرَةً تَكُونُ لَهُمْ رِضاً، وَ لِحَقِّ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ أَداءً وَقَضاءً بِحَوْلٍ مِنْكَ وَقُوَّةٍ يَا رَبَّ الْعالَمِينَ .
திருப்பொருத்தத்தைப் பெறும் அளவிற்கு அதிகமான ஸலவாத் அவர்கள் மீது உண்டாகட்டும், மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் அவர்கள் மீதான எங்களது நன்றிக் கடன் நிறைவேறட்டும் , உனது சக்தியினாலும் நாட்டத்தினாலும் , உலகத்தாரின் இரட்சகனாகிய உனது ஆற்றலினாலும்.

اللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ
இறைவா! நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஸலவாத்து கூறுவாயாக!

الطَّيِّبِينَ الْأَبْرارِ الْأَخْيارِ، الَّذِينَ أَوْجَبْتَ حُقُوقَهُمْ، وَفَرَضْتَ طاعَتَهُمْ وَوِلايَتَهُمْ
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட , மிகவும் தூய்மையான நல்லவர்கள், அவர்களின் உரிமைகளை பேணிக் கொள்வதையும் அவர்களைப் பின்பற்றி நேசிப்பதினையும் எங்கள் மீது கடமையாக்கியுள்ளாய்.

اللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ
இறைவா! நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஸலவாத்து கூறுவாயாக!

وَاعْمُرْ قَلْبِى بِطاعَتِكَ، وَلَا تُخْزِنِى بِمَعْصِيَتِكَ،
எனது உள்ளத்தினை உன்னை வணங்குவதற்காக உயிர்ப்பித்துவிடுவாயாக! உனக்கு மாறு செய்வதன் மூலம் என்னை இழிவுபடுத்திவிடாதே!

وَارْزُقْنِى مُواساةَ مَنْ قَتَّرْتَ عَلَيْهِ مِنْ رِزْقِكَ؛ بِما وَسَّعْتَ عَلَىَّ مِنْ فَضْلِكَ،
உனது கொடையினை எனக்கு தந்தருள் அதனால் நான் உனது உணவினை பெறுவதில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் என் மீது விரிவுபடுத்திய உன் அருளிலிருந்து கொடுப்பதற்கும் எனக்கு அருள்புரிவாயாக!

وَنَشَرْتَ عَلَىَّ مِنْ عَدْلِكَ، وَأَحْيَيْتَنِى تَحْتَ ظِلِّكَ،
நீ என்மீது உன் நீதியினை வியாபிக்கச் செய்தாய். என்னை உன் நிழலில் வாழவைத்தாய்!

وَهٰذا شَهْرُ نَبِيِّكَ سَيِّدِ رُسُلِكَ شَعْبانُ الَّذِى حَفَفْتَهُ مِنْكَ بِالرَّحْمَةِ وَالرِّضْوانِ
உனது இறைத்தூதர்களின் தலைவரான (முஹம்மது) நபியின் மாதமிது. உனது திருப்பொருத்தத்தினையும் அருளினையும் அதனுள் நீ வைத்துள்ள ஷஃபான் மாதம்.
الَّذِى كانَ رَسُولُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ يَدْأَبُ فِى صِيامِهِ وَقِيامِهِ
இம்மாதத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதிலும் இறைவனை நின்று வணங்குவதிலும் கழித்தார்கள்.

فِى لَيالِيهِ وَأَيَّامِهِ بُخُوعاً لَكَ فِى إِكْرامِهِ وَ إِعْظامِهِ إِلىٰ مَحَلِّ حِمامِهِ
இதன் இரவிலும், பகலிலும் உனக்கு அடிபணிந்தவராக , அவரது மரணம் வரை இம்மாதத்தினை சங்கைப்படுத்தினார்கள்.

اللّٰهُمَّ فَأَعِنَّا عَلَى الاسْتِنانِ بِسُنَّتِهِ فِيهِ، وَنَيْلِ الشَّفاعَةِ لَدَيْهِ .
இறைவா! அவரது வழிமுறையினை இம்மாதத்தில் பின்பற்றி , அவரது ஷபாஅத் எனும் பரிந்துரையை மறுமையில் நாங்களும் அடைய அருள் புரிவாயாக!

اللّٰهُمَّ وَاجْعَلْهُ لِى شَفِيعاً مُشَفَّعاً، وَطَرِيقاً إِلَيْكَ مَهْيَعاً،
இறைவா! ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷபாஅத்துடைய அவரை எனக்கு பரிந்துரைப்பவராக ஆக்கியருள்வாயாக! , மேலும் அவரோடு பயணித்து உன்னை அடையவைப்பாயாக!

وَاجْعَلْنِى لَهُ مُتَّبِعاً حَتّىٰ أَلْقاكَ يَوْمَ الْقِيامَةِ عَنِّى راضِياً، وَعَنْ ذُنُوبِى غاضِياً،
நீ என்னைப் பொருந்திக்கொண்டவனாகவும், எனது பாவங்களை கண்டுகொள்ளாதவனாகவும் மறுமையில் உன்னை சந்திக்கும் வரை அவரை பின்பற்றி வாழ்பவனாக என்னை ஆக்குவாயாக! ,

قَدْ أَوْجَبْتَ لِى مِنْكَ الرَّحْمَةَ وَالرِّضْوانَ، وَأَنْزَلْتَنِى دارَ الْقَرارِ وَمَحَلَّ الْأَخْيارِ
உனது அருளினையும் திருப்பொருத்தத்தினையும் எனக்கு கடமையாக்கி, நல்லோர்களும் நீ தெரிவுசெய்தோர்களும் உள்ள நிரந்தர இடமான சுவனத்தில் என்னையும் வாழவைப்பாயாக!


9. முனாஜாத் ஷஃபானிய்யா : அமீருல் முஃமினீன் இமாம் அலீ
அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிரார்த்தனையாகும். ஷஃபான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டும். இதனை இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவரது பிள்ளைகளான ஏனைய இமாம்களும் ஓதியதாக செய்யித் பின் தாவூஸ் அவர்கள் இக்பால் என்ற நூலில் அறிவித்துள்ளார்கள். இதிலிருந்து ஒன்றினை நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது , அது என்னவெனில் அனைத்து பரிசுத்தமான இமாம்களும் இதனை ஓதிவந்துள்ளார்கள். எனவே , இந்த முனாஜாத் மிகவும் பெறுமதிவாய்ந்ததும் , மிகவும் சிறப்புமிக்கதும் என்பதற்கு இதுவே போதுமாகும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
இறைத்தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
وَ اسْمَعْ دُعَائِي إِذَا دَعَوْتُكَ وَ اسْمَعْ نِدَائِي إِذَا نَادَيْتُكَ‏
நான் உன்னை அழைக்கும் போது எனது அழைப்பினை செவிமடுப்பாயாக! நான் உன்னிடம் இறைஞ்சுகின்ற போது நீ எனது இறைஞ்சுதலை கேட்பாயாக!
وَ أَقْبِلْ عَلَيَّ إِذَا نَاجَيْتُكَ فَقَدْ هَرَبْتُ إِلَيْكَ وَ وَقَفْتُ بَيْنَ يَدَيْكَ مُسْتَكِيناً لَكَ مُتَضَرِّعاً إِلَيْكَ‏
உன்னை இரகசியமாக அழைக்கும் போது எனது அழைப்பினை ஏற்பாயாக! (ஏனெனில்) நான் உன்னிடம் ஓடிவந்துள்ளேன் , மேலும் உன்னளவில் தேவையுடையவனாகவும்; உன்னிடம் மன்றாடிக் கேட்பவனாகவும் இருக்;கின்றேன்.
رَاجِياً لِمَا لَدَيْكَ ثَوَابِي وَ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَ تَخْبُرُ حَاجَتِي وَ تَعْرِفُ ضَمِيرِي‏
உன்னிடத்தில் எனது கூலியினை எதிர்பார்த்தவனாக இருக்கிறேன். மேலும் எனது உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். எனது தேவைகளையும் நீ அறிவாய். எனது மறைவான அனைத்தையும் நீ நன்கறிவாய்.
وَ لاَ يَخْفَى عَلَيْكَ أَمْرُ مُنْقَلَبِي وَ مَثْوَايَ‏
எனது நிலையும் நான் செல்லுமிடம் (மறுமை) பற்றிய விடயமும் உனக்கு மறைவாகவில்லை.
وَ مَا أُرِيدُ أَنْ أُبْدِئَ بِهِ مِنْ مَنْطِقِي وَ أَتَفَوَّهَ بِهِ مِنْ طَلِبَتِي وَ أَرْجُوهُ لِعَاقِبَتِي‏
நான் உன்னிடம் பேச விரும்புவதும் , நான் உன்னிடம் தேவையென்று வேண்ட நினைப்பதும், எனது முடிவு நல்லபடியாக அமைய வேண்டுமென்று எதிர்பார்த்திருப்பதும் அனைத்தும் உனக்கு மறைக்கப்பட்டதல்ல.
وَ قَدْ جَرَتْ مَقَادِيرُكَ عَلَيَّ يَا سَيِّدِي فِيمَا يَكُونُ مِنِّي إِلَى آخِرِ عُمْرِي‏
مِنْ سَرِيرَتِي وَ عَلاَنِيَتِي وَ بِيَدِكَ لاَ بِيَدِ غَيْرِكَ زِيَادَتِي وَ نَقْصِي وَ نَفْعِي وَ ضَرِّي‏
என் எஜமானனே! எனக்கு நீ விதித்திருப்பவையும் எனது வாழ்வின் இறுதிவரை எனக்காக நீ நாடியிருப்பதும் எனக்கு இரகசியமாகவும் பரகசியமாகவும் நடப்பவைகள் (யாவும்) உன்னையன்றி வேறு எவரினதும் கையிலில்லை. எனது குறைவும் நிறைவும் நன்மையும் தீமையும் அவ்வாறே!.


إِلَهِي إِنْ حَرَمْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَرْزُقُنِي وَ إِنْ خَذَلْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُنِي‏
என் வணக்கத்துக்குறியவனே! நீ உனது அருளினை எனக்கு தடுத்துவிட்டால் யார் எனக்கு உணவளிப்பார்?, மேலும் நீ என்னை இழிவுபடுத்தி விட்டால் யார் எனக்கு உதவுவார்?
إِلَهِي أَعُوذُ بِكَ مِنْ غَضَبِكَ وَ حُلُولِ سَخَطِكَ‏
என் இறைவா! உனது கோபத்திலிருந்தும் , உன்னிடமிருந்து இறங்கி வரும் வேதனையிலிருந்தும் உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றேன்.
إِلَهِي إِنْ كُنْتُ غَيْرَ مُسْتَأْهِلٍ لِرَحْمَتِكَ فَأَنْتَ أَهْلٌ أَنْ تَجُودَ عَلَيَّ بِفَضْلِ سَعَتِكَ‏
என் இறைவா! உனது அன்புக்கு நான் தகுதியற்றவனாக இருந்த போதும், உனது முடிவற்ற கருணையினையும் கொடையினையும் நீ என் மீது அருளுவதற்கு தகுதியானவனாக இருக்கிறாய்.
إِلَهِي كَأَنِّي بِنَفْسِي وَاقِفَةٌ بَيْنَ يَدَيْكَ وَ قَدْ أَظَلَّهَا حُسْنُ تَوَكُّلِي عَلَيْكَ فَقُلْتَ مَا أَنْتَ أَهْلُهُ وَ تَغَمَّدْتَنِي بِعَفْوِكَ‏
என் இறைவா! நான் என் முழுசுயத்துடன் உன்முன்னால் நிற்பதாய் நினைக்கின்றேன், உன் மீது நான் கொண்டுள்ள அழகிய நம்பிக்கை என்மீது நிழல் கொடுத்துள்ளது, நீ உனக்கு தகுதியான நிலையில் என் மீது அருள்புரிந்தாய். உன் மன்னிப்பைக் கொண்டு என்னை போற்றிவிட்டாய்.
إِلَهِي إِنْ عَفَوْتَ فَمَنْ أَوْلَى مِنْكَ بِذَلِكَ‏
என் வணக்கத்துக்குரிய நாயனே! நீ என்னை மன்னித்தால் உன்னையன்றி என்னை மன்னிக்க தகுதியுடையவர் யார்?.

وَ إِنْ كَانَ قَدْ دَنَا أَجَلِي وَ لَمْ يُدْنِنِي مِنْكَ عَمَلِي فَقَدْ جَعَلْتُ الْإِقْرَارَ بِالذَّنْبِ إِلَيْكَ وَسِيلَتِي‏
எனது மரணம் என்னை நெருங்கிவிட்டதென்றாலும் , எனது செயல்கள் உன்னை நெருங்க போதுமானதாக இல்லை. எனது பாவங்களை ஒப்புக்கொண்டு அவற்றினை உன்னிடம் கூறி ,( பாவமன்னிப்பு வேண்டுவதினை) உன்னை நெருங்குவதற்கான ஊடகமாக ஆக்குகின்றேன்.
إِلَهِي قَدْ جُرْتُ عَلَى نَفْسِي فِي النَّظَرِ لَهَا فَلَهَا الْوَيْلُ إِنْ لَمْ تَغْفِرْ لَهَا
என் இறைவா! எனது ஆத்மாவினை கட்டுப்படுத்தாமல் விட்டதினால் அதற்கு நான் அநீதியிழைத்துவிட்டேன். நீ அதனை மன்னிக்கவில்லையேல் எனக்கு நாசமே உண்டாகும்.
إِلَهِي لَمْ يَزَلْ بِرُّكَ عَلَيَّ أَيَّامَ حَيَاتِي فَلاَ تَقْطَعْ بِرَّكَ عَنِّي فِي مَمَاتِي‏
என் இறைவா! என் வாழ்நாளில் முழுவதும் நீ என்மீதான உனது அருளினை நிறுத்தவில்லை , எனவே எனது மரணத்தருவாயிலும் உனது அருளினை துண்டித்துவிடாதே!
إِلَهِي كَيْفَ آيَسُ مِنْ حُسْنِ نَظَرِكَ لِي بَعْدَ مَمَاتِي وَ أَنْتَ لَمْ تُوَلِّنِي إِلاَّ الْجَمِيلَ فِي حَيَاتِي‏
என் இறைவா! எனது மரணத்திற்குப் பின்னர் உனது அருள்பார்வையில் நான் எவ்வாறு நிராசை அடைவேன்? , நீ எனது வாழ்நாள் முழுதும் என்னை மிக அழகிய முறையில் நடத்தினாய்.
إِلَهِي تَوَلَّ مِنْ أَمْرِي مَا أَنْتَ أَهْلُهُ وَ عُدْ عَلَيَّ بِفَضْلِكَ عَلَى مُذْنِبٍ قَدْ غَمَرَهُ جَهْلُهُ‏
என் இறைவா! உனது தகுதிக்கு ஏற்றால் போல் எனது விடயங்களில் நடந்துகொள்வாயாக! மேலும் தனது அறியாமையில் மூழ்கி பாவம் செய்யும் ஒரு பாவிக்கு உனது அருளினை வழங்குவாயாக!

إِلَهِي قَدْ سَتَرْتَ عَلَيَّ ذُنُوباً فِي الدُّنْيَا وَ أَنَا أَحْوَجُ إِلَى سَتْرِهَا عَلَيَّ مِنْكَ فِي الْأُخْرَى‏
என் இறைவா! இவ்வுலகில் நான் செய்த பாவங்களை நீ மறைத்துவிட்டாய் . மேலும் அவற்றை மறுமையிலும் நீ மறைப்பது எனக்கு மிகவும் தேவையானது.
إِلَهِي قَدْ أَحْسَنْتَ إِلَيَّ إِذْ لَمْ تُظْهِرْهَا لِأَحَدٍ مِنْ عِبَادِكَ الصَّالِحِينَ‏
என் இறைவா! உனது நல்லடியார்களில் ஒருவர் முன்பும் எனது பாவங்களை வெளிப்படுத்தாமல் எனக்கு நீ நலவு செய்துவிட்டாய்.
فَلاَ تَفْضَحْنِي يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْأَشْهَادِ
எனவே, மறுமையில் அனைவருக்கு முன்பும் என்னை பகிரங்கப்படுத்தி(இழிவுடுத்தி)விடாதே!
إِلَهِي جُودُكَ بَسَطَ أَمَلِي وَ عَفْوُكَ أَفْضَلُ مِنْ عَمَلِي‏
என் இறைவா! உனது கொடை எனது ஆசைகளை அதிகரிக்கச் செய்துவிட்டது, உனது மன்னிப்பு எனது அனைத்து செயல்களை விடவும் சிறந்ததாகிவிட்டது.
إِلَهِي فَسُرَّنِي بِلِقَائِكَ يَوْمَ تَقْضِي فِيهِ بَيْنَ عِبَادِكَ
என் இறைவா! உனது அடியார்களுக்கு முன் நீ தீர்பளிக்கும் நாளில் உன்னை சந்திக்கும் பெருமகிழ்ச்சியினை எனக்குத் தருவாயாக!
إِلَهِي اعْتِذَارِي إِلَيْكَ اعْتِذَارُ مَنْ لَمْ يَسْتَغْنِ عَنْ قَبُولِ عُذْرِهِ‏
என் இறைவா! என்னை மன்னிக்க வேண்டுகிறேன். எனது தவறுகளை நீ மன்னிப்பதற்கு நான் (முழுத்) தேவையுள்ளவனாக இருப்பதாகவே எனது மன்னிப்புக் கோரல் அமைகிறது.
فَاقْبَلْ عُذْرِي يَا أَكْرَمَ مَنِ اعْتَذَرَ إِلَيْهِ الْمُسِيئُونَ‏
பாவிகள் தங்களது பாவங்களை கூறி மன்னிப்புக் கேட்கும் அதிக தயாளகுணமுள்ளவனே! என் மன்னிப்புக் கோரலை அங்கீகரிப்பாயாக!
إِلَهِي لاَ تَرُدَّ حَاجَتِي وَ لاَ تُخَيِّبْ طَمَعِي وَ لاَ تَقْطَعْ مِنْكَ رَجَائِي وَ أَمَلِي‏
என் இறைவா! எனது வேண்டுதலை புறக்கணித்துவிடாதே! , உன் மீதான எனது நம்பிக்கையினை நிராசையாக்கிவிடாதே!, உன் மீதான எனது நம்பிக்கையையும் அவாவினையும் துண்டித்துவிடாதே!
إِلَهِي لَوْ أَرَدْتَ هَوَانِي لَمْ تَهْدِنِي وَ لَوْ أَرَدْتَ فَضِيحَتِي لَمْ تُعَافِنِي‏
என் இறைவா! நான் இழிவாவதை நீ விரும்பியிருந்தால் என்னை நேர்வழிப்படுத்தியிருக்க மாட்டாய். மேலும் நீ என்னை மானபங்கப்படுத்த விரும்பியிருந்தால் என்னை மன்னித்திருக்க மாட்டாய்.
إِلَهِي مَا أَظُنُّكَ تَرُدُّنِي فِي حَاجَةٍ قَدْ أَفْنَيْتُ عُمُرِي فِي طَلَبِهَا مِنْكَ‏
என் இறைவா! எனது தேவைகளை உன்னிடம் முன்வைத்து அதனைப் பெற்றுக் கொள்ள எனது வாழ்நாளைக் கழித்தேனே, அவற்றை நீ தட்டிக்கழிப்பாய் என்ற எண்ணம் ஒருபோதும் எனக்கில்லை
إِلَهِي فَلَكَ الْحَمْدُ أَبَداً أَبَداً دَائِماً سَرْمَداً يَزِيدُ وَ لاَ يَبِيدُ كَمَا تُحِبُّ وَ تَرْضَى‏
என் இறைவா! என்றும் நிரந்தரமான , முடிவற்ற புகழனைத்தும் உனக்கே உரியன, நீ பொருந்திக்கொண்டவாறும் உனது விருப்பத்திற்கேற்பவும் அது அதிகரித்தே செல்கின்றது ,குறைவடைவதில்லை.

إِلَهِي إِنْ أَخَذْتَنِي بِجُرْمِي أَخَذْتُكَ بِعَفْوِكَ
என் இறைவா! எனது குற்றங்களுக்காக நீ என்னைத் தண்டித்தால் நான் உனது மன்னிப்பினை எடுத்துக்கொள்வேன்.
وَ إِنْ أَخَذْتَنِي بِذُنُوبِي أَخَذْتُكَ بِمَغْفِرَتِكَ‏
எனது பாவங்களுக்காக நீ என்னை தண்டித்தால் உனது பிழைபொறுத்தலை நான் பற்றிப்பிடித்துக் கொள்வேன்.
وَ إِنْ أَدْخَلْتَنِي النَّارَ أَعْلَمْتُ أَهْلَهَا أَنِّي أُحِبُّكَ‏
மேலும் நீ என்னை நரகில் நுழைவித்தால் நான் அங்குள்ளவர்களிடம் உன்னை நேசிப்பதாக அறிவிப்பேன்.
إِلَهِي إِنْ كَانَ صَغُرَ فِي جَنْبِ طَاعَتِكَ عَمَلِي فَقَدْ كَبُرَ فِي جَنْبِ رَجَائِكَ أَمَلِي‏
என் இறைவா! உன்னை அடிபணிவதற்கான எனது செயல்கள் குறைந்துவிட்டதாயினும் உன்மீதான எனது நம்பிக்கை அதிகரித்தே உள்ளன.
إِلَهِي كَيْفَ أَنْقَلِبُ مِنْ عِنْدِكَ بِالْخَيْبَةِ مَحْرُوماً وَ قَدْ كَانَ حُسْنُ ظَنِّي بِجُودِكَ أَنْ تَقْلِبَنِي بِالنَّجَاةِ مَرْحُوماً
என் இறைவா! நான் எவ்வாறு? உனது சன்னிதானத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவனாக அருளிழந்தவனாக திரும்புவேன்?. நிச்சயமக உனது கொடைமீதும் அருளின் மீதும் நீ என்னை வெற்றியடைந்தோர்களில் ஆக்கிவைப்பாய் என்ற நல்லெண்ணம் எனக்குண்டு.
إِلَهِي وَ قَدْ أَفْنَيْتُ عُمُرِي فِي شِرَّةِ السَّهْوِ عَنْكَ وَ أَبْلَيْتُ شَبَابِي فِي سَكْرَةِ التَّبَاعُدِ مِنْكَ‏
என் இறைவா! எனது வாழ்நாளை உன் நினைவின்றி கழித்துவிட்டேன், மேலும் எனது இளமையினை உன்னை விட்டும் தூரமாக்கும் போதையில் வீணாக்கிவிட்டேன்.
إِلَهِي فَلَمْ أَسْتَيْقِظْ أَيَّامَ اغْتِرَارِي بِكَ وَ رُكُونِي إِلَى سَبِيلِ سَخَطِكَ‏
என் இறைவா! உனது கருணையின் கீழ் உள்ளேன் என்ற மமதையில் நான் விழித்துக்கொள்ளவில்லை. (உலக இன்பங்களில் மீது கொண்ட ஆசையினால்) உனது தண்டனைக்கான வழியை தெரிந்திருக்கவில்லை.
إِلَهِي وَ أَنَا عَبْدُكَ وَ ابْنُ عَبْدِكَ قَائِمٌ بَيْنَ يَدَيْكَ مُتَوَسِّلٌ بِكَرَمِكَ إِلَيْكَ‏
என் இறைவா! எவ்வாறாயினும் நான் உன் அடிமை , உனது அடிமையின் மகன் , உனது தயாள குணத்தின் பொருட்டால் (உன்னிடம் பிரார்த்தித்தவனாக) உன் முன்னே நிற்கின்றேன்.
إِلَهِي أَنَا عَبْدٌ أَتَنَصَّلُ إِلَيْكَ مِمَّا كُنْتُ أُوَاجِهُكَ بِهِ مِنْ قِلَّةِ اسْتِحْيَائِي مِنْ نَظَرِكَ‏
என் இறைவா! நான் உன் அடிமை என்ற வகையில் நான் செய்த பாவங்களினால் உனது பார்வையில் ஏற்பட்ட வெட்கத்தினால் உன்னை விட்டுவிட்டேன்.
وَ أَطْلُبُ الْعَفْوَ مِنْكَ إِذِ الْعَفْوُ نَعْتٌ لِكَرَمِكَ‏
மன்னிப்பு உனது அழகிய கொடையின் வெளிப்பாடு என்பதினால் உன்னிடத்தே பாவமன்னிப்புக் கோருகின்றேன்.
إِلَهِي لَمْ يَكُنْ لِي حَوْلٌ فَأَنْتَقِلَ بِهِ عَنْ مَعْصِيَتِكَ إِلاَّ فِي وَقْتٍ أَيْقَظْتَنِي لِمَحَبَّتِكَ‏
என் இறைவா! உனதன்பினாலேயே அன்றி என்னை உனக்கு மாறுசெய்யாமலிருக்க விழிப்படையச் செய்யும் எவ்வித சக்தியும் எனக்கில்லை.
وَ كَمَا أَرَدْتَ أَنْ أَكُونَ كُنْتُ فَشَكَرْتُكَ بِإِدْخَالِي فِي كَرَمِكَ وَ لِتَطْهِيرِ قَلْبِي مِنْ أَوْسَاخِ الْغَفْلَةِ عَنْكَ‏
நான் எவ்வாறு இருக்க வேண்டுமென்று நீ விரும்பினாயோ நான் அவ்வாறே ஆகிவிட்டேன் , உன்னை மறந்திருந்த என்னை எனது உள்ளத்தினை தூய்மைப்படுத்தி, உனது பெருங்கருணைக்குள் உள்வாங்கியதாலும் உனக்கு நான் நன்றி கூறுகின்றேன்.
إِلَهِي انْظُرْ إِلَيَّ نَظَرَ مَنْ نَادَيْتَهُ فَأَجَابَكَ وَ اسْتَعْمَلْتَهُ بِمَعُونَتِكَ فَأَطَاعَكَ‏
என் இறைவா! உனதழைப்பிற்கு பதிலளித்த ஒருவனைப் பார்ப்பது போன்றும், நீ உனது உதவியினால் முற்றிலும் கீழ்படிந்த ஒருவனைப் பார்ப்பது போன்றும் என்னைப் பார்ப்பாயாக!
يَا قَرِيباً لاَ يَبْعُدُ عَنِ الْمُغْتَرِّ بِهِ وَ يَا جَوَاداً لاَ يَبْخَلُ عَمَّنْ رَجَا ثَوَابَهُ‏
(உலகசையினால்) ஏமாற்றப்பட்டு உன்னைவிட்டும் தூரமாகியவனுக்கு மிக நெருக்கமாக இருப்பவனே! உனது கூலியினை எதிர்பார்த்திருப்பவனை நிறாசையாக்காத கொடையாளனே!
إِلَهِي هَبْ لِي قَلْباً يُدْنِيهِ مِنْكَ شَوْقُهُ وَ لِسَاناً يُرْفَعُ إِلَيْكَ صِدْقُهُ وَ نَظَراً يُقَرِّبُهُ مِنْكَ حَقُّهُ‏
என் இறைவா! உன்னை நெருங்கும் ஆசைகொண்ட ஓர் உள்ளத்தினைத் தருவாயாக! உண்மை பேசுவதன் மூலம் உன்னிடம் அழைத்து வரும் நாவினையும் தருவாயாக! சத்தியத்தினைப் பார்க்கும் பார்வை மூலம் உன்னை வந்தடையச் செய்யும் பார்வையினையும் தருவாயாக!
إِلَهِي إِنَّ مَنْ تَعَرَّفَ بِكَ غَيْرُ مَجْهُولٍ وَ مَنْ لاَذَ بِكَ غَيْرُ مَخْذُولٍ وَ مَنْ أَقْبَلْتَ عَلَيْهِ غَيْرُ مَمْلُوكٍ
என் இறைவா! உன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டோர் யாரும் அறியப்படாதோர் அல்லர், உன்னிடம் தஞ்சம் புகுந்தோர் யாரும் இழிவுபடுத்தப்படவில்லை, உனது கருணைக்கு உள்ளானோர் ஒருபோதும் அடிமையானதில்லை.
إِلَهِي إِنَّ مَنِ انْتَهَجَ بِكَ لَمُسْتَنِيرٌ وَ إِنَّ مَنِ اعْتَصَمَ بِكَ لَمُسْتَجِيرٌ وَ قَدْ لُذْتُ بِكَ يَا إِلَهِي‏
என் இறைவா! உனது பாதையில் பயணிப்போரின் பாதை ஒளிமையமானது , உன்னைப் பற்றிப் பிடித்துக்கெபண்டோர் அடைக்களம் வழங்கப்பட்டார்கள், என் இறைவா! உன்னிடம் அடைக்களம் தேடுகின்றேன்.
فَلاَ تُخَيِّبْ ظَنِّي مِنْ رَحْمَتِكَ وَ لاَ تَحْجُبْنِي عَنْ رَأْفَتِكَ‏
உனது அருளின் மீது நான் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நிராசையாக்கிவிடாதே! உனது கருணையை விட்டும் என்னை திரையிட்டுவிடாதே!
إِلَهِي أَقِمْنِي فِي أَهْلِ وَلاَيَتِكَ مُقَامَ مَنْ رَجَا الزِّيَادَةَ مِنْ مَحَبَّتِكَ‏
என் இறைவா! உனதன்பினை அதிகரித்துக்கொள்ளும் ஆர்வம் கொண்ட உனது நெருங்கிய நேசர்களின் மத்தியில் என்னையும் வைப்பாயாக!
إِلَهِي وَ أَلْهِمْنِي وَلَهاً بِذِكْرِكَ إِلَى ذِكْرِكَ وَ هِمَّتِي فِي رَوْحِ نَجَاحِ أَسْمَائِكَ وَ مَحَلِّ قُدْسِكَ‏
என் இறைவா! தொடரான உன் நினைவை ஞாபகமூட்டும் உதிப்பை தந்தருள்வாயாக! மேலும் உனது திருநாமங்களினதும் உனது புனிதத்தன்மையினதும் வெளிப்பாட்டை உணர்ந்து மகிழ்வடையும் ஆற்றலையும் தருவாயாக!
إِلَهِي بِكَ عَلَيْكَ إِلاَّ أَلْحَقْتَنِي بِمَحَلِّ أَهْلِ طَاعَتِكَ وَ الْمَثْوَى الصَّالِحِ مِنْ مَرْضَاتِكَ‏
என் இறைவா! உன்னை முழுமையாக வழிப்பட்டோர்களும் ,உனது திருப்பொருத்தத்தினையடைந்த உனது நல்லடியார்களும் அடைந்த ஸ்தானத்தில் என்னையும் சேர்த்துவிடு என்று உன்னைக் கொண்டே உன்னிடம் வேண்டுகின்றேன்.
فَإِنِّي لاَ أَقْدِرُ لِنَفْسِي دَفْعاً وَ لاَ أَمْلِكُ لَهَا نَفْعاً
ஏனெனில் ,நான் என்னை ஆபத்திலிருந்து பாதுகாக்க ஆற்றல் பெறாதவன் , மேலும் எனக்கு நல்லது பயக்கும் தன்மையை கொண்டிராதவன்.
إِلَهِي أَنَا عَبْدُكَ الضَّعِيفُ الْمُذْنِبُ وَ مَمْلُوكُكَ الْمُنِيبُ
என் இறைவா! நான் பாவமிழைத்த உனது பலவீனமான அடிமையாவேன், உன்னிடம் பாவமன்னிப்புத் தேடிவந்துள்ள உனது அடிமையாவேன்.
فَلاَ تَجْعَلْنِي مِمَّنْ صَرَفْتَ عَنْهُ وَجْهَكَ وَ حَجَبَهُ سَهْوُهُ عَنْ عَفْوِكَ‏
எனவே, யாரைவிட்டும் உனது திருமுகத்தைத் திருப்பின்கொண்டாயோ, அவர்களில் என்னையும் ஆக்கிவிடாதே மேலும் உன்னை மறந்ததின் காரணமாக உனது மன்னிப்பினை பெற தகுதி பெறவில்லையோ அவர்களிலும் என்னை ஆக்கிவிடாதே!
إِلَهِي هَبْ لِي كَمَالَ الاِنْقِطَاعِ إِلَيْكَ وَ أَنِرْ أَبْصَارَ قُلُوبِنَا بِضِيَاءِ نَظَرِهَا إِلَيْكَ‏
என் இறைவா! படைப்புக்களிலிருந்து பரிபூரணமாக விடுபட்டு உன்னிடமே (நித்தமும); இருக்கும் பாக்கியத்தினைத் தருவாயாக! மேலும் எங்கள் உள்ளங்களில் உன்னைக்காணும் ஒளியினை ஏற்படுத்துவாயாக!
حَتَّى تَخْرِقَ أَبْصَارُ الْقُلُوبِ حُجُبَ النُّورِ فَتَصِلَ إِلَى مَعْدِنِ الْعَظَمَةِ وَ تَصِيرَ أَرْوَاحُنَا مُعَلَّقَةً بِعِزِّ قُدْسِكَ‏
அதன் மூலம், ஒளிமையமான எங்கள் உள்ளங்கள் ஒளிநிறைந்த திரைகளை கிழித்துச் சென்று, உனது மகிமையின் மையத்தை அடைந்து கொள்ளட்டும், மேலும் எங்கள் ஆத்மாக்கள் உனது புனிதத்தில் ஒன்றிணையட்டும்.
إِلَهِي وَ اجْعَلْنِي مِمَّنْ نَادَيْتَهُ فَأَجَابَكَ وَ لاَحَظْتَهُ فَصَعِقَ لِجَلاَلِكَ فَنَاجَيْتَهُ سِرّاً وَ عَمِلَ لَكَ جَهْراً
என் இறைவா! நீ அழைக்கும் போது அதற்கு பதிலளித்தோர்களில் என்னையும் ஆக்குவாயாக! , மேலும் உனது பார்வைக்குட்பட்டு உனது மாண்பினால் ஈர்க்கப்பட்டோர்களிலும் , மேலும் நீ அவர்களோடு இரகசியமாக உரையாட , அவர்களோ உன்னிடம் வெளிப்படையாக செயற்பட்டார்களே அவர்களில் என்னையும் ஆக்கிவிடுவாயாக!
إِلَهِي لَمْ أُسَلِّطْ عَلَى حُسْنِ ظَنِّي قُنُوطَ الْإِيَاسِ وَ لاَ انْقَطَعَ رَجَائِي مِنْ جَمِيلِ كَرَمِكَ‏
என் இறைவா! உன்மீதான நல்லெண்ணத்தினை நான் நிராசையால் சூழவிடவில்லை, மேலும் உனது அழகிய தயாள குணத்தில் நான் நம்பிக்கை இழக்கவுமில்லை.
إِلَهِي إِنْ كَانَتِ الْخَطَايَا قَدْ أَسْقَطَتْنِي لَدَيْكَ فَاصْفَحْ عَنِّي بِحُسْنِ تَوَكُّلِي عَلَيْكَ‏
என் இறைவா! எனது குற்றங்கள் உனது பார்வையிலிருந்து என்னை விழவைத்திருப்பின், உன் மீதான எனது அழகிய நம்பிக்கையின் மூலம் அவற்றை மன்னிப்பாயாக!
إِلَهِي إِنْ حَطَّتْنِي الذُّنُوبُ مِنْ مَكَارِمِ لُطْفِكَ فَقَدْ نَبَّهَنِي الْيَقِينُ إِلَى كَرَمِ عَطْفِكَ‏
என் இறைவா! எனது பாவங்கள் உனது மாண்புமிகு கருணையிலிருந்து என்னைத் தூரமாக்கியிருப்பினும், உனது கருணை மீதான எனது அபரீத நம்பிக்கை என்னை விழிப்படையச் செய்துவிட்டது.
إِلَهِي إِنْ أَنَامَتْنِي الْغَفْلَةُ عَنِ الاِسْتِعْدَادِ لِلِقَائِكَ فَقَدْ نَبَّهَتْنِي الْمَعْرِفَةُ بِكَرَمِ آلاَئِكَ‏
என் இறைவா! உன்னை சந்திப்பதற்கான தயார்நிலையிலிருந்து என்னை எனது அஜாக்கிரதை தடுத்திருந்தாலும், உனது அருட்கொடைகள் மீதான எனது அறிவு என்னை விழிப்படையச் செய்துவிட்டது.
إِلَهِي إِنْ دَعَانِي إِلَى النَّارِ عَظِيمُ عِقَابِكَ فَقَدْ دَعَانِي إِلَى الْجَنَّةِ جَزِيلُ ثَوَابِكَ‏
என் இறைவா! உனது கடுமையான தண்டனைகள் என்னை நரகை நோக்கி அழைப்பின், உனது உயர்வான பெருங்கருணையும் கூலியும் என்னை சுவனத்தின்பால் உறுதியோடு அழைக்கின்றன.
إِلَهِي فَلَكَ أَسْأَلُ وَ إِلَيْكَ أَبْتَهِلُ وَ أَرْغَبُ وَ أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
என் இறைவா! உன்னிடமே கேட்கின்றேன், உன்னிடமே மன்றாடுகின்றேன், உன்னையே ஆசைகொண்டுள்ளேன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறும் படி உன்னிடம் வேண்டுகின்றேன்.
وَ أَنْ تَجْعَلَنِي مِمَّنْ يُدِيمُ ذِكْرَكَ وَ لاَ يَنْقُضُ عَهْدَكَ وَ لاَ يَغْفُلُ عَنْ شُكْرِكَ وَ لاَ يَسْتَخِفُّ بِأَمْرِكَ‏
உன்னை நித்தமும் ஞாபகப்படுத்துவோர்களிலும், உனது வாக்குறுதிகளை மீறாதவர்களிலும், உனக்கு நன்றி செலுத்துவதை மறவாதவர்களிலும், உனது கட்டளைகளை சிறுமைப்படுத்தாதவர்களிலும் என்னை ஆக்கிவைப்பாயாக!
إِلَهِي وَ أَلْحِقْنِي بِنُورِ عِزِّكَ الْأَبْهَجِ فَأَكُونَ لَكَ عَارِفاً وَ عَنْ سِوَاكَ مُنْحَرِفاً وَ مِنْكَ خَائِفاً مُرَاقِباً
என் இறைவா!உன்னை நன்கறிவதற்காகவும், உன்னைத் தவிர பிறரைவிட்டு தூரமாவதற்கும், உன்னிடம் அஞ்சி கண்காணிப்போடு நடந்து கொள்வதற்கும் என்னை உனது பிரமாண்டமான கண்ணியமிகு ஒளியில்; இணைத்துவிடுவாயாக!
يَا ذَا الْجَلاَلِ وَ الْإِكْرَامِ وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ رَسُولِهِ وَ آلِهِ الطَّاهِرِينَ وَ سَلَّمَ تَسْلِيماً كَثِيراً
மேலான கண்ணியமும் சங்கையும் கொண்ட நாயனே! இறைவன் அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது பரிசுத்தமான குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறுவானாக! மேலும் அளவின்மையான சாந்தியையும் அவர்கள் மீது அருள்வானாக!

குறிப்பிட்ட தினங்களுக்கான அமல்கள்
 முதலாம் நாள் இரவு : இவ்விரவில் அதிகமான தொழுகைகள் உண்டு என இக்பால் எனும் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டு ரக்அத்துக்களைக் கொண்ட ஓர் தொழுகை உள்ளது. இதனை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திகாவிற்குப் பின், பதினைந்து முறை சூரா இக்லாஸை ஓத வேண்டும். இத்தொழுகைக்கு அதிகமான கூலிகளுண்டு என நபியவர்களின் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

 முதலாம் நாள் பகல் :
இத்தினத்தில் நோன்பு நோற்றல் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் ' யார் ஷஃபான் மாதம் முதலாம் நாள் நோன்பு நோற்கின்றாரோ , அவருக்கு சுவனம் கடமையாக்கப்பட்டுவிட்டது'. செய்யித் இப்னு தாவூஸ் அவர்கள் தனது இக்பால் எனும் நூலில் நபியவர்களிடமிருந்து இவ்வாறு அறிவிப்புச் செயிகின்றார்கள் : 'யார் ஷஃபான் மாதத்தின் முதல் மூன்று தினங்களும் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்குகின்றாரோ,வானத்திலுள்ள , பூமியிலுள்ள , இப்லீஸின் மற்றும் அநியாயக்கார ஆட்சியாளர்கள் ஆகியோரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்.இறைவன் அவரது அதிகமான பாவங்களை மன்னிக்கின்றான்'.
 மூன்றாம் நாள் :
மிஸ்பாஹ் எனும் நூலில் செய்க் தூஸி அவர்களின் அறிவிப்பின் பிரகாரம் இன்று இமாம் ஹுஸைன் பின் அலீ அலைஹிமுஸ்ஸலாம் அவர்களின் பிறந்த தினமாகும். இமாம் ஹஸன் அஸ்கரீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதிநிதியான காஸிம் பின் அலாஃ ஹமதானி அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தில் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஃபான் மாதம் , பிறை மூன்று வியாழக்கிழமை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே , அத்தினத்தில் நோன்பு நோற்று , கீழ்வரும் துஆவினை ஓதுங்கள்:

بسم الله الرحمن الرحیم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்
الّلهُمَّ صَلِّ عَلی مُحَمَّد وَآلِ مُحَمَّد وَعَجِّل فَرَجَهُم
இறைவா! நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது குடும்பத்தின் மீதும் ஸலவாத் கூறுவாயாக! மேலும் அவர்களுடைய மகிழ்ச்சியினை (இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வெளிப்பாட்டினால்) துரிதப்படுத்துவாயாக!
اللّٰهُمَّ إِنِّى أَسْأَلُكَ بِحَقِّ الْمَوْلُودِ فِى هٰذَا الْيَوْمِ الْمَوْعُودِ بِشَهادَتِهِ قَبْلَ اسْتِهْلالِهِ وَوِلادَتِهِ،
இறைவா!(இமாம் ஹுசைன்) இவ்வுலகத்தில் பிறப்பதற்கு முன்பே அவரது (உயிர்த்தியாகம்) ஷஹாதத் வாக்களிக்கப்பட்டது , இத்தகைய தினத்தில் பிறந்திருக்கும் இப்புனித குழந்தையின் பொருட்டால் உன்னிடம் வேண்டிநிற்கின்றேன்.
بَكَتْهُ السَّماءُ وَمَنْ فِيها، وَالْأَرْضُ وَمَنْ عَلَيْها، وَلَمَّا يَطَأْ لابَتَيْها
அவர் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே, வானமும் அதில் உள்ளவையும், பூமியும் அதில் உள்ளவையும் அவருக்காய் அழுதன.

قَتِيلِ الْعَبْرَةِ، وَسَيِّدِ الْأُسْرَةِ،
அவர் கண்ணீருக்காய் கொலைசெய்யப்பட்டவர் (அவரது கொலைக்காய் அனைவரும் அழுவார்கள்) , அவர் குடும்பத்தின் தலைவர்.
الْمَمْدُودِ بِالنُّصْرَةِ يَوْمَ الْكَرَّةِ، الْمُعَوَّضِ مِنْ قَتْلِهِ أَنَّ الْأَئِمَّةَ مِنْ نَسْلِهِ،
மீண்டு வரும் நாளில் அவருக்கு உதவிசெய்யப்படும் , அவர் கொலை செய்யப்பட்டதற்கு மாற்றீடாக அவரது வம்சத்தில் அனைத்து இமாம்களையும் வைத்துள்ளான்.
وَالشِّفاءَ فِى تُرْبَتِهِ، وَالْفَوْزَ مَعَهُ فِى أَوْبَتِهِ،
அவர் (அடக்கப்பட்டிருக்கும்) மண்ணில் நோய் நிவாரணம் உண்டு , மீட்சியின் போது வெற்றி அவரோடே இருக்கும்.
وَالْأَوْصِياءَ مِنْ عِتْرَتِهِ بَعْدَ قائِمِهِمْ وَغَيْبَتِهِ،
அவரது குடும்பத்திலுள்ள பிரதிநிதிகளில் இறுதியானவர் மறைவின் பின்னர் வெளிப்படுவார்
حَتّىٰ يُدْرِكُوا الْأَوْتارَ، وَيَثْأَرُوا الثَّارَ،
அவரது குருதிக்காய் பலிதீர்ப்பார்கள்
وَيُرْضُوا الْجَبَّارَ، وَيَكُونُوا خَيْرَ أَنْصارٍ،
இறைவனை திருப்பொருத்திப்படுத்தும் அவர்கள், மிகச்சிறந்த உதவியாளர்கள்;.
صَلَّى اللّٰهُ عَلَيْهِمْ مَعَ اخْتِلافِ اللَّيْلِ وَالنَّهارِ
இரவு, பகல் மாற்றத்தில் எப்போதும் அவர்கள் மீது இறைவன் ஸலவாத் கூறுவானாக!


اللّٰهُمَّ فَبِحَقِّهِمْ إِلَيْكَ أَتَوَسَّلُ وَأَسْأَلُ سُؤالَ مُقْتَرِفٍ مُعْتَرِفٍ
இறைவா! அவர்களது பொருட்டினால் உன்னிடம் வேண்டி நிற்கின்றேன், பாவியான தனது பாவங்களை ஒப்புக்கொண்ட ஒருவனைப் போல்,
مُسِىءٍ إِلىٰ نَفْسِهِ مِمَّا فَرَّطَ فِى يَوْمِهِ وَأَمْسِهِ،
இன்றும் நேற்றும் தனது வாழ்நாளை வீணடித்து தனக்கு தானே அநீதியிழைத்துக் கொண்ட ஒரு பாவியைப் போல்,
يَسْأَلُكَ الْعِصْمَةَ إِلىٰ مَحَلِّ رَمْسِهِ؛
மண்ணறைக்கு செல்வதற்கு முன்பு பாவங்களிலிருந்து பரிசுத்தமானவனாக இருப்பதை உன்னிடம் வேண்டுகின்றேன்.
اللّٰهُمَّ فَصَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَعِتْرَتِهِ،
இறைவா! நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது குடும்பத்தின் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
وَاحْشُرْنا فِى زُمْرَتِهِ، وَبَوِّئْنا مَعَهُ دارَ الْكَرامَةِ، وَمَحَلَّ الْإِقامَةِ
எங்களை அவரது கூட்டத்தோடு மறுமையில் எழுப்புவாயாக! , நிரந்தர வசிப்பிடமான சுவனத்தில் அவரோடு எங்களை வைப்பாயாக!
اللّٰهُمَّ وَكَما أَكْرَمْتَنا بِمَعْرِفَتِهِ فَأَكْرِمْنا بِزُلْفَتِهِ،
இறைவா! அவரை அறிந்துகொள்வதில் எங்களை சங்கைப்படுத்தியது போல் அவரை நெருங்குவதிலும் எங்களை கண்ணியப்படுத்துவாயாக!
وَارْزُقْنا مُرافَقَتَهُ وَسابِقَتَهُ،
அவரது தோழமையினையும் நிரந்தர அன்பினையும் எங்களுக்கு அருள்வாயாக!
وَاجْعَلْنا مِمَّنْ يُسَلِّمُ لِأَمْرِهِ، وَيُكْثِرُ الصَّلاةَ عَلَيْهِ عِنْدَ ذِكْرِهِ،
எங்களை அவரது கட்டளைகளுக்கு பரிபூரணமாக அடிபணிந்தோர்களில் ஆக்குவாயாக! மேலும் அவரது பெயர் கூறப்பட்டால் அவர்மீது அதிகம் ஸலவாத் கூறியவர்களிலும் ஆக்கிவைப்பாயாக!
وَعَلىٰ جَمِيعِ أَوْصِيائِهِ وَأَهْلِ أَصْفِيائِهِ، الْمَمْدُودِينَ مِنْكَ بِالْعَدَدِ الاثْنَى عَشَرَ،
அவரது குடும்பத்தாரின் மீதும், அவரது பிரதிநிதிகளான, உனது உதவியிகைப் பெற்ற பன்னிரு இமாம்கள் மீதும் அதிகம் ஸலவாத் கூறியவர்களிலும் ஆக்கிவைப்பாயாக!
النُّجُومِ الزُّهَرِ، وَالْحُجَجِ عَلىٰ جَمِيعِ الْبَشَرِ
ஒளிவீசும் நட்சத்திரங்கள் அவர்கள், அனைத்து மனிதர்கள் மீதும் அவர்கள் அத்தாட்சிகள்.
اللّٰهُمَّ وَهَبْ لَنا فِى هٰذَا الْيَوْمِ خَيْرَ مَوْهِبَةٍ،
இறைவா! இப்புனித நாளில் மிகவும் சிறந்த அருளினை எங்களுக்கு வழங்குவாயாக!
وَأَنْجِحْ لَنا فِيهِ كُلَّ طَلِبَةٍ، كَما وَهَبْتَ الْحُسَيْنَ لِمحَمَّدٍ جَدِّهِ،
இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவரது பாட்டனார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கு அளித்தது போல், எங்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவாயாக!
وَعاذَ فُطْرُسُ بِمَهْدِهِ،
புத்ருஸ் எனும் மலக்கு அவரது தொட்டிலில் அடைக்கலம் புகுந்தார.;


فَنَحْنُ عائِذُونَ بِقَبْرِهِ مِنْ بَعْدِهِ نَشْهَدُ تُرْبَتَهُ وَنَنْتَظِرُ أَوْبَتَهُ،
எனவே நாங்களும் அவரது ஷஹாதத்திற்குப் பின்னால் அவரது மண்ணறையில் தஞ்சம் புகுந்துள்ளோம், அவரது மண்ணறையை தரிசிக்கிறோம். மேலும் அவரது மீட்சியினை எதிர்பார்த்துள்ளோம்.
آمِينَ رَبَّ الْعالَمِينَ
உலகத்தாரை படைத்து பரிபாலிக்கும் இரட்சகனே ! எங்களது பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக!
(இந்த துஆவிற்குப் பின், இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆஷுரா நாளில் கர்பலாவில் வைத்து பிரார்த்தித்த இறுதி துஆவான கீழ்வரும் துஆவினை ஓதுதல்)
اللّٰهُمَّ أَنْتَ مُتَعالى الْمَكانِ، عَظِيمُ الْجَبَرُوتِ،
இறைவா! நீயே உயர்ந்த அந்தஸ்தும், மகத்தான ஆற்றலுமுடையவன்
شَدِيدُ الْمِحالِ ، غَنِيٌّ عَنِ الْخَلائِقِ،
தண்டனை அளிப்பதில் மிகவும் கடினமானவனும் நீயே! படைப்பினங்களை விட்;டும் தேவையற்றவனும் நீயே!
عَرِيضُ الْكِبْرِياءِ، قادِرٌ عَلىٰ مَا تَشاءُ، قَرِيبُ الرَّحْمَةِ،
உனது பெருமை விசாலமானது, நாடியதை செய்யும் ஆற்றல் மிக்கவன் நீ, உனது அடியார்கள் மீது உனது கருணை மிகவும் அருகிலுள்ளது.
صَادِقُ الْوَعْدِ، سَابِغُ النِّعْمَةِ، حَسَنُ الْبَلاءِ، قَرِيبٌ إِذا دُعِيتَ،
உனது வாக்குறுதி உண்மையாகும், பரிபூரண அருட்கொடைகள் வழங்குபவன், உனது சோதனைகள் அழகியதாகும், உன்னை அழைப்போருக்கு மிகவும் அருகிலுள்ளவன் நீ!

مُحِيطٌ بِما خَلَقْتَ، قابِلُ التَّوْبَةِ لِمَنْ تابَ إِلَيْكَ،
நீ படைத்தவற்றை சூழ்ந்துள்ளாய், உன்னிடம் பாவமன்னிப்பு கேட்டு மீண்டு வருவோரை ஏற்றுக்கொள்கின்றாய்
قادِرٌ عَلىٰ مَا أَرَدْتَ، وَمُدْرِكٌ مَا طَلَبْتَ،
நீ நாடினால் அதனை செய்யும் ஆற்றல் கொண்டவன் , எது வேண்டுமென்று நினைக்கின்றாயோ அதனை அடைகின்றாய்
وَشَكُورٌ إِذا شُكِرْتَ، وَذَكُورٌ إِذا ذُكِرْتَ،
நன்றி தெரிவித்தால் நன்றியினை ஏற்றுக்கொள்கின்றாய், உன்னை ஞாபகிப்போரை நீயும் ஞாபகிக்கின்றாய்
أَدْعُوكَ مُحْتاجاً، وَأَرْغَبُ إِلَيْكَ فَقِيراً،
எனது தேவைகளோடு உன்னை அழைக்கின்றேன், எதுவுமற்ற ஏழையாக உன்னிடம் நாட்டம் கொண்டுள்ளேன்
وَأَفْزَعُ إِلَيْكَ خائِفاً، وَأَبْكِى إِلَيْكَ مَكْرُوباً،
அச்சத்தோடு உனது சந்நிதியில் தஞ்சமடைகின்றேன், கஷ்டத்தோடு உன்னிடத்தில் அழுகின்றேன்
وَأَسْتَعِينُ بِكَ ضَعِيفاً، وَأَتَوَكَّلُ عَلَيْكَ كافِياً،
எனது முடியாமையினால் உன்னிடம் உதவி தேடுகின்றேன், நீயே போதுமானவனாய் உள்ளாய் எனவே, உன்னையே நம்புகின்றேன்.

(கீழ் வரும் பகுதி இமாம் அவர்களுக்கு மாத்திரம் உரித்தான ஓர் பகுதியாகும்:
احْكُمْ بَيْنَنا وَبَيْنَ قَوْمِنا بِالْحَقِّ ،
எங்களுக்கும் எங்களது சமூகத்திற்கும் மத்தியில் சத்தியத்தினைக் கொண்டு நீதி செலுத்துவாயாக!
فَإِنَّهُمْ غَرُّونا وَخَدَعُونا وَخَذَلُونا وَغَدَرُوا بِنا وَقَتَلُونا،
நிச்சயமாக அவர்கள் எங்களை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்கள், எங்களை அவமதித்து எமக்களித்த வாக்குறுதிகளை மீறி எம்மை கொன்றுவிட்டார்கள்.
وَنَحْنُ عِتْرَةُ نَبِيِّكَ وَوَلَدُ حَبِيبِكَ مُحَمَّدِ بْنِ عَبْدِاللّٰهِ الَّذِى اصْطَفَيْتَهُ بِالرِّسالَةِ وَائْتَمَنْتَهُ عَلىٰ وَحْيِكَ،
நாங்கள் உனது தூதரின் குடும்பத்தினர், நீ உனது வஹியின் பாதுகாவலராகவும், உனது தூதுத்துவத்தினை எற்றிவைப்பதற்காகவும் தெரிவு செய்ய உனது நேசரான முஹம்மது பின் அப்துல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அன்னவர்களின் பிள்ளைகள் ஆவோம்)

فَاجْعَلْ لَنا مِنْ أَمْرِنا فَرَجاً وَمَخْرَجاً بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
எனவே, எங்களது (கஷ்டமான) விடயங்களிலிருந்து மீட்சி பெற்று விடுபட அருள்புரிவாயாக! உனது கருணையினைக் கொண்டு , கருணையாளர்களுக்கெல்லாம் மிகவும் கருணையாளனே!

இப்னு அய்யாஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'ஹுஸைன் பின் அலீ பிஸுபரி அவர்கள் , இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த துஆவினை இன்றைய தினத்தில் ஓதியதாகவும் , இமாம் அவர்கள் 'இந்த துஆ ஷஃபான் மூன்றாம் தினம் ஓதும் துஆக்களில் ஒன்று, மேலும் இத்தினத்திலே இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்' எனக் கூறியதாகவும் , அறிவித்தார்கள்.

 

 

 ஷஃபான் பிறை பதின்மூன்றாம் இரவு :
பிறை 13, பிறை 14, பிறை 15 ஆகிய மூன்று இரவுகளும் அய்யாமுல் பீழ்; (வெண்மையான இரவுகள்) என அழைக்கப்படுகின்றன.

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்:
'இறைவன் முன்சென்ற சமூகங்களுக்கு வழங்காத மூன்று பெறுமதியான மாதங்களை இச்சமூகத்திற்கு வழங்கியுள்ளான்ளூ அவை ரஜப், ஷஃபான் மற்றும் ரமழான் மாதங்களாகும். முன்சென்ற சமூகங்களுக்கு கொடுக்காத மூன்று இரவுகளையும் இறைவன் இச்சமூகத்திற்கு வழங்கியுள்ளான்ளூ அவை பிறை 13, பிறை 14, பிறை 15 இரவுகளாகும். மேலும் முன்சென்ற சமூகத்தாருக்கு வழங்காத (மிகவும் சிறப்புமிக்க) மூன்று சூராக்களையும் இச்சமூகத்திற்கு வழங்கியுள்ளான் ளூ அவை சூரா யாஸீன், சூரா முல்க், சூரா இக்லாஸாகும். யார் இம்மூன்று சிறப்புக்களையும் ஒன்றிணைக்கின்றாரோ , அவர் இச்சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட மிக பெறுமதியான விடயங்களை ஒன்றிணைத்துவிட்டார்'.
இமாம் அவர்களிடம் இவைகளை எப்படி ஒன்றிணைப்பது? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு இமாம் அவர்கள் ' இம்மூன்று மாதங்களினதும் அய்யாமுல் பீழ் இரவுகளில் இவ்வாறு தொழுங்கள் : பிறை 13 இரவில் , இரண்டு ரக்அத்துக்களை கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்துகளிலும் சூரா பாத்திகாவிற்குப் பின்னர் ஒரு முறை சூரா யாஸீன் , சூரா முல்க் மற்றும் சூரா இக்லாஸினையும் ஓதுங்கள்.
பிறை 14 இரவில் , நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். (இரண்டு இரண்டு ரக்அத்துக்களாகத் தொழ வேண்டும்.) ஒவ்வொரு ரக்அத்துகளிலும் சூரா பாத்திகாவிற்குப் பின்னர் ஒரு முறை சூரா யாஸீன் , சூரா முல்க் மற்றும் சூரா இக்லாஸினையும் ஓத வேண்டும்.
பிறை 15 இரவில், ஆறு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். (இரண்டு இரண்டு ரக்அத்துக்களாகத் தொழ வேண்டும்.) ஒவ்வொரு ரக்அத்துகளிலும் சூரா பாத்திகாவிற்குப் பின்னர் ஒரு முறை சூரா யாஸீன் , சூரா முல்க் மற்றும் சூரா இக்லாஸினையும் ஓத வேண்டும்'.
இமாம் அவர்கள் இத்தொழுகையின் சிறப்பினை இவ்வாறு கூறினார்கள்: ' யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர், இம்மூன்று மாதங்களினதும் முழுச்சிறப்பினையும் அடைந்துகொண்டார். மேலும் இறைவன் (இணைவைப்பைத் தவிர) அவரது அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கின்றான்'.

 ஷஃபான் பிறை பதினைந்தாம் இரவு:
இவ்விரவு மிகவும் சிறப்புமிக்க ஓர் இரவாகும். இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் , தனது தந்தை இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஷஃபான் பிறை பதினைந்தாம் இரவின் சிறப்புபற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவிக்கின்றார்கள்: ' லைலத்துல் கத்ர் இரவினை அடுத்து, வருடத்தில் மிகவும் சிறப்புமிக்க இரவு இதுவாகும். இவ்விரவில் இறைவன் தனது அருளினை தனது அடியார்கள் மீது இறக்குகின்றான். மேலும் தனது கருணையினால் அவர்களை மன்னிக்கின்றான். இவ்விரவில் இறைவனை நெருங்க முயற்சி செய்யுங்கள்! ஏனெனில் இவ்விரவில் பாவச்செயல்களைத் தவிர்த்து வேறு தேவையென்று வருவோரை வெறும் கையோடு அனுப்பமாட்டேன் என இறைவன் தன்மீது ஆணையிட்டுள்ளான். லைலத்துல் கத்ரை எவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் வழங்கினானோ , அவ்வாறு இவ்விரவை அஹ்லுல்பைத்தான எங்களுக்கு வழங்கியுள்ளான். எனவே, இவ்விரவில் இறைவனைப் புகழ்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் மூழ்கியிருங்கள்'.

 இவ்விரவின் சிறப்புக்களிலும் அருள்களிலும் ஒன்றுதான் ஹிஜ்ரி 255இல் காலத்தின் இமாம் - இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனித பிறப்பாகும்.
இவ்விரவில் செய்ய வேண்டிய அமல்கள்:
1. குளித்தல்: இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஹதீஸின் பிரகாரம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான காரணமாக அமைகின்றது.

2. இவ்விரவை கண்விழித்து உயிர்ப்பித்தல்:
தொழுகைகளிலும் துஆக்களிலும் பாவமன்னிப்புத் தேடுவதிலும் இவ்விரவை கழிக்க வேண்டும்.
அமீருல்முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: ' ஷஃபான் மாதத்தின் பிறை பதினைந்து இரவு வந்துவிட்டால், அவ்விரவில் இறைவனை வணங்குவதில் கழியுங்கள். அதன் பகலில் நோன்பு வையுங்கள். ஏனெனில் இவ்விரவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இறைவனிடமிருந்து இவ்வாறு அழைப்பு வருகின்றது : 'தனது பாவங்களை மன்னிக்கும் படி என்னிடம் பாவமன்னிப்பு கேட்போர் யாருமில்லையா ? அவர்களது பாவங்களை நான் மன்னிக்கின்றேன், தனது உணவினை வேண்டி யாருமில்லையா ? அவர்களது உணவினை நான் விசாலமாக்குகின்றேன்'.

மற்றுமோர் ஹதீஸில் ஹஸ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடம் கூறினார்கள் : ' யார் இந்த இரவில் இறைவனை துதிப்பதிலும் அவனை ஞாபகப் படுத்துவதிலும் , மற்றும் துஆ, தொழுகை , பாவமன்னிப்பு போன்ற விடயங்களிலும் ஈடுபடுகின்றாரோ, இறைவன் அவரது பாவங்களை மன்னிக்கின்றான், மேலும் அவரது நிரந்தர வசிப்பிடமாக சுவனத்தினை ஆக்குகின்றான்'. ' முஹம்மதே(ஸல்)! இவ்விரவை உயிர்ப்பியுங்கள்!, மேலும் உமது சமூகத்தாரையும் இவ்விரவை உயிர்ப்பிக்கும் படி கட்டளையிடுங்கள்!.
ஹஸ்ரத் ஜிப்ரீல் அவர்கள் இவ்விரவின் சிறப்புக்களின் ஒன்றாக இறுதியில் இவ்வாறு கூறினார்கள் : 'இறையருளிலிருந்து தடுக்கப்பட்டவர் யாரெனில் இவ்விரவின் நலவுகளையும் அருளினையும் பெற்றுக்கொள்ளாதவராவார்'.

இமாம் அலீ பின் ஹுஸைன் ஸஜ்ஜாத் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களிடமிருந்தும் இவ்விரவினை உயிர்ப்பிக்கும் படியாக ஹதீஸ்கள் வந்துள்ளன.

நபியவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கும் ஓர் அறிவிப்பில் 'யார் இந்த இரவினை உயிர்ப்பிக்கின்றாரோ அனைத்து உள்ளங்களும் மரணிக்கும் நாளில் அவரது உள்ளம் மரணிக்காது'.

3. இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தரிசித்தல் இவ்விரவில் மிகவும் சிறப்புக்குரிய செயலாகும். பாவங்கள் மன்னிக்கப்பட காரணமாக அமைகின்றது.
இவ்விரவில் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தரிசிப்பதன் சிறப்பு பற்றி பல ஹதீஸ்கள் வந்துள்ளன, அவற்றில் சில:
 அபூ பஸீர் அவர்கள் , இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து அறிவிக்கின்றார்கள்:
'யார் 124000 நபிமார்கள் தன்னோடு முகமம் செய்ய விரும்புகின்றாரோ , அவர் ஷஃபான் 15 இல் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தரிசிக்கட்டும்ளூ ஏனெனில் இறைவனது அனுமதியோடு அனைத்து நபிமார்களின் ஆத்மாக்களும் அவரை தரிசிக்க வருகின்றன'.
 இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: 'ஷஃபான் 15 ஆகிவிட்டால் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தரிசிக்க வந்தவர்களை நோக்கி மேலிருந்து ஓர் அழைப்பு இவ்வாறு கூறும் 'தற்போது உங்களது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்களாக திரும்புங்கள், உங்களுக்கான நற்கூலியினை இறைவனும் அவனது தூதரும் வழங்குவார்கள்'.

இவ்விரவில் குறைந்த படியான ஷியாரத் என்னவெனில், வீட்டின் மேலோ அல்லது திறந்த வெளிக்கோ சென்று , வானின் வலது , இடது பக்கங்களை பார்த்து விட்டு , தலையினை உயர்த்தி வானை நோக்க வேண்டும். பின்பு வலக்கையின் சுட்டுவிரலால் கிப்லாவினை சுட்டிக் காட்டி, கிப்லாவினை நோக்கி இவ்வாறு கூற வேண்டும்:
السَّلَامُ عَلَيْكَ يَا أَبَا عَبْدِ اللَّهِ، السَّلَامُ عَلَيْكَ يَابْنَ رَسُولِ اللَّهِ السَّلَامُ عَلَيْكَ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَاتُه‏
மேலும் அவ்விரவில் செய்யும் படி மற்றுமோர் ஷியாரத்தினை இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
بسم الله الرحمن الرحیم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்
الّلهُمَّ صَلِّ عَلی مُحَمَّد وَآلِ مُحَمَّد وَعَجِّل فَرَجَهُم
இறைவா! நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது குடும்பத்தின் மீதும் ஸலவாத் கூறுவாயாக! மேலும் அவர்களுடைய மகிழ்ச்சியினை (இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வெளிப்பாட்டினால்) துரிதப்படுத்துவாயாக!
الْحَمْدُ لِلَّهِ‏ الْعَلِيِ‏ الْعَظِيمِ‏
புகழனைத்தும் உயர்வும் மகத்துவமுமிக்க அல்லாஹ்விற்கே!
السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا الْعَبْدُ الصَّالِحُ الزَّكِيُّ
பரிசுத்தமான, நல்லடியாரான உங்கள் மீது இறைவனது சாந்தி உன்டாகட்டும்!
أُوَدِّعُكَ شَهَادَةً مِنِّي لَكَ يُقَرِّبُنِي إِلَيْكَ فِي يَوْمِ شَفَاعَتِكَ
உங்;களது ஷபாஅத்துக்குறிய நாளில் உங்களை நெருங்குவதற்காக எனது சாட்சியினை உங்களிடம் பாதுகாப்பாக விட்டுச்செல்கின்றேன்.

أَشْهَدُ أَنَّكَ قُتِلْتَ وَ لَمْ تَمُتْ بَلْ بِرَجَاءِ حَيَاتِكَ حَيِيَتْ قُلُوبُ شِيعَتِكَ
நிச்சயமாக நீங்கள் இறைபாதையில் கொலை செய்யப்பட்டீர்கள் , நீங்கள் மரணிக்கவில்லை, நீங்கள் உயிரோடு இருக்கின்றீர் என்ற நம்பிக்கையில் தான் உமது ஷீஆக்களின் உள்ளங்கள் உயிரோட்டம் பெற்றுள்ளன.
وَ بِضِيَاءِ نُورِكَ اهْتَدَى الطَّالِبُونَ إِلَيْكَ
உம்மை நாட்டம் கொண்டோர் உமது ஒளியின் பிரகாசத்தினால் நேர்வழியினை அடைந்து கொண்டனர்.
وَ أَشْهَدُ أَنَّكَ نُورُ اللَّهِ الَّذِي لَمْ يُطْفَ وَ لَا يُطْفَأُ أَبَداً
நிச்சயமாக நீர் இறைவனின் அணையாத ஒளியாவீர் , ஒரு போதும் அந்த ஒளியினை அணைக்க முடியாது.
وَ أَنَّكَ وَجْهُ الله الَّذِي لَمْ يَهْلِكْ وَ لَا يُهْلَكُ أَبَداً
நிச்சயமாக நீர் இறைவனின் அழியாத விம்பமாவீர் , ஒரு போதும் அது அழிந்து போகாது .
وَ أَشْهَدُ أَنَّ هَذِهِ التُّرْبَةَ تُرْبَتُكَ وَ هَذَا الْحَرَمَ حَرَمُكَ وَ هَذَا الْمَصْرَعَ مَصْرَعُ بَدَنِكَ
நிச்சயமாக இந்த மண் உமது மண் என்றும், இந்த ஹரம் உமது ஹரம் என்றும் , மேலும் இந்த கொலைக்களம் உமது புனித உடல் கொலைசெய்யப்பட்ட இடம் என்றும் சாட்சி கூறுகின்றேன்.
لَا ذَلِيلٌ وَ اللَّهِ مُعِزُّكَ
இறைவன் மீது ஆணையாக! உம்மை கண்ணியப் படுத்துவோருக்கு ஒரு போதும் இழிவில்லை.

وَ لَا مَغْلُوبٌ وَ اللَّهِ نَاصِرُكَ
இறைவன் மீது ஆணையாக! உமக்கு உதவி செய்வோர் ஒருபோதும் தோல்வியடையமாட்டார்.
هَذِهِ شَهَادَةٌ لِي عِنْدَكَ إِلَى يَوْمِ قُبِضَ رُوحِي بِحَضْرَتِكَ
உமக்கு மத்தியில் எனது ஆத்மா கைப்பற்றப்படும் நாள் வரைக்கும் உங்களிடம் நான் தரும் சாட்சியம் இதுவாகும்.
وَ السَّلَامُ عَلَيْكَ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَاتُه‏
இறைவனது அருளும் சாந்தியும் உங்கள் மீது உண்டாகட்டும்!.

4. செய்யித் இப்னு தாவூஸ் (ரஹ்) , மற்றும் செய்க் தூஸி (ரஹ்) ஆகியோர் அறிவிக்கின்ற கீழ்வரும் துஆவினை ஓத வேண்டும் ளூ இதனை ஓதுவது காலத்தின் இமாம்- இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களை தரிசித்ததைப் போலாகும்.
اللّٰهُمَّ بِحَقِّ لَيْلَتِنا هٰذِهِ وَمَوْلُودِها وَحُجَّتِكَ
இறைவா! இவ்விரவின் பொறுட்டாலும், இவ்விரவில் பிறந்த உனது அத்தாட்சியான இந்தக் குழந்தையின் பொறுட்டாலும் ,
وَمَوْعُودِهَا الَّتِى قَرَنْتَ إِلىٰ فَضْلِها فَضْلاً،
வாக்களிக்கப்பட்ட இவ்விரவை நீ பல சிறப்புக்களோடு ஒன்றித்து சிறப்பித்துவிட்டாய்.
فَتَمَّتْ كَلِمَتُكَ صِدْقاً وَعَدْلاً، لَامُبَدِّلَ لِكَلِماتِكَ،
உனது வார்த்தைகளும் நீதியும் பரிபூரணமடைந்துவிட்டது, உனது வார்த்தைகளை மாற்றுவதற்கு யாருமில்லை.

وَلَا مُعَقِّبَ لِآياتِكَ،
உனது அத்தாட்சிகளை பிற்போட யாருமில்லை,
نُورُكَ الْمُتَأَ لِّقُ،
உனது ஒளி பிரகாசமானது,
وَضِياؤُكَ الْمُشْرِقُ،
உனது ஒளி பிரகாசிக்கிறது,
وَالْعَلَمُ النُّورُ فِى طَخْياءِ الدَّيْجُورِ،
இருளடைந்த இரவுகளில் நீயே ஒளிகம்பமாவாய்,
الْغائِبُ الْمَسْتُورُ جَلَّ مَوْلِدُهُ، وَكَرُمَ مَحْتِدُهُ ،
அவரது கோத்திரம் சங்கைமிக்கதும், அவரது பிறப்பு பிரமாண்டமான கண்ணியமிக்கதாகவும் இருந்த அவர் திறையின் பின்னால் மறைக்கப்பட்டுள்ளார்,
وَالْمَلائِكَةُ شُهَّدُهُ، وَاللّٰهُ ناصِرُهُ وَمُؤَيِّدُهُ،
மலக்குகள் அவருக்கு சாட்சியாளர்கள், இறைவன் அவருக்கு உதவியாளனும் அவரை உறுதிப்படுத்துபவனுமாவான்
إِذا آنَ مِيعادُهُ، وَالْمَلائِكَةُ أَمْدادُهُ،
வாக்களிக்கப்பட்ட நாள் வருகின்ற போது மலக்குமார்கள் அவருக்கு உதவுவார்கள்.
سَيْفُ اللّٰهِ الَّذِى لَا يَنْبُو،
அவர் கூர்மை மங்காத இறைவனின் வாளாவார்,
وَنُورُهُ الَّذِى لَايَخْبُو،
அவனது ஒளியும் அணைந்துபோகாது,
وَذُو الْحِلْمِ الَّذِى لَايَصْبُو،
தேவையற்ற விடயங்களை செய்யாத பொறுமையாளன்,
مَدارُ الدَّهْرِ، وَنَوامِيسُ الْعَصْرِ، وَوُلاةُ الْأَمْرِ،
யுகங்கள் சுழலும் மையம், ஒவ்வொரு காலத்தினதும் இறை இரகசியம், அவனது கட்டளைகளை நிறைவேற்றும் ஆட்சியாளர்கள்,
وَالْمُنَزَّلُ عَلَيْهِمْ مَا يَتَنَزَّلُ فِى لَيْلَةِ الْقَدْرِ،
லைலத்துல் கத்ர் இரவில் இறங்குவது அவர்கள் மீதே இறங்குகின்றது,
وَأَصْحابُ الْحَشْرِ وَالنَّشْرِ، تَراجِمَةُ وَحْيِهِ،
அவர்களே எழுப்பப்படும் (மறுமை)நாளுக்கு உரிமையாளர்கள், இறைவனது வஹியின் விரிவுரையாளர்கள்,
وَوُلاةُ أَمْرِهِ وَنَهْيِهِ
இறைவனது ஏவல்களையும் விலக்;கல்களையும் அமுல்படுத்துபவர்கள்,
اللّٰهُمَّ فَصَلِّ عَلَىٰ خاتِمِهِمْ وَقائِمِهِمُ الْمَسْتُورِ عَنْ عَوالِمِهِمْ
இறைவா! உலக மக்களுக்கு மத்தியிலிருந்து மறைந்திருக்கும் அவர்களின் இறுதியானவர் மீது ஸலவாத் கூறுவாயாக!
وَأَدْرِكْ بِنا أَيَّامَهُ وَظُهُورَهُ وَقِيامَهُ،
இறைவா! அவரது வருகையும் எழுச்சியும் இடம்பெறும் நாட்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தினை எங்களுக்குத் தருவாயாக!


وَاجْعَلْنا مِنْ أَنْصارِهِ، وَاقْرِنْ ثارَنا بِثارِهِ،
எங்களை அவரது நண்பர்களாக ஆக்குவாயாக! மேலும் ஓட்டப்பட்ட இரத்தங்களுக்கு நீதி தேடும் எங்களது உணர்வுகளை அவருடைய அந்த உணர்வோடு இணைத்துவிடு!
وَاكْتُبْنا فِى أَعْوانِهِ وَخُلَصائِهِ،
எங்களை அவரது தூய்மையான உதவியாளர்களில் பதிவுசெய்வாயாக!
وَأَحْيِنا فِى دَوْلَتِهِ ناعِمِينَ، وَبِصُحْبَتِهِ غانِمِينَ،
எங்களை அவரது ஆட்சியில் வரம்பெற்றவர்களாகவும், அவரோடு ஒன்றாக இருந்து அருள் பெற்றவர்களாகவும் ஆக்குவாயாக!
وَبِحَقِّهِ قائِمِينَ، وَمِنَ السُّوءِ سالِمِينَ، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ،
கருணையாளர்களுக்கெல்லாம் மிகக் கருணையாளனே! அவரது உரிமைகளுக்காக போராடுபவர்களாகவும் , அனைத்து தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றவர்களாகவும் எம்மை ஆக்கியருள்!
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعالَمِينَ،
புகழனைத்தும் உலகைப் படைத்துபரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே!
وَصَلَواتُهُ عَلَىٰ سَيِّدِنا مُحَمَّدٍ خاتَمِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ وَعَلَىٰ أَهْلِ بَيْتِهِ الصَّادِقِينَ وَعِتْرَتِهِ النَّاطِقِينَ،
அவனது ஸலவாத்து நபிமார்கள் மற்றும் ரஸுல்மார்களுக் கெல்லாம் இறுதியானவரான நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும், உண்மையாளர்களான அவரது குடும்பத்தினர் மற்றும் உண்மையுரைக்கும் அவரது கிளையார்கள் மீதும் உரித்தாகட்டும்.

وَالْعَنْ جَمِيعَ الظَّالِمِينَ،
அனைத்து அநியாயக்காரர்கள் மீதும் உனது சாபம் உண்டாகட்டும்!
وَاحْكُمْ بَيْنَنا وَبَيْنَهُمْ يَا أَحْكَمَ الْحاكِمِينَ
நீதியாளர்களுக்கெல்லாம் நீதியாளனே! அவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் தீர்ப்பளிப்பாயாக!


5. செய்க் தூஸி அவர்கள் , இஸ்மாயீல் பின் பழ்ல் ஹாஷிமி அவர்களிடமிருந்து , இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஃபான் 15 இரவில் கீழ்வரும் துஆவினை ஓதும் படி கற்றுக்கொடுத்ததாக அறிவிக்கின்றார்கள்:
اللّٰهُمَّ أَنْتَ الْحَىُّ الْقَيُّومُ الْعَلِىُّ الْعَظِيمُ
இறைவா! நீயே நித்திய ஜீவனுடையவன், என்றும் நிலைத்திருப்பவனும் நீயே!, மேலானவனும், கண்ணியமிக்கவனும் நீயே!
الْخالِقُ الرَّازِقُ الْمُحْيِى الْمُمِيتُ الْبَدِىءُ الْبَدِيعُ،
நீயே படைப்பாளன், உணவளிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச்செய்பவன், படைப்புக்களை ஆரம்பித்து வைத்தவனும் உருவாக்கியவனும் நீயே!
لَكَ الْجَلالُ، وَلَكَ الْفَضْلُ، وَلَكَ الْحَمْدُ،
கண்ணியமும் , சிறப்பும் , புகழ்ச்சியும் உனக்கே உரியன


وَلَكَ الْمَنُّ، وَلَكَ الْجُودُ، وَلَكَ الْكَرَمُ،
நலவுகளும், கொடைத்தன்மையும், அருளும் உனக்கே உரித்தானன,
وَلَكَ الْأَمْرُ، وَلَكَ الْمَجْدُ، وَلَكَ الشُّكْرُ،
கட்டளைகளும், பெருந்தன்மையும், நன்றியும் உனக்கே உரியன,
وَحْدَكَ لا شَرِيكَ لَكَ،
நீ ஒருவன் உனக்கு இணை யாருமில்லை,
يَا واحِدُ يَا أَحَدُ يَا صَمَدُ
ஒருவனே! ஏகனே! தேவைகளற்றவனே!
يَا مَنْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ،
யாரையும் பெறாதவனே!, யாராலும் பெறப்படாதவனே! , அவனுக்கு நிகராக எவருமில்லை!
صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது குடும்பத்தின் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
وَاغْفِرْ لِى وَارْحَمْنِى
என்னை மன்னித்து , கருணைகாட்டுவாயாக!
وَاكْفِنِى مَا أَهَمَّنِى وَاقْضِ دَيْنِى،
எனது கடன்களை நிவர்த்தி செய்து, எனது தேவைகளையும் நிறைவேற்றுவாயாக!

وَوَسِّعْ عَلَىَّ فِى رِزْقِى،
என் மீதான அருளினை விருத்தியாக தந்தருள்வாயாக!
فَإِنَّكَ فِى هٰذِهِ اللَّيْلَةِ كُلَّ أَمْرٍ حَكِيمٍ تَفْرُقُ،
ஏனெனில் நிச்சயமாக நீயே இவ்விரவில் அனைத்து கடினமான விடயங்களையும் தீர்மானிக்கின்றாய்,
وَمَنْ تَشاءُ مِنْ خَلْقِكَ تَرْزُقُ،
உனது படைப்புக்களில் நீ நாடுவோருக்கு உணவளிக்கின்றாய்!
فَارْزُقْنِى وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ،
உணவளிப்போர்களில் மிகவும் சிறந்தவனே! எனக்கும் உணவளிப்பாயாக!
فَإِنَّكَ قُلْتَ وَأَنْتَ خَيْرُ الْقائِلِينَ النَّاطِقِينَ
உண்மையினை உரைப்பதில் சிறந்தவனே! நிச்சயமாக நீயே கூறியுள்ளாய்,
﴿وَ سْئَلُوا اللّٰهَ مِنْ فَضْلِهِ﴾ فَمِنْ فَضْلِكَ أَسْأَلُ،
'இறைவனது அருளிலிருந்து அவனிடம் கேளுங்கள்' என்று, எனவே , உனது அருளினை வேண்டுகின்றேன்.
وَ إِيَّاكَ قَصَدْتُ،
இன்னும் உன்னையே நாடிநிற்கிறேன்,
وَابْنَ نَبِيِّكَ اعْتَمَدْتُ،
உனது தூதரின் புதல்வரையே நம்பியுள்ளேன்,
وَلَكَ رَجَوْتُ،
உனது அருளையே எதிர்பார்த்துள்ளேன்,
فَارْحَمْنِى يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே! என் மீதும் கருணைகாட்டுவாயாக!

6. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கீழ் வரும் துஆவினை இவ்விரவில் ஓதியுள்ளார்கள்:

اللّٰهُمَّ اقْسِمْ لَنا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنا وَبَيْنَ مَعْصِيَتِكَ،
இறைவா! எங்களுக்கும் உனக்கு மாறு செய்வதற்குமிடையில் இடைவெளியினை ஏற்படுத்துமளவிற்கு உன்மீதான அச்சத்தினை எங்களுக்குத் தருவாயாக!
وَمِنْ طاعَتِكَ مَا تُبَلِّغُنا بِهِ رِضْوانَكَ،
உனது திருப்பொருத்தத்தினை அடையுமளவிற்கு உன்னை வணங்கும் பாக்கியத்தினைத் தருவாயாக!
وَمِنَ الْيَقِينِ مَا يَهُونُ عَلَيْنا بِهِ مُصِيباتُ الدُّنْيا
உலகத்தின் துன்பங்களெல்லாம் எங்களுக்கு இலகுவாகும் அளவிற்கு உறுதிநிலையினைத் தருவாயாக!
اللّٰهُمَّ أَمْتِعْنا بِأَسْماعِنا وَأَبْصارِنا وَقُوَّتِنا مَا أَحْيَيْتَنا
இறைவா! உயிரோடு உள்ளவரை எங்களையு; , எங்களது கண்களையும் , காதுகளையும், ஆற்றல்களையும் பிரயோசனமாக பயன்படுத்த வைப்பாயாக!
وَاجْعَلْهُ الْوارِثَ مِنَّا،
அவைகளை எங்களது வாரிசுக்களாக ஆக்குவாயாக!

وَاجْعَلْ ثارَنا عَلَىٰ مَنْ ظَلَمَنا،
எங்களுக்கு அநீதியிழைத்தோர் மீது எங்களது இரத்தத்தினை பழிதீர்க்கும் ஒன்றாக வைப்பாயாக!
وَانْصُرْنا عَلَىٰ مَنْ عادانا،
எங்களது எதிரிகளை வெற்றிகொள்ள எங்களுக்கு உதவிசெய்வாயாக!
وَلَا تَجْعَلْ مُصِيبَتَنا فِى دِينِنا،
எமது துன்பங்களை எமது மார்க்கத்தில் வைத்துவிடாதே!
وَلَا تَجْعَلِ الدُّنْيا أَكْبَرَ هَمِّنا وَلَا مَبْلَغَ عِلْمِنا،
உலகை எங்களது அறிவின் பெறுமதியாகவும், எங்களது மிகப்பெரும் கவலையாகவும் ஆக்கிவிடாதே!
وَلَا تُسَلِّطْ عَلَيْنا مَنْ لَايَرْحَمُنا،
எங்கள் மீது கருணை காட்டாதவர்களை எங்களை ஆட்சிசெய்பவர்களாக ஆக்கிவிடாதே!
بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே! உனது கருணையைக் வேண்டிநிற்கிறோம்.
இந்த துஆ ஓர் பரிபூரணமான பிரார்த்தனையாகும். இதனை ஏனைய நேரங்களிலும் ஓதுவது சிறப்புக்குரியதாகும். நபியவர்கள் இதனை அனைத்து நேரங்களிலும் ஓதியதாகவும் சில அறிவிப்புக்கள் உள்ளன.

7. ஷஃபான் மாதம் தினமும் ஓத வேண்டிய ஸலவாத்தினை ஓத வேண்டும்.

8. அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குமைல் பின் ஸியாத் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த துஆ குமைலை ஓத வேண்டும்.


9. இவ்விரவில் 100 முறை سبحان الله 100 முறை الحمد لله 100 முறை الله اکبر 100 முறை لا اله الا الله ஓத வேண்டும். இமாம் முஹம்மது பின் அலீ பாக்கிர் அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : ' யார் இதனை செய்கின்றாரோ , அவரது கடந்த கால பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். மேலும் அவரது இம்மை , மறுமைக்கான தேவைகளையும் நிறைவேற்றுகின்றான்'.

10. அபூ யஹ்யா அவர்களிடமிருந்து செய்க் தூஸி அவர்கள் இவ்வாறு அறிவிப்புச் செய்கின்றார்கள்:
'எனது இமாம் - இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஷஃபான் 15 இரவில் ஓத வேண்டிய மிகச் சிறந்த துஆ எதுவெனக் கேட்டேன்' அதற்கு இமாம் அவர்கள் ' இஷாத் தொழுகையினைத் தொழுதுவிட்டு , இரண்டு ரக்அத் தொழுகையுள்ளதுளூ அதில் முதலாம் ரக்அத்தில் சூரா பாத்திகாவிற்குப் பின் சூரா காபிரூனையும் , இரண்டாம் ரக்அத்தில் சூரா பாத்திகாவிற்குப் பின் சூரா இக்லாஸையும் ஓத வேண்டும். தொழுகை முடிந்ததும் 33 முறை سُبْحانَ اللّٰه;, 33 முறை الحَمْدُ للّٰه, 34 முறை اللّٰه أَکْبَر கூற வேண்டும். பின்பு இந்த துஆவினை ஓதுவீராக!
يَا مَنْ إِلَيْهِ مَلْجَأُ الْعِبادِ فِى الْمُهِمَّاتِ،
கஷ்டங்களின் போது அடியார்களுக்கு அடைக்களமாக இருப்பவனே!
وَ إِلَيْهِ يَفْزَعُ الْخَلْقُ فِى الْمُلِمّاتِ،
பிரச்சனைகளின் போது படைப்பினங்கள் அவனிடமே தஞ்சமடைவார்கள்
يَا عالِمَ الْجَهْرِ وَالْخَفِيّاتِ،
மறைவானவற்றையும் , வெளிப்படையானதையும் நன்கறிந்தவனே!
يَا مَنْ لَاتَخْفىٰ عَلَيْهِ خَواطِرُ الْأَوْهامِ وَتَصَرُّفُ الْخَطَراتِ،
கற்பனைகளும், இரகசியங்களும் மறைக்கப்படாதவனே! முக்கியமான விடயங்களில் ஏற்படும் மாற்றங்களையும் அறிபவனே!
يَا رَبَّ الْخَلائِقِ وَالْبَرِيَّاتِ،
படைப்புக்களினதும் சிருஷ்டிகளினதும் இரட்சகனே!
يَا مَنْ بِيَدِهِ مَلَكُوتُ الْأَرَضِينَ وَالسَّماواتِ،
வானங்களினதும் பூமியினதும் ஆட்சி அதிகாரத்தின் சொந்தக்காரனே!
أَنْتَ اللّٰهُ لَاإِلٰهَ إِلّا أَنْتَ،
நீயே இறைவன் ! உன்னையன்றி வேறு இறைவனில்லை,
أَمُتُّ إِلَيْكَ بِلا إِلٰهَ إِلّا أَنْتَ،
உன்னையன்றி வேறு இறைவனில்லை என்பதினைக் கொண்டு உன்னிடம் இறைஞ்சுகின்றேன்,
فَيا لا إِلٰهَ إِلّا أَنْتَ اجْعَلْنِى فِى هٰذِهِ اللَّيْلَةِ مِمَّنْ نَظَرْتَ إِلَيْهِ فَرَحِمْتَهُ،
உன்னையன்றி வேறு இறைவனில்லை. இவ்விரவில் உனது கருணைப் பார்வைக்குள் வந்தவர்களில் என்னையும் ஆக்குவாயாக!
وَسَمِعْتَ دُعاءَهُ فَأَجَبْتَهُ،
அவரது பிரார்த்தனையினை செவியுற்று , அதற்கு பதிலளித்தாயே!,
وَعَلِمْتَ اسْتِقالَتَهُ فَأَقَلْتَهُ،
அவரது பாவமன்னிப்பினை அறிந்து , அவரை மன்னித்தாயே!,
وَتَجاوَزْتَ عَنْ سالِفِ خَطِيئَتِهِ وَعَظِيمِ جَرِيرَتِهِ،
அவரது கடந்த கால தவறுகளையும் பெரும் பெரும் பாவங்களையும் அறிந்து, அவற்றை மன்னித்தாயே!
فَقَدِ اسْتَجَرْتُ بِكَ مِنْ ذُنُوبِى،
எனவே, எனது பாவங்களிலிருந்து உன்னிடம் தஞ்சமடைகின்றேன்,
وَلَجَأْتُ إِلَيْكَ فِى سَتْرِ عُيُوبِى
எனது குறைகளை மறைக்கும் படி உன்னிடம் தஞ்சமடைகின்றேன்.
اللّٰهُمَّ فَجُدْ عَلَىَّ بِكَرَمِكَ وَفَضْلِكَ،
இறைவா! உனது அருளிலும் கொடையிலுமிருந்து எனக்கு வழங்குவாயாக!
وَاحْطُطْ خَطاياىَ بِحِلْمِكَ وَعَفْوِكَ،
உனது பொறுமையினாலும், மன்னிப்பினாலும் எனது தவறுகளை மறைத்துவிடு!
وَتَغَمَّدْنِى فِى هٰذِهِ اللَّيْلَةِ بِسابِغِ كَرامَتِكَ،
இவ்விரவில் உனது கொடைகளில் என்னை மூழ்கச் செய்வாயாக!

وَاجْعَلْنِى فِيها مِنْ أَوْلِيائِكَ الَّذِينَ اجْتَبَيْتَهُمْ لِطاعَتِكَ،
உன்னை அடிபணிந்து நடப்பதற்காக நீ தெரிவு செய்த உனது நேசர்களில் என்னையும் இவ்விரவில் இணைத்து விடு!
وَاخْتَرْتَهُمْ لِعِبادَتِكَ، وَجَعَلْتَهُمْ خالِصَتَكَ وَصِفْوَتَكَ
உன்னை வணங்குவதற்கு அவர்களை நீ தெரிவு செய்தாய்! அவர்களை உன்னிடத்தில் தூய்மையானவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டவர்களாகவும் ஆக்கினாய்.
اللّٰهُمَّ اجْعَلْنِى مِمَّنْ سَعَدَ جَدُّهُ،
இறைவா! தமது முயற்சியினால் (உனது) சீதோவித்தனத்தைப் பெற்றவர்களில் என்னையும் ஆக்குவாயாக!
وَتَوَفَّرَ مِنَ الْخَيْراتِ حَظُّهُ،
(உனது)நற்பாக்கியங்களில் அதிகபட்ச நன்மையைப் பெற்றார்களே!(அவர்களில் என்னையும் ஆக்கியருள்வாயாக!)
وَاجْعَلْنِى مِمَّنْ سَلِمَ فَنَعِمَ، وَفازَ فَغَنِمَ،
தேகாரோக்கியமடைந்து, அருள்கள் பெற்று, வெற்றியடைந்து , அவற்றை பயன்படுத்தியோர்களில் என்னையும் ஆக்குவாயாக!
وَاكْفِنِى شَرَّ مَا أَسْلَفْتُ،
நான் முன்செய்த தீங்குகளிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!
وَاعْصِمْنِى مِنَ الازْدِيادِ فِى مَعْصِيَتِكَ،
உனக்கு மாறுசெய்யும் அதீதத்திலிருந்து என்னை விடுவிப்பாயாக!
وَحَبِّبْ إِلَىَّ طاعَتَكَ وَمَا يُقَرِّبُنِى مِنْكَ وَيُزْلِفُنِى عِنْدَكَ
உன்னிடத்தில் நெருக்கத்தினை ஏற்படுத்தும் விடயங்களையும் உன்னை அடிபணிந்து நடப்பதினையும் எனது விருப்பத்துக்குறிய விடயங்களாக ஆக்கியருள்வாயாக!
سَيِّدِى إِلَيْكَ يَلْجَأُ الْهارِبُ،
என் எஜமானே! விரண்டோடும் எவரும் உன்னிடமே தஞ்சமடைவார்.
وَمِنْكَ يَلْتَمِسُ الطَّالِبُ،
தேவையுடைய எவரும் உன்னிடமே வேண்டிநிற்பார்.
وَعَلَىٰ كَرَمِكَ يُعَوِّلُ الْمُسْتَقِيلُ التَّائِبُ،
பாவமன்னிப்புத் தேடுபவர் உனது மன்னிக்கும் பெருந்தன்மையிலேயே நாட்டம் கொள்வார்.
أَدَّبْتَ عِبادَكَ بِالتَّكَرُّمِ وَأَنْتَ أَكْرَمُ الْأَكْرَمِينَ،
கருணைகாட்டுவதன் மூலம் உனது அடியார்களை பயிற்றுவித்தாய், நீயே! சங்கையானவர்களுக்கெல்லாம் சங்கையானவன்.
وَأَمَرْتَ بِالْعَفْوِ عِبادَكَ وَأَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
உனது அடியார்களுக்கு மன்னிக்கும் படி கட்டளையிட்டாய், நீயே! மன்னிப்பவனும் கருணையாளனுமாவாய்.
اللّٰهُمَّ فَلا تَحْرِمْنِى مَا رَجَوْتُ مِنْ كَرَمِكَ،
இறைவா! உனது அருளின் மீது நான் கொண்டுள்ள எதிர்பார்ப்பினை நிராசையாக்கி , அவற்றை பயன்படுத்தாமல் என்னை தடுத்துவிடாதே!
وَلا تُؤْيِسْنِى مِنْ سابِغِ نِعَمِكَ،
விரிந்து கிடக்கும் உனது அருட்கொடைகளில் என்னை நிராசையாக்கிவிடாதே!
وَلَا تُخَيِّبْنِى مِنْ جَزِيلِ قِسَمِكَ فِى هٰذِهِ اللَّيْلَةِ لِأَهْلِ طاعَتِكَ،
இவ்விரவில் உன்னை வணங்குவோருக்கு நீ அளிக்கும் அருள்களை எனக்கு தடுத்துவிடாதே!
وَاجْعَلْنِى فِى جُنَّةٍ مِنْ شِرارِ بَرِيَّتِكَ،
உனது படைப்புக்களின் தீங்குகளிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!
رَبِّ إِنْ لَمْ أَكُنْ مِنْ أَهْلِ ذٰلِكَ فَأَنْتَ أَهْلُ الْكَرَمِ وَالْعَفْوِ وَالْمَغْفِرَةِ؛
என் இரட்சகா! நான் அதற்கு தகுதியற்றவனாக இருப்பினும், நீ கொடைக்கும் , மன்னிப்பிற்கும், பெருந்தன்மைக்கும் உரிமையாளனாவாய்.
وَجُدْ عَلَىَّ بِما أَنْتَ أَهْلُهُ لَابِما أَسْتَحِقُّهُ،
எனது தகுதிக்கேற்ப தராமல் உனது தகுதிக்கேற்ப எனக்கு அருள் புரிவாயாக!
فَقَدْ حَسُنَ ظَنِّى بِكَ،
ஏனெனில் உன் மீதான எனது நல்லெண்ணம் மிகவும் உறுதியானது,
وَتَحَقَّقَ رَجائِى لَكَ،
உன் மீதான எனது எதிர்பார்ப்பு நிகழ்ந்துவிட்டது,
وَعَلِقَتْ نَفْسِى بِكَرَمِكَ
என் ஆத்மா உனது கொடையின் மீது தொங்கிக் கொண்டது,
فَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ، وَأَكْرَمُ الْأَكْرَمِينَ
நீயே! கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன், சங்கையாளர்களுக்கெல்லாம் சங்கையாளன்.
اللّٰهُمَّ وَاخْصُصْنِى مِنْ كَرَمِكَ بِجَزِيلِ قِسَمِكَ،
இறைவா! உனது அருளினை நிறைவாக பயன்படுத்தும் பாக்கியத்தினை எனக்களிப்பாயாக!

وَأَعُوذُ بِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ،
உனது தண்டனையிலிருந்து உன் மன்னிப்பைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன்,
وَاغْفِرْ لِىَ الذَّنْبَ الَّذِى يَحْبِسُ عَلَىَّ الْخُلُقَ،
தீய பண்புகளை என்னில் நிலைத்திருக்கச் செய்யும் எனது பாவங்களை மன்னிப்பாயாக!
وَيُضَيِّقُ عَلَىَّ الرِّزْقَ حَتَّىٰ أَقُومَ بِصالِحِ رِضاكَ،
உனது திருப்பொருத்தத்தினைப் பெற்ற நல்லடியாராக மாறும் வரை அந்தப் பாவங்கள் உனது அருளினை எனக்கு குறையச் செய்கின்றன.
وَأَنْعَمَ بِجَزِيلِ عَطائِكَ،
உனது விசாலமான கொடைகளை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும்,
وَأَسْعَدَ بِسابِغِ نَعْمائِكَ،
உனது அதீத அருளினால் வெற்றியடைந்தவிட்டேன்,
فَقَدْ لُذْتُ بِحَرَمِكَ،
ஏனெனில் உனது சந்நிதியில் நான் தஞ்சமடைந்துவிட்டேன்,
وَتَعَرَّضْتُ لِكَرَمِكَ،
உனது கொடையோடு இணைந்துவிட்டேன்,
وَاسْتَعَذْتُ بِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِحِلْمِكَ مِنْ غَضَبِكَ،
உன் பொறுமையினால் உனது கோபத்திலிருந்தும் , உனது மன்னிப்பைக் கொண்டு உனது தண்டனையிலிருந்தும் பாதுகாப்பு தேடினேன்,

فَجُدْ بِما سَأَلْتُكَ،
எனவே, நான் உன்னிடம் கேட்டவற்றை எனக்கருள்வாயாக!
وَأَنِلْ مَا الْتَمَسْتُ مِنْكَ،
நான் வேண்டிய அனைத்தையும் தந்தருள்வாயாக!
أَسْأَلُكَ بِكَ لَابِشَىْءٍ هُوَ أَعْظَمُ مِنْكَ
உனது பொருட்டால் வேண்டுகின்றேன் , ஏனெனில் உன்னையன்றி எதுவும் பெரிதல்ல.
துஆ முடிந்ததும் சுஜுதுக்கு சென்று , அதில் 20 முறை یا ربّ , 7 முறை یا اللّه, 7 முறை لَاحَوْلَ وَلَا قُوَّةَ إِلّا بِاللّٰهِ என்றும், 10 முறை مَا شاءَ اللّٰهُ என்றும், 10 முறை لَاقُوَّةَ إِلّا بِاللّٰهِ என்றும் கூறிவிட்டு , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறிவிட்டு , உமக்கு தேவையானதை இறைவனிடம் கேட்பீராக! இறைவன் மீது ஆணையாக! யார் இவ்வாறு செய்து விட்டு தனது தேவையினை இறைவனிடம் கேட்கின்றாரோ, அவரது தேவைகள் எத்தனை பெரிதாக இருப்பினும் இறைவன் அதனை தனது அருளினால் நிறைவேற்றுகின்றான்'.

11. செய்க் தூஸி , மற்றும் செய்யித் இப்னு தாவூஸ் ஆகியோர் கீழ் வரும் துஆவினை ஓதும் படி அறிவிப்புச் செய்துள்ளார்கள்:
إِلٰهِى تَعَرَّضَ لَكَ فِى هٰذَا اللَّيْلِ الْمُتَعَرِّضُونَ،
என் வணக்கத்துக்குரிய நாயனே! தேவையுடையோர் இவ்விரவில் உன்னிடம் தேவைகளைக் கூறவந்துள்ளனர்,

وَقَصَدَكَ الْقاصِدُونَ،
நாட்டம் கொண்டோர் உன்னையே நாடி வந்துள்ளனர்,
وَأَمَّلَ فَضْلَكَ وَمَعْرُوفَكَ الطّالِبُونَ،
உனது அருளினையும் உனது நலவுகளையும் நாடுவோர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்,
وَلَكَ فِى هٰذَا اللَّيْلِ نَفَحاتٌ وَجَوائِزُ وَعَطايا وَمَواهِبُ
இவ்விரவில் அன்பளிப்புக்களும், நற்கூலிகளும், கொடைகளும், அருள்களும் உனக்கே உரியன,
تَمُنُّ بِها عَلَىٰ مَنْ تَشاءُ مِنْ عِبادِكَ،
அவற்றைக் கொண்டு நீ நாடும் உனது அடியார்களுக்கு அருள் புரிகின்றாய்,
وَتَمْنَعُها مَنْ لَمْ تَسْبِقْ لَهُ الْعِنايَةُ مِنْكَ،
இதன் முன்னர் உனது அருளினைப் பெறாதோர் மீது அதனை தடுக்கிறாய்,
وَها أَنَا ذا عُبَيْدُكَ الْفَقِيرُ إِلَيْكَ الْمُؤَمِّلُ فَضْلَكَ وَمَعْرُوفَكَ،
இதோ நான் உனது நலவுகளையும் அருள்களையும் எதிர்பார்த்திருக்கும் ஏழ்மையான , ஓர் சிறு அடியானாவேன்,
فَإِنْ كُنْتَ يَا مَوْلاىَ تَفَضَّلْتَ فِى هٰذِهِ اللَّيْلَةِ عَلَىٰ أَحَدٍ مِنْ خَلْقِكَ
எனவே, என் எஜமானே! இவ்விரவில் உனது படைப்புக்களில் ஒருவருக்கு நீ அருள் புரிந்தால்,
وَعُدْتَ عَلَيْهِ بِعائِدَةٍ مِنْ عَطْفِكَ
உனது அன்பிலிருந்து அவருக்கு கூலி வழங்கினால்,

فَصَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ الْخَيِّرِينَ الْفاضِلِينَ،
அதனால் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் மீதும் பரிசுத்தமான, தூய்மைநிறைந்த, தேர்வுசெய்யப்பட்ட ,சங்கைக்குறிய அவரது குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
وَجُدْ عَلَىَّ بِطَوْلِكَ وَمَعْرُوفِكَ يَا رَبَّ الْعالَمِينَ،
உலகத்தாரின் இரட்சகனே! எனக்கு உன் நலவுகளையும் கொடையினையும் தந்தருள்வாயாக!
وَصَلَّى اللّٰهُ عَلَىٰ مُحَمَّدٍ خاتَمِ النَّبِيِّينَ وَآلِهِ الطَّاهِرِينَ وَسَلَّمَ تَسْلِيماً
இறைவா! இறுதித்தூதரான நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும், பரிசுத்தவான்களாக அவரது குடும்பத்தினர் மீதும் ஸலவாத்தும் நிரந்தரமான ஸலாத்தினையும் கூறுவாயாக!
إِنَّ اللّٰهَ حَمِيدٌ مَجِيدٌ .
நிச்சயமாக அல்லாஹ் புகழுக்குறியவனும், மேலானவனுமாவான்.
اللّٰهُمَّ إِنِّى أَدْعُوكَ كَما أَمَرْتَ
இறைவா! நீ எவ்வாறு உன்னை அழைக்கும் படி கட்டளையிட்டாயோ அவ்வாறே உன்னை நான் அழைக்கின்றேன்,
فَاسْتَجِبْ لِى كَما وَعَدْتَ إِنَّكَ لَاتُخْلِفُ الْمِيعادَ
எனவே, நீ வாக்களித்தது போல் எனது அழைப்புக்கு பதிலளிப்பாயாக! நிச்சயமாக நீ வாக்களித்தால் மாறு செய்பவனில்லை.
இந்த துஆ இரவுத்தொழுகையில் , ஷப்ஃ தொழுகைக்குப் பின்னால் ஓதப் படும் துஆவாகும்.
12. இரவுத் தொழுகையின் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பின்னரும், ஷப்ஃ தொழுகைக்குப் பின்னரும், வித்ர் தொழுகைக்குப் பின்னரும் மேலே கூறப்பட்டுள்ள துஆவினை ஓதவேண்டும்.

13. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கும் சுஜுதுகள் , மற்றும் துஆக்களை ஓதுதல். ஆபான் பின் தஃலப் அவர்கள் இமாம் ஜஃபார் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து இவ்வாறு அறிவிப்புச் செய்கின்றார்: ' நபியவர்கள் ஷஃபான் பிறை 15 இரவில் தனது ஓர் மனைவிக்கு அருகில் இருந்தார்கள், நல்லிரவு வந்ததும் நபியவர்கள் இறை வணக்கத்திற்காக எழுந்தார்கள். நபியவர்களின் மனைவி அவர்கள் போர்வைக்குள் இருந்தவாறு நபியவர்களைத் தேடத் தொடங்கினார்கள். அப்போது நபியவர்கள் சுஜுதுக்குச் சென்றார்கள், அப்போது அவர் ஓர் துணியினைப் போல் மண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். நபியவர்களின் மனைவி , நபியவர்களை நெருங்கிய போது நபியவர்கள் சுஜுதில் இதை ஓதுவதைக் கேட்டார்கள்:
سَجَدَ لَكَ سَوادِي وَخَيالِي،
எனது அனைத்து இருப்பும் சிந்தனையும் உனக்கு தலைசாய்த்து விட்டன.
وَ آمَنَ بِكَ فُؤادِي،
எனது உள்ளம் உன்னை ஈமான் கொண்டுள்ளது.
هٰذِهِ يَدايَ وَمَا جَنَيْتُهُ عَلَىٰ نَفْسِي،
இது தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்ட எனது கைகளாகும.;
يَا عَظِيمُ تُرْجىٰ لِكُلِّ عَظِيمٍ
மகத்தான எச்செயலுக்கும் ஆதரவு கொள்ளப்படும் மகத்தானவனே!
اغْفِرْ لِيَ الْعَظِيمَ فَإِنَّهُ لَايَغْفِرُ الذَّنْبَ الْعَظِيمَ إِلّا الرَّبُّ الْعَظِيمُ
எனது பெரும் பாவங்களை மன்னிப்பாயாக! மகத்துவமிக்க இரட்சகனான உன்னையன்றி எனது மகாபெரிய பாவங்களை எவரும் மன்னிக்கமாட்டார்.
பின்பு அவர் சுஜுதிலிருந்து எழுந்து , மீண்டும் சுஜுதுக்கு சென்றார்கள். அதில் இவ்வாறு ஓதினார்கள்:
أَعُوذُ بِنُورِ وَجْهِكَ الَّذِي أَضاءَتْ لَهُ السَّماواتُ وَالْأَرَضُونَ،
வானங்களையும் பூமிகளையும் பிரகாசிக்க வைக்கும் ஒளியுடையோனாகிய உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
وَانْكَشَفَتْ لَهُ الظُّلُماتُ،
(உனது ஒளிப்பிரவாகத்தினால்) இருள்கள் நீங்கின.

وَصَلَحَ عَلَيْهِ أَمْرُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ مِنْ فُجْأَةِ نَقِمَتِكَ، وَمِنْ تَحْوِيلِ عافِيَتِكَ، وَمِنْ زَوالِ نِعْمَتِكَ
முன்னோர்களினதும் எதிர்காலத்தினரதும் அனைத்து விடயங்களும், திடீரென வரக்கூடிய உனது தண்டனைகளாலும், மாற்றம் பெறும் தேகாரோக்கியத்தாலும் நிலைக்காது நீங்கும் உனது அருள்களாலும் சீராக்கம் பெறுகின்றன.
اللّٰهُمَّ ارْزُقْنِي قَلْباً تَقِيّاً نَقِيّاً وَمِنَ الشِّرْكِ بَرِيئاً لَاكافِراً وَلَا شَقِيّاً
இறைவா! தூய்மையான, இறையச்சமுள்ள உள்ளத்தினையும், இணைவைப்பிலிருந்து தூரமாதலையும் எனக்குத் தருவாயாக! , நன்றிமறந்தவனாகவும், உனது அருளை பெறாதவனாகவும் என்னை ஆக்கிவிடாதே!
பிறகு நபியவர்கள் தனது முகத்தின் இரு புறத்தினையும் மண்ணில் வைத்தார்கள். பிறகு இவ்வாறு கூறினார்கள்:
عَفَّرْتُ وَجْهِي فِي التُّرابِ وَحُقَّ لِي أَنْ أَسْجُدَ لَكَ
எனது முகத்தினை மன்னில் வைத்துள்ளேன், உனக்கு தலைசாய்த்து சுஜுது செய்வது எனக்கு கடமையாகும்.
நபியவர்கள் அங்கிருந்து எழுந்து , படுக்கைக்கு வர தயாராகியதும், நபியவர்களின் மனைவி அவர்கள் மிகவும் வேகமாக படுக்கைக்கு விரைந்தார்கள். நபியவர்கள் அங்கு வரும் போது படுக்கையிலிருந்த மனைவி அவர்களின் மூச்சுவிடும் சத்தத்தின் சத்தத்தினை கேட்டு விட்டு , நபியவர்கள் ' இவ்வாறு மூச்சு விடுவதன் காரணம் என்ன? இன்று என்ன இரவு என்று தெரியுமா? இவ்விரவு ஷஃபான் 15 இரவாகும். இவ்விரவிலே இறையருள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும். மரணம் எப்போது என்றும் எழுதப்படும், மேலும் யார் ஹஜ் செய்வார்கள் என்றும் நிர்ணயிக்கப்படும், மேலும் இறைவன் அதிகமானோரை மன்னிக்கின்றான். மலக்குகள் வானிலிருந்து மக்காவிற்கு வருகின்றனர்'என்றார்கள்.

14. ஜஃபர் தய்யார்(தஸ்பீஹ்) தொழுகையினைத் தொழவேண்டும்:
இத்தொழுகை மிகவும் சிறப்புக்குரிய ஓர் தொழுகையாகும். பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும் தேவைகள் நிறைவேற்றப் படுவதற்கும் இத்தொழுகை பரிந்துரைக்கப்படுகின்றது. இதற்கு தஸ்பீஹ் தொழுகை என்றும் சொல்லப்படும். ஷீஆக்கள் மற்றும் அஹ்லுஸ்சுன்னாக்களின் நூல்களிலும் இத்தொழுகை பற்றி பல அறிவிப்புக்கள் வந்துள்ளன.

இதற்கு இப்பெயர் வரக்காரணம் என்னவெனில், ஹஸ்ரத் ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் எதியோப்பியாவிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்தார்கள்.அவர்கள் அங்கிருந்து மதீனாவிற்கு திரும்பி வந்தார்கள்.அவர்கள் வந்ததினால் நபியவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். நபியவர்கள் அவரது நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு நபியவர்கள் அவரிடம் 'ஜஃபரே! உமக்கு அன்பளிப்புத் தரவா?' எனக்கேட்டார்கள். அவரும் ஆம் இறைத்தூதரே! என்றார்.மக்கள் நபியவர்கள் தங்கம் அல்லது வெள்ளியினைக் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டார்கள்.
நபியவர்கள் கூறினார்கள்: ' உமக்கு கற்றுத் தரும் இந்த விடயத்தினை நீர் ஒவ்வொரு நாளும், அல்லது ஒவ்வொரு மாதத்திலும், அல்லது வருடத்தில் ஒரு முறையாவது செய்வீர்கள் என்றால், இறைவன் உங்களது அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுவான்'. பிறகு நபியவர்கள் இத்தொழுகையை அவருக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

இத்தொழுகையைத் தொழ மிகவும் சிறந்த தினம் வெள்ளிக் கிழமையாகும். இருப்பினும் ஏனைய தினங்களிலும் தொழ முடியும்.

இத்தொழுகை நான்கு ரக்அத்துக்களைக் கொண்டது. இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் சூரா பாத்திகாவிற்குப் பின்னர் சூரா ஜில்ஜாலும், இரண்டாவது ரக்அத்தில் சூரா பாத்திகாவிற்குப் பின் சூரா ஆதியாதும், அடுத்த இரு ரக்அத் தொழுகையில், முதல் ரக்அத்தில் சூரா பாத்திகாவிற்குப் பின் சூரா நஸ்ரையும், இரண்டாம் ரக்அத்தில் சூரா பாத்திஹாவிற்குப் பின் சூரா இக்லாஸையும் ஓத வேண்டும்.

ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திகா, மற்றும் சூராவினை ஓதி முடித்ததும் 15 முறை
سُبْحانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلا إِلٰهَ إِلّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ
எனும் திக்ரை ஓத வேண்டும். பிறகு இதே திக்ரை ருகூவின் திக்ர் முடிவடைந்ததும் 10 முறையும், ருசூவிலிருந்து எழுந்ததும் 10 முறையும், முதலாவது சுஜுதில் அதன் திக்ர் ஓதியதும் 10 முறையும், சுஜுதிலிருந்து எழுந்ததும் நடு இருப்பில் 10 முறையும், இரண்டாம் சுஜுதின் திக்ர் முடிந்ததும் அதில் 10 முறையும், இரண்டாம் சுஜுதிலிருந்து எழுந்ததும் அதில் 10 முறையும், (மொத்தமாக ஒவ்வொரு ரக்அத்திலும் 75 முறை) ஓத வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ரக்அத்திலும் செய்ய வேண்டும். மொத்தமாக 300 தடவை ஓத வேண்டும்.

15. இவ்விரவில் தொழும் படி பல தொழுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம், இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது: 'ஷஃபான் மாதத்தின் பிறை 15வது இரவு வந்துவிட்டால்,இரண்டு இரண்டு ரக்அத்துகளாக, நான்கு ரக்அத் தொழுகையினை தொழுங்கள். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திகாவிற்குப் பின்னர் 100 முறை சூரா இக்லாஸினை ஓதுங்கள். நான்கு ரக்அத் தொழுகையும் முடிந்ததும் இந்த துஆவினை ஓதுங்கள்:
اللّٰهُمَّ إِنِّى إِلَيْكَ فَقِيرٌ، وَمِنْ عَذابِكَ خائِفٌ مُسْتَجِيرٌ
இறைவா! நான் உன்னிடம் தேவையுடையவன், உனது தண்டனைக்கு அஞ்சியவனாக உன்னிடம் அடைக்கலம் தேடுகின்றேன்.
اللّٰهُمَّ لَاتُبَدِّلِ اسْمِى، وَلَا تُغَيِّرْ جِسْمِى،
இறைவா! எனது பெயரை (இறைநம்பிக்கையாளர்களிலிருந்து உன்னை மறுத்துநிற்கும் கூட்டத்திற்கு) மாற்றிவிடாதே! எனது சரீரத்தையும் அவ்வாறே!
وَلَا تَجْهَدْ بَلائِى، وَلَا تُشْمِتْ بِى أَعْدائِى،
எனது சோதனைகளை கடினமாக்கிவிடாதே! , எனது எதிரியை என்னைக் கொண்டு சந்தோஷப் படுத்திவிடாதே!
أَعُوذُ بِعَفْوِكَ مِنْ عِقابِكَ،
உனது தண்டனையிலிருந்து உனது மன்னிப்பைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்.
وَأَعُوذُ بِرَحْمَتِكَ مِنْ عَذابِكَ،
உனது வேதனையிலிருந்து உனது அருளைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்.
وَأَعُوذُ بِرِضاكَ مِنْ سَخَطِكَ،
உனது கோபத்திலிருந்து உனது திருப்பொருத்தத்தினைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்.
وَأَعُوذُ بِكَ مِنْكَ،
உன்னிடமிருந்து உன் மூலமே பாதுகாவல் தேடுகின்றேன்.
جَلَّ ثَناؤُكَ أَنْتَ كَما أَثْنَيْتَ عَلَىٰ نَفْسِكَ وَفَوْقَ مَا يَقُولُ الْقائِلُونَ
நீ உன்னை புகழ்ந்துள்ளது போல் உனது புகழ்ச்சி உயர்வானது, மேலும் உன்னைப் புகழ்வோரின் புகழைவிடவும் நீ மேலானவன்.

 ஷஃபான் பிறை 15 பகல்:
காலத்தின் இமாம் - இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த தினமாகும். இத்தினத்தில் அவரது சிறப்பு பற்றியும், அவரது வரவினை எதிர்பார்த்திருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் முஃமின்களுக்கு மத்தியில் ஞாபகப் படுத்துவது சிறப்புக்குரிய விடயமாகும். அவரது ஷியாரத் என வரப்பட்டுள்ள துஆக்களை ஓதுவது சிறப்புக்குறியதாகும்.

 

 ஷஃபான் மாதத்தின் இறுதி நாட்கள்:

• இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்:
'யார் ஷஃபான் மாதத்தின் இறுதி மூன்று நாட்கள் நோன்பு நோற்று , அதனை ரமழான் மாதத்தோடு இணைக்கின்றாரோ, அவருக்கு இறைவன் இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்ற நன்மைகளை வழங்குகின்றான்'.

• அபூ ஸல்த் ஹரவி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஷஃபான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றிருந்தேன். இமாம் அவர்கள் ' அபா ஸல்த்! ஷஃபான் மாதத்தின் அதிக நாட்கள் கடந்து விட்டன. இன்று ஷஃபான் மாதத்தின் இறுதி வெள்ளியாகும். இம்மாதத்தில் தவறவிட்ட அமல்கள் மற்றும் செய்த தவறுகளை மீதமுள்ள தினங்களில் நிவர்த்தி செய்வீராக! உமக்கு பலனளிக்கும் விடயங்களை செய்! அதிகமாக துஆக் கேள்! பாவமன்னிப்பு , தொழுகைகளில் அதிகமாக ஈடுபடு! அல்குர்ஆனை அதிகமாக ஓதுங்கள்! பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! ரமழான் மாதம் வருகின்ற போது இறைவனுக்காய் உன்னை தூய்மையானவனாக மாற்றியிரு! கடனோ அல்லது அமானிதமோ இருப்பின் அதனை நிறைவேற்றிவிடு! பிறரைப் பற்றி உள்ளத்தில் குரோதம் இருப்பின் அவற்றை அகற்றிவிடு! செய்து வரும் பாவங்களை விட்டு விடு! இறைவனை அஞ்சிக் கொள்! மறைவான, மற்றும் வெளிப்படையான செயல்களில் இறைவனை நம்பு! யார் இறைவனை நம்புகின்றாரோ இறைவன் அவருக்கு போதுமானவன். மீதமுள்ள தினங்களில் இம்மாதத்தில் இந்த துஆவினை ஓதுவீராக! :
اللّٰهُمَّ إِنْ لَمْ تَكُنْ غَفَرْتَ لَنا فِيما مَضَىٰ مِنْ شَعْبانَ فَاغْفِرْ لَنا فِيما بَقِيَ مِنْهُ
இறைவா! ஷஃபானின் கடந்த தினங்களில் எங்களை மன்னிக்கவில்லை எனில், மீதமுள்ள தினங்களில் எங்களை மன்னிப்பாயாக!.
இமாம் அவர்கள் தொடர்ச்சியாக கூறினார்கள்: ' இறைவன் ரமழான் மாதத்தின் கண்ணியத்தினாலும் சிறப்பினாலும் அதிகமான அடியார்களை ஷஃபான் மாதத்தில் நரக நெருப்பிலிந்து விடுவிக்கின்றான்'.
• ஷஃபான் இறுதி இரவில் , அதாவது ரமழான் முதல் இரவில் ஓதும் துஆ:
ஹாரித் பின் முகைரா நழ்ரீ அவர்கள் , இமாம் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஃபான் இறுதி இரவில் இந்த துஆவினை ஓதியதாக அறிவிக்கின்றார்:
اللَّهُمَّ إِنَّ هَذَا الشَّهْرَ الْمُبَارَكَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ
இறைவா! இந்த அருள்மிகு (ரமழான்) மாதத்திலே அல்-குர்ஆன் இறங்கியது.

وَ جُعِلَ هُدًى لِلنَّاسِ وَ بَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَ الْفُرْقَانِ قَدْ حَضَرَ
அதனை மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழிகாட்டுவதற்குறிய ஆதார ஒளியாகவும் மேலும் உண்மையினையும் பொய்யினையும் பகுத்தறிவிக்கும் கருவியாகவும் ஆக்கியுள்ளாய். இதோ அந்த மாதம் வந்துவிட்டது.

فَسَلِّمْنَا فِيهِ وَ سَلِّمْهُ لَنَا وَ تَسَلَّمْهُ مِنَّا فِي يُسْرٍ مِنْكَ وَ عَافِيَةٍ
இந்த மாதத்தில் எங்களை அம்மாதத்திற்கும் அம்மாதத்தினை எங்களுக்கும் சுபிட்சமுள்ளதாக ஆக்குவாயாக! இம்மாதத்தினை எங்களுக்கு சுகபோகமாகவும் இலகுவாகவும் ஆக்கியருள்வாயாக!
يَا مَنْ أَخَذَ الْقَلِيلَ وَ شَكَرَ الْكَثِيرَ اقْبَلْ مِنِّي الْيَسِيرَ
(அடியார்களாகிய) எங்களின் அற்ப வணக்கங்களை ஏற்றுக்கொள்பவனே! அவ்வணக்கங்களுக்கு அதிகமான நற்கூலிகள் வழங்குகின்றவனே! , என்னுடைய இந்த அற்ப வணக்கங்களையும் ஏற்றுக்கொள்வாயாக!.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَجْعَلَ لِي إِلَى كُلِّ خَيْرٍ سَبِيلاً وَ مِنْ كُلِّ مَا لاَ تُحِبُّ مَانِعاً يَا أَرْحَمَ الرَّاحِمِينَ‏
இறைவா! உன்னிடத்தில் வேண்டிநிற்கின்றேன் , அனைத்து நற்காரியங்களையும் எனக்கு காண்பித்துத் தருவாயாக! நீ வெறுக்கின்ற அனைத்து விடயங்களையும் எனக்கு தடுத்துவிடுவாயக! கருணையாளர்களில் மிகக் கருணையுடயவனே!

يَا مَنْ عَفَا عَنِّي وَ عَمَّا خَلَوْتُ بِهِ مِنَ السَّيِّئَاتِ‏
என்னை மன்னித்தவனே! நான் மறைவாகச் செய்த பாவங்களையும் மன்னித்தவனே!

يَا مَنْ لَمْ يُؤَاخِذْنِي بِارْتِكَابِ الْمَعَاصِي عَفْوَكَ عَفْوَكَ عَفْوَكَ يَا كَرِيمُ‏
நான் செய்த பாவங்களுக்காக என்னை தண்டனைக்கு உள்ளாக்காதவனே!
சங்கையாளனே! உன் மன்னிப்பை உன் மன்னிப்பை உன் மன்னிப்பை எனக்கருள்வாயாக!

إِلَهِي وَعَظْتَنِي فَلَمْ أَتَّعِظْ وَ زَجَرْتَنِي عَنْ مَحَارِمِكَ فَلَمْ أَنْزَجِرْ فَمَا عُذْرِي فَاعْفُ عَنِّي يَا كَرِيمُ عَفْوَكَ عَفْوَكَ‏
என்னிறைவா! நீ எனக்கு நல்லுபதேசம் கூறினாய் , நான் அதனை செவிமடுக்கவில்லை. நீ ஹராமாக்கிய விடயங்களை எனக்கு தடுக்கலானாய் ஆனால் , நான் அவற்றை தடுத்துக்கொள்ளவில்லை. நீ என்னை மன்னிப்பதற்கு நான் உன்னிடம் எதனை காரணம் கூறமுடியும்? கொடையாளனே! உனது மன்னிப்பினை உனது மன்னிப்பினை எனக்கருள்வாயாக!.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الرَّاحَةَ عِنْدَ الْمَوْتِ وَ الْعَفْوَ عِنْدَ الْحِسَابِ‏
இறைவா! நான் உன்னிடத்தில் மரணத்தின் பொழுது சௌகரியத்தினையும் கேள்வி கணக்கின் போது மன்னிப்பினையும் வேண்டிநிற்கின்றேன்.
عَظُمَ الذَّنْبُ مِنْ عَبْدِكَ فَلْيَحْسُنِ التَّجَاوُزُ مِنْ عِنْدِكَ‏
உன் அடியானின் பாவங்கள் பெரிதான போதும் அதனை நீ மன்னித்து விடுகிறாயே அதுவே அழகானது.

يَا أَهْلَ التَّقْوَى وَ يَا أَهْلَ الْمَغْفِرَةِ عَفْوَكَ عَفْوَكَ‏
பிறர் அஞ்சுவதற்கும் பிறரை மன்னிப்பதற்கும் உரித்தானவனே! உன் மன்னிப்பை உன் மன்னிப்பினை எனக்கருள்வாயாக!

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ وَ ابْنُ أَمَتِكَ ضَعِيفٌ فَقِيرٌ إِلَى رَحْمَتِكَ‏
இறைவா! நான் உன் அடிமை , உன் அடிமையின் மகனுமாவேன் , உன்னுடைய கருணையினை வேண்டி நிற்கும் பலவீனமான ஏழையாவேன்.

وَ أَنْتَ مُنْزِلُ الْغِنَى وَ الْبَرَكَةِ عَلَى الْعِبَادِ قَاهِرٌ مُقْتَدِرٌ أَحْصَيْتَ أَعْمَالَهُمْ وَ قَسَمْتَ أَرْزَاقَهُمْ‏
நீ உன்னுடைய அடியார்களுக்கு செல்வத்தினையும் பரகத் எனும் அபிவிருத்தியினையும் இறக்குபவனாக இருக்கிறாய்!. (மாத்திரமின்றி) யாவற்றையும் மிகைப்பவனாகவும் சக்தியுள்ளவனாகவும் இருக்கிறாய். அடியார்களின் செயல்களை கணக்கெடுத்து அவர்களுக்கு மத்தியில் உணவினை பிரித்துவழங்கிவிட்டாய்!

وَ جَعَلْتَهُمْ مُخْتَلِفَةً أَلْسِنَتُهُمْ وَ أَلْوَانُهُمْ خَلْقاً مِنْ بَعْدِ خَلْقٍ‏
அவர்களை பல மொழிகள் பேசுபவர்களாகவும் பல வண்ணத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக படைத்தாய்.

وَ لاَ يَعْلَمُ الْعِبَادُ عِلْمَكَ وَ لاَ يَقْدِرُ الْعِبَادُ قَدْرَكَ وَ كُلُّنَا فَقِيرٌ إِلَى رَحْمَتِكَ فَلاَ تَصْرِفْ عَنِّي وَجْهَكَ‏
அடியார்கள் உனது அறிவினை அறியமாட்டார்கள் மேலும் அவர்கள் உனது அந்தஸ்தினை சரியாக புரிந்து கொள்ளவுமாட்டார்கள். ,நாங்கள் அனைவரும் உனது கருணையின் மீது தேவையுடையவர்கள் ஆவோம். எனவே , நீ உனது கொடையினையும் பெருந்தன்மையினையும் என்னைவிட்டு திருப்பிவிடாதே!

 

وَ اجْعَلْنِي مِنْ صَالِحِي خَلْقِكَ فِي الْعَمَلِ وَ الْأَمَلِ وَ الْقَضَاءِ وَ الْقَدَرِ
என்னை உனது படைப்பில் செயலிலும் மேலெண்ணத்திலும் மற்றும் கழா , கத்ரிலும் சிறந்து விளங்கும் நல்லடியார்களில் சேர்த்துவிடுவாயாக!

اللَّهُمَّ أَبْقِنِي خَيْرَ الْبَقَاءِ وَ أَفْنِنِي خَيْرَ الْفَنَاءِ عَلَى مُوَالاَةِ أَوْلِيَائِكَ وَ مُعَادَاةِ أَعْدَائِكَ وَ الرَّغْبَةِ إِلَيْكَ‏
இறைவா! என்னை மிகச்சிறந்த நிலையில் வாழவைப்பாயாக! மரணிப்பதினையும் மிகச் சிறந்த மரணத்தினைத் தருவாயாக! உனது நேசர்களை நேசித்தவனாகவும் உனது எதிரிகளை வெறுத்தவனாகவும் உன்னை அடைவதில் பேராசை உடையவனாகவும் ஆக்கியருள்வாயாக!

وَ الرَّهْبَةِ مِنْكَ وَ الْخُشُوعِ وَ الْوَفَاءِ وَ التَّسْلِيمِ لَكَ وَ التَّصْدِيقِ بِكِتَابِكَ وَ اتِّبَاعِ سُنَّةِ رَسُولِكَ‏
உன் அந்தஸ்திற்கு அஞ்சியவனாகவும் உன் சன்னிதியில் பயந்தவனாகவும் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனாகவும் உன்னிடத்தில் முற்றுமுழுதாக சரணைந்தவனாகவும் உன் வேதத்தினை மெய்ப்பித்தவனாகவும் உன் தூதரின் வழிமுறையினைப் பின்பற்றியவனாகவும்

اللَّهُمَّ مَا كَانَ فِي قَلْبِي مِنْ شَكٍّ أَوْ رِيبَةٍ أَوْ جُحُودٍ أَوْ قُنُوطٍ أَوْ فَرَحٍ أَوْ بَذَخٍ أَوْ بَطَرٍ أَوْ خُيَلاَءَ
இறைவா! என் உள்ளத்திலுள்ள சந்தேகம் , நம்பிக்கையின்மை , வீணான செயல்கள் , கட்டற்ற மகிழ்ச்சி , குழப்பநிலை மற்றும் தற்பெருமை

أَوْ رِيَاءٍ أَوْ سُمْعَةٍ أَوْ شِقَاقٍ أَوْ نِفَاقٍ أَوْ كُفْرٍ أَوْ فُسُوقٍ أَوْ عِصْيَانٍ أَوْ عَظَمَةٍ أَوْ شَيْ‏ءٍ لاَ تُحِبُ‏
முகஸ்துதி , தற்புகழ்ச்சி , விரோதத்தன்மை , நிராகரிப்பு , கேடுசெய்தல் , மாறுசெய்தல் , பெருமிதம் கொள்ளல் , மற்றும் நீ விரும்பாத மற்றய செயல்கள் அனைத்தினையும்

فَأَسْأَلُكَ يَا رَبِّ أَنْ تُبَدِّلَنِي مَكَانَهُ إِيمَاناً بِوَعْدِكَ وَ وَفَاءً بِعَهْدِكَ وَ رِضًا بِقَضَائِكَ‏
இறைவா! என்னைப் படைத்து பரிபாளிப்பவனே! இவ்வனைத்து பண்புகளையும் உன் வாக்குறுதிகளை நம்பிக்கை கொண்டதாகவும் உன் உடன்படிக்கைகளுக்கு மாறுசெய்யாமலும் உனது தீர்ப்பினை பொருந்திக்கொண்டதாகவும்

وَ زُهْداً فِي الدُّنْيَا وَ رَغْبَةً فِيمَا عِنْدَكَ وَ أَثَرَةً وَ طُمَأْنِينَةً وَ تَوْبَةً نَصُوحاً أَسْأَلُكَ ذَلِكَ يَا رَبَّ الْعَالَمِينَ‏
உலகத்தில் பற்றற்ற தன்மையினையும் , உன்னிடத்தில் உள்ளவற்றின் மீது அடங்கா விருப்பும் , அறிவும் யதார்த்தமும் , குழப்பமற்ற நிலையும் , கலப்பற்ற பாவமன்னிப்பு ஆகியவற்றை பதிலீடாக்கித்தர உன்னிடம் வேண்டிநிற்கின்றேன் , உலகத்தாரை படைத்து பரிபாளிக்கும் நாயகனே!

إِلَهِي أَنْتَ مِنْ حِلْمِكَ تُعْصَى وَ مِنْ كَرَمِكَ وَ جُودِكَ تُطَاعُ فَكَأَنَّكَ لَمْ تُعْصَ (تَرَ)
என்னிறைவா! உன்னுடைய பொறுமையின் காரணமாக பாவம் இழைக்கப்படுகிறாய் , உனது கொடையினாலும் அருளினாலும் வணங்கப்படுகின்றாய். உனக்கு யாரும் மாறுசெய்யவில்லை என்பதைப்போல் (கண்டுகொள்ளாமல்) இருக்கிறாய்.

وَ أَنَا وَ مَنْ لَمْ يَعْصِكَ سُكَّانُ أَرْضِكَ فَكُنْ عَلَيْنَا بِالْفَضْلِ جَوَاداً وَ بِالْخَيْرِ عَوَّاداً يَا أَرْحَمَ الرَّاحِمِينَ‏
கருணையாளனுக்கெல்லாம் கருணையாளனே! நானும் மற்றும் யாரெல்லாம் மாறுசெய்யவில்லையோ நாங்கள் அனைவரும் உனது பூமியில் வசிப்பவர்கள் ஆவோம். எங்கள் மீது உன் அருளினையும் கொடையினையும் வழங்குவாயாக! நலவுசெய்வதையே நிரந்தரமாகக் கொண்டவனே ! எங்களுக்கும் நல்லது செய்வாயாக!

وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ صَلاَةً دَائِمَةً لاَ تُحْصَى وَ لاَ تُعَدُّ وَ لاَ يَقْدِرُ قَدْرَهَا غَيْرُكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ‏
கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே! உனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நிலையான சாந்தியினை வழங்குபவனே , உன்னையன்றி யாரும் அதன் அந்தஸ்தினையும் எண்ணிக்கையினையும் அறியமாட்டார்.

 

 

Publications